மேஷம்சூரியன் 16ஆம் தேதி வரையும், புதன் 23-ஆம் தேதி வரையும் நன்மை தருவார்கள். சுக்கிரன், சனியின் நற்பலன்களும் தொடரும். பக்தி உயர்வு மேம்படும். பெரியோர்களின் ஆதரவும் ஆலோசனையும் கிடைக்கும். சிநேகிதிகள் உதவிகரமாக இருப்பர். வேலைக்குச் செல்லும் பெண்களுக்கு பதவி உயர்வு கிடைக்கும். சுயதொழில் செய்யும் பெண்களுக்கு லாபம் சிறப்பாக இருக்கும். தொழில்ரீதியாக வெளியூர் பயணம் ஏற்படலாம். உடல் நலம் சிறப்படையும்.வழிபாடு: நவகிரகங்களில் ராகு-கேதுவுக்கு சிறப்பு அர்ச்சனை செய்யலாம். ரிஷபம்இந்தக் காலகட்டத்தில் சூரியன் 17ஆம் தேதியும் புதன் 24ஆம் தேதியும் சாதகமான இடத்திற்கு வந்து நற்பலனை தருவர். தவிர, சுக்கிரன், கேதுவின் நன்மைகளும் தொடரும். தனியார் துறையில் வேலை பார்க்கும் பெண்களுக்கு நிம்மதி கிடைக்கும். சுயதொழில் செய்யும் பெண்களுக்கு பகைவர்கள் வகையில் இருந்து வந்த இடையூறுகள் 23ஆம் தேதிக்குப் பிறகு மறையும். கண் தொடர்பான உபாதைகள் 16ஆம் தேதிக்குப் பிறகு மறையும்.வழிபாடு: குரு ஸ்தானத்தில் உள்ளவர்களுக்கு காணிக்கை செலுத்துங்கள். மிதுனம்செவ்வாய், குரு, சுக்கிரன், ராகு ஆகியோர் நற்பலனை கொடுப்பார்கள். புதிய வீடு, வாகனம் வாங்க யோகம் கூடி வரும். கணவன்-மனைவி இடையே அன்பு பெருகும். உத்தியோகத்தில் உள்ளவர்களுக்கு சுக்கிரனால் பதவி உயர்வு கிடைக்கும். ஆன்மிகம் சம்பந்தப்பட்ட மற்றும் பூஜை பொருள்கள் வியாபாரம் செய்பவர்கள் அதிக லாபத்தைப் பெறுவர். அலைச்சல், சோர்வு, வயிறு தொடர்பான உபாதைகள் 16ஆம் தேதிக்குப் பிறகு இருக்காது.வழிபாடு: புதனன்று குலதெய்வத்தை வழிபட்டு, பசுவுக்கு பசுந்தழைப் போடுங்கள். கடகம்இந்தக் காலகட்டத்தில் சுக்கிரனால் அரசு வகையில் அனுகூலம் ஏற்படும். பொருளாதார வளம் இருக்கும். மதிப்பு, மரியாதை கூடும். புதனால் வீட்டினுள் இருந்த பிரச்னைகள், உறவினர்கள் வகையில் ஏற்பட்ட மனக்கிலேசம், பொருள் இழப்பு முதலியன 23ஆம் தேதிக்குப் பிறகு மறையும். அரசு ஊழியர்களின் கோரிக்கைகள் நிறைவேறும். சுயதொழில் செய்யும் பெண்களுக்கு அரசின் சலுகைகள் கிடைக்கும். உடல்நலம் சுமாராக இருக்கும்.வழிபாடு: மாற்றுத்திறனாளி களுக்கு உங்களால் இயன்ற உதவிகளைச் செய்யுங்கள். சிம்மம்சூரியன் 16ஆம் தேதி வரை நற்பலனை தருவார். தவிர, குரு, சுக்கிரன், கேது ஆகியோரின் நன்மைகளும் தொடரும். மதிப்பு, மரியாதை அதிகரிக்கும். அரசின் உதவிகள் கிடைக்கும். அரசு வேலையில் இருக்கும் பெண்களுக்கு மேலதிகாரிகளின் ஆதரவு கிடைக்கும். சுயதொழில் செய்யும் பெண்களுக்கு புதிய தொழில் அனுகூலத்தைக் கொடுக்கும். தங்கள் உடல் நலத்தில் அக்கறை காட்ட வேண்டியது அவசியம்.வழிபாடு: சனிக்கிழமைகளில் சனீஸ்வரனுக்கு நல்லெண்ணெய் தீபம் ஏற்றி வழிபடுங்கள்..கன்னிஇந்தக் காலகட்டத்தில் சூரியனும் சனியும் தொடர்ந்து நன்மை தருவார்கள். புதனும் 23ஆம் தேதி வரை நற்பலனை தருவார். பணப்புழக்கம் சிறப்பாக இருக்கும். கணவரின் அன்பு கிடைக்கும். உத்தியோகத்தில் இருக்கும் பெண்களுக்கு மேலதிகாரிகளின் ஆதரவும் ஆலோசனனையும் கிடைக்கும். வியாபாரம் செய்யும் பெண்களுக்கு தொழிலில் லாபம் அதிகரிக்கும். பித்தம், மயக்கம் போன்ற உபாதைகள் 16ஆம் தேதிக்குப் பிறகு பூரணமாக குணமடையும்.