வேதிகா பரணில் எதையோ வைக்கப் போனாள்.‘‘என்னடீ வைக்கப் போறே?’’ என்றாள் அம்மா தேவிகா.‘‘யோகா செய்ய நான் யூஸ் பண்ற பாயை அங்கே வைக்கப் போறேன்’’ என்றாள் மகள் வேதிகா.‘‘பரண்ல போய் யாராவது யோகா பண்ணுவாங்களா? இடுப்பு பிடிச்சுக்கும்டீ.’’‘‘அம்மா.... உளறாதே! பரண் முழுக்க பழைய சாமான்களா கிடக்கு.’’‘‘பரண்ணா அப்படித்தான் இருக்கும். பரண் என்ன ஷோகேஸா? பரண் மேல ஒரு முக்காலி இருக்குதான்னு பாரு.’’‘‘முக்காலியா? அப்படின்னா என்ன?’’‘‘மூணு கால் இருக்கிற ஸ்டூல்டீ.’’‘‘நாற்காலில ஒரு கால்உடைஞ்சிருக்குமா?’’‘‘அசடே! அதுக்கு மொத்தமே மூணு கால்தான். பிறவியிலேயே அப்படித்தான். அதை கீழே இறக்கு.’’வேதிகா, முக்காலி ஒன்றை கீழே இறக்கினாள்.‘‘பார்த்தியா... எவ்வளவு அழகா இருக்கு! அந்தக் காலத்துல நம்ம வீட்ல முக்காலி, நாற்காலி எல்லாம் இருந்தது. ஒரு ஆறுகாலி டேபிள்கூட இருந்தது. அவ்வளவு ஏன்? ஒரு ஓடுகாலிகூட இருந்தா. அத்தைப் பொண்ணு அம்சவேணி அடுத்த வீட்டுப் பையனோட ஓடிப் போயிட்டா.’’‘‘இந்தப் பழைய சாமான் எல்லாத்தையும் தூக்கிப் போட்டுடலாம். முதல்ல இந்த முக்காபுலா.’’‘‘முக்காபுலா இல்லேடீ. முக்காலி. அது வீட்லயே இருக்கட்டும். நான் அதுல உட்கார்ந்துப்பேன்.’’‘‘அதுல உன்னோட ஒரு போர்ஷன்தான் உக்காரும். சர்க்கஸ்ல யானை உக்கார்ந்த மாதிரி இருக்கும். இது நமக்கு வேணாம்.’’‘‘தூக்கிப் போடாதேடீ. ஆகி வந்த முக்காலி. இதுல உட்கார்ந்துதான் பாட்டி தலைக்கு எண்ணெய் வைச்சிப்பா. ஒரு டபரா எண்ணெயை காதுல ஊத்திப்பா.’’‘‘அதனாலதான் டமாரச் செவிடு ஆனாங்க.’’.‘‘பரண் மேல ஒரு கும்மட்டி அடுப்பு இருக்கணும். முறுக்குப் பிழியற நாழிக்கூட இருக்கணுமே?’’‘‘எல்லாத்தையும் தூக்கி எறியப் போறேன். நீ கடைசியா எப்போ முறுக்கு சுட்டே?’’‘‘கடைசியாவா? நான் இதுவரை ஒரு தடவைக்கூட முறுக்கு சுட்டதே இல்லேடீ.’’‘‘அப்புறம் அது எதுக்கு? அதுல அஞ்சு தட்டு வேற இருக்கு. எல்லாமே ஓட்டை. அந்த ஓட்டைத் தட்டையும் தூக்கிப் போடு.’’‘‘பாவி. அந்த ஓட்டைலதான் முள்ளு முறுக்கும் ரிப்பன் பக்கோடாவும் வரும். என்னோட அம்மா ரிப்பன் பக்கோடா செஞ்சா அவ்வளவு மிருதுவா இருக்கும். அப்படியே தலைல ரிப்பன் மாதிரி வைச்சிக்கலாம்.’’‘‘வாய்ல வைக்க முடியாதுன்னு சொல்ல வர்றே... அப்படித்தானே? நீயோ எதையுமே உபயோகிக்கறதில்லே. வீட்ல எதுக்கு வைச்சிருக்கணும்? ஒரே வாரத்துல எல்லாத்தையும் தூக்கிக் கடாசப் போறேன்.’’‘‘என் கண் முன்னால எதையும் விட்டெறியாதே. நான் அடுத்த வாரம் நம்ம ஊருக்குப் போறேன். அப்போ விலைக்குப் போடு.’’பத்து நாட்கள் கழித்து ஊரிலிருந்து வீடு திரும்பினாள் தேவிகா.‘‘அம்மா... பழைய சாமான்கள் எல்லாத்தையும் விலைக்குப் போட்டுட்டேன். ஆமா... அது என்ன இவ்வளவு பெரிய மூட்டை?’’‘‘பித்தளை பாய்லர்டீ. பாத்ரூம்ல சுடு தண்ணீ வைச்சிக்கலாம். ஊர்ல இருந்ததுன்னு தூக்கிட்டு வந்தேன்.’’(அரட்டை தொடரும்) - நந்து சுந்து