மேஷம்இந்தக் காலகட்டத்தில் சுக்கிரன் 31-ம் தேதி ரிஷபத்தில் இருந்து மிதுனத்துக்கு மாறினாலும் தொடர்ந்து நற்பலனை கொடுப்பார். குடும்பத்தில் மகிழ்ச்சி அதிகரிக்கும். கணவன்-மனைவியிடையே அன்பு பெருகும். சகோதரர்களால் பண உதவி கிடைக்கும். தனியார் துறையில் வேலை பார்க்கும் பெண்களுக்குப் பொறுமையும் நிதானமும் தேவை. வியாபாரம் செய்யும் பெண்கள் நல்ல வருமானத்தைப் பெறுவர். கண் தொடர்பான உபாதைகள் வரலாம்.வழிபாடு: புதனன்று குலதெய்வத்தை வணங்கி, பாசிப்பயறு தானம் செய்யுங்கள். ரிஷபம்செவ்வாய், சுக்கிரனால் பக்தி உயர்வு மேம்படும். எடுத்த காரியத்தில் வெற்றி காணலாம். பொருளாதார வளம் மேம்படும். குடும்பத்தாரின் அன்பு கிடைக்கும். உத்தியோகத்தில் உள்ளவர்கள் மேன்மை காண்பர். அரசு ஊழியர்களின் கோரிக்கைகள் நிறைவேறும். ஆன்மிகம் சம்பந்தப்பட்ட மற்றும் பூஜை பொருள்கள் வியாபாரம் செய்பவர்கள் அதிக லாபத்தைப் பெறுவர். சூரியனால் அலைச்சலும் சோர்வும் ஏற்படும். உடல்நலம் சிறப்படையும்.வழிபாடு: தினமும் காலையில் சூரிய தரிசனம் செய்து வந்தால் மன நிம்மதி அதிகரிக்கும். மிதுனம்புதன், குரு, சுக்கிரன், ராகு ஆகியோர் நற்பலனை கொடுப்பார்கள். பொருளாதார வளம் மேம்படும். எடுத்த காரியம் வெற்றியடையும். சகோதரிகள் மிகவும் ஆதரவுடன் இருப்பர். விருந்து, விழா என சென்றுவருவீர்கள். உத்தியோகத்தில் உள்ளவர்களுக்கு மேலதிகாரிகளின் கருணை பார்வை கிடைக்கும். சுயதொழில் செய்யும் பெண்களுக்கு வாடிக்கையாளர் மத்தியில் அனுகூலமான போக்குக் காணப்படும். உடல்நலம் மேம்படும்.வழிபாடு: செவ்வாயன்று முருகனை வழிபட்டு சிவப்பு ஆடையை தானம் செய்யலாம். கடகம்இந்தக் காலகட்டத்தில் சூரியனும் புதனும் நற்பலனை கொடுப்பார்கள். சகோதரிகள் மூலம் பண உதவி கிடைக்கும். சகோதரர்களால் மேன்மை கிடைக்கும். சூரியன், புதனால் அரசின் உதவிகள் கிடைக்கும். அரசு வேலையில் இருப்பவர்களின் கோரிக்கைகள் நிறைவேறும். சுயதொழில் செய்யும் பெண்களுக்கு வங்கிக் கடன் எளிதாகக் கிடைக்கும். உடல் உபாதைகள் அனைத்தும் பூரணமாகக் குணமடையும்.வழிபாடு: சனிக்கிழமைகளில் பெருமாள் கோயிலுக்குச் சென்று தரிசனம் செய்யுங்கள். சிம்மம்சூரியன், சுக்கிரன