வழிபாடு: கேதுவுக்கு அர்ச்சனை செய்யுங்கள். துலாம் சூரியன் 17ஆம் தேதி சாதகமான இடத்திற்கு வந்து நற்பலனை தருவார். தவிர, செவ்வாய், புதன், குரு, சுக்கிரன் ஆகியோரும் நற்பலனை தருவார்கள். தம்பதியரிடையே ஒற்றுமை மேம்படும். உறவினர்கள் உதவிகரமாக இருப்பர். வேலைக்குச் செல்லும் பெண்கள் சிறப்பான நிலையை அடைவர். சுயதொழில் செய்யும் பெண்கள் பகைவர்களின் இடையூறுகளை உடைத்தெறிவர். புதிய வியாபாரம் அனுகூலத்தைக் கொடுக்கும். உடல் ஆரோக்கியம் மேம்படும்.வழிபாடு: பைரவருக்கு பூஜை செய்யலாம். துர்க்கை வழிபாடும் நடத்தலாம். விருச்சிகம்இந்தக் காலகட்டத்தில் ராகுவின் நன்மைகள் தொடரும். தவிர, புதனும் 24ஆம் தேதி சாதகமான இடத்திற்கு வந்து நற்பலனை தருவார். உங்கள் ஆற்றல் மேம்படும். சகோதரிகளால் பண உதவி கிடைக்கும். வேலைக்குச் செல்லும் பெண்களின் திறமைக்கேற்ற பொறுப்பு கிடைக்கும். வியாபாரம் செய்பவர்களுக்கு அரசு வகையில் இருந்து வந்த அனுகூலமற்ற போக்கு 16ஆம் தேதிக்குப் பிறகு மறையும். உஷ்ணம், தோல் தொடர்பான நோய்கள் வரலாம்.வழிபாடு: ஞாயிற்றுக்கிழமைகளில் ஏழைகளுக்கு கோதுமை தானம் செய்யலாம். தனுசுகுரு, சுக்கிரன், புதன், சனி, கேது ஆகியோர் நன்மை தருவார்கள். சகோதரர்கள் மிகவும் ஆதரவுடன் இருப்பர். பிள்ளைகளால் மகிழ்ச்சியும் பெருமையும் கிடைக்கும். வேலைக்குச் செல்லும் பெண்களுக்கு வேலைப்பளு குறையும். வியாபாரம் செய்யும் பெண்களுக்கு தொழிலில் இருந்த இடர்பாடுகள், சூரியனால் ஏற்பட்ட அவப்பெயர், அலைச்சல், சோர்வு, வயிறு தொடர்பான உபாதைகள் முதலியன 16ஆம் தேதிக்குப் பிறகு இருக்காது.வழிபாடு: செவ்வாயன்று முருகனை வழிபட்டு, துவரை தானம் செய்யலாம். மகரம்இந்தக் காலகட்டத்தில் சூரியன் 17ஆம் தேதி சாதகமற்ற இடத்திற்குச் செல்கிறார். ஆனால், புதன், 24ஆம் தேதி சாதகமான இடத்திற்கு வந்து நற்பலனை தருவார். தவிர, சுக்கிரனும் சிறப்பான பலனை தருவார். சகோதரிகள் அனுசரணையுடன் இருப்பர். உத்தியோகத்தில் உள்ளவர்களுக்கு பொறுமையும் நிதானமும் தேவை. சுயதொழில் செய்யும் பெண்களுக்கு பங்கு வர்த்தகம் நல்ல லாபத்தைத் தரும். உடல் ஆரோக்கியம் மேம்படும்.வழிபாடு: ஏழைகளுக்கும் சன்னியாசிகளுக்கும் இயன்ற உதவிகளைச் செய்யுங்கள். கும்பம்சூரியன் 17ஆம் தேதி சாதகமான இடத்திற்கு வந்து நற்பலனை தருவார். தவிர, புதனும் ராகுவும் நன்மை தருவார்கள். பணப்புழக்கம் அதிகரித்து, தேவைகள் பூர்த்தியாகும்.திருமணம் போன்ற சுபநிகழ்ச்சிகள் நடைபெறலாம். உத்தியோகத்தில் இருக்கும் பெண்களுக்கு பதவி உயர்வு கிடைக்கும். வியாபாரம் செய்யும் பெண்களுக்கு எதிரிகளால் இருந்து வந்த முட்டுக்கட்டைகள் 16ஆம் தேதிக்குப் பிறகு விலகும். உடல் ஆரோக்கியம் மேம்படும்.வழிபாடு: முருகன் கோயிலுக்குச் சென்று வந்தால், மனதில் புது தெம்பு கிடைக்கும். மீனம்செவ்வாயும் குருவும் நன்மை தருவார்கள். தவிர, புதனும் 24ஆம் தேதி சாதகமான இடத்திற்கு வந்து நற்பலன்களை தருவார். ஆபரணங்கள் வாங்கலாம். தனியார் துறையில் வேலை பார்க்கும் பெண்களில் வேலை நிமித்தமாக குடும்பத்தை விட்டு பிரிந்து சென்றவர்கள் ஒன்று சேருவர். தங்கம், வெள்ளி, வைர நகைகள் வியாபாரம் செய்பவர்கள் நல்ல வருமானத்தைப் பெறுவர். வாயு தொடர்பான உபாதைகள் சிலருக்கு வரலாம்.வழிபாடு: சுக்கிரனுக்கு வெண்பட்டு சாற்றி, பால் பாயசம் வைத்து வணங்கலாம்.- பண்டித காழியூர் நாராயணன்