-பண்டித காழியூர் நாராயணன்துலாம்சாதகமற்ற இடத்திற்கு 28ஆம் தேதி புதன்பகவான் செல்கிறார். சுக்கிரன், 1ஆம் தேதி சாதமான இடத்துக்கு வந்து நற்பலனை கொடுப்பார். தவிர, குருவும் நன்மைகள் தருவார். சுபநிகழ்ச்சிகள் கைகூடும். தனியார் துறையில் வேலை பார்க்கும் பெண்களுக்கு சூரியனால் பொருள் விரையம் ஏற்படும். சிலருக்கு இடமாற்றம் வர வாய்ப்பு உண்டு. சுயதொழில் செய்யும் பெண்களுக்கு தொழிலில் லாபம் அதிகரிக்கும். உடல்நலம் சீராக இருக்கும்.வழிபாடு: ஞாயிற்றுக் கிழமைகளில் ஏழைகளுக்கு கோதுமை தானம் செய்யலாம்..விருச்சிகம்சுக்கிரன் 30ஆம் தேதி வரை நற்பலனை கொடுப்பார். சூரியன், செவ்வாய், புதன், சனி, ராகு ஆகியோர் நன்மை தருவார்கள்.உங்கள் முயற்சிகளில் வெற்றி கிடைக்கும். மதிப்பு, மரியாதை அதிகரிக்கும். தனியார் துறையில் வேலை பார்க்கும் பெண்களுக்கு சக பெண் ஊழியர்களின் உதவிகள் கிடைக்கும். சுயதொழில் செய்யும் பெண்களுக்கு அரசின் சலுகைகளும் வங்கிக் கடனும் எளிதாக கிடைக்கும். உடல் உபாதைகள் பூரணமாக குணமடையும்.வழிபாடு: வெள்ளிக் கிழமைகளில் சுக்கிரனுக்கு அர்ச்சனை செய்யுங்கள்..தனுசுகுரு, கேது, சுக்கிரன் ஆகியோர் நற்பலனை கொடுப்பார்கள். புதனும் 28ஆம் தேதிக்குப் பிறகு நற்பலனை கொடுப்பார். உங்கள் முயற்சிகளில் இருந்து வந்த தடைகள் அகன்று, காரிய அனுகூலம் ஏற்படும். வேலைக்குச் செல்லும் பெண்களுக்கு பணியில் இனி தொய்வு இருக்காது. வியாபாரம் செய்யும் பெண்களுக்கு பழைய கடன்கள் அடைபடும். திடீர் பண வரவுக்கு வாய்ப்பு உண்டு. உடல் நலம் சிறப்படையும்.வழிபாடு: சனி பகவானுக்கு அர்ச்சனை செய்யுங்கள். காக்கைக்கு அன்னமிட்டு உண்ணுங்கள்..மகரம்இந்தக் காலகட்டத்தில் புதன் 27ஆம் தேதி வரை சிம்மத்தில் நின்று நற்பலனை கொடுப்பார். சுக்கிரனும் 1ஆம் தேதி சிம்மத்திற்கு வந்து நற்பலனை தருவார். காரிய அனுகூலம் ஏற்படும். புதனால் உங்கள் முயற்சிகளில் வெற்றி கிடைக்கும். தனியார் துறையில் வேலை பார்க்கும் பெண்கள், புதனின் பலத்தால் பதவி உயர்வு காண்பர். சுயதொழில் செய்யும் பெண்களுக்கு சிறப்பான லாபம் கிடைக்கும். உஷ்ணம், தோல் தொடர்பான நோய்கள் வரலாம்.வழிபாடு: செவ்வாய்க் கிழமைகளில் ஏழைகளுக்கு துவரை தானம் செய்யலாம்..கும்பம்ராகு நன்மை தருவார். புதனும் 28ஆம் தேதி சாதகமான இடத்துக்கு வந்து நற்பலனை கொடுப்பார். உங்கள் முயற்சிகளில் வெற்றி கிடைக்கும். கணவன் - மனைவி இடையே இருந்து வந்த பிரச்னைகள் மறையும். தனியார் துறையில் வேலை பார்க்கும் பெண்களின் உழைப்புக்குத் தகுந்த அங்கீகாரம் கிடைக்கும். சுயதொழில் செய்யும் பெண்களுக்கு எதிர்பாராத வகையில் பண வரவு இருக்கும். பித்தம், மயக்கம், சளி போன்ற உபாதைகள் வரலாம்.வழிபாடு: தினமும் சூரிய தரிசனம் செய்யுங்கள். துர்க்கை வழிபாடு நடத்துங்கள்..மீனம்குருவும் சனியும் இந்தக் காலகட்டத்தில் சாதகமான இடத்தில் இருக்கிறார்கள். தவிர, புதன் 27ஆம் தேதி வரையிலும் சுக்கிரன் 30ஆம் தேதி வரையிலும் சாதகமாக நின்று நற்பலனை கொடுப்பார்கள். தனியார் துறையில் வேலை பார்க்கும் பெண்கள், வேலையில் திருப்தி காணலாம். சுயதொழில் செய்யும் பெண்கள் வீண் விவாதங்களை தவிர்க்கவும். சிலருக்கு வயிறு தொடர்பான உபாதைகள் வரலாம்.வழிபாடு: சூரியனை வழிபடுங்கள். வெள்ளியன்று சுக்கிரனுக்கு அர்ச்சனை செய்யுங்கள்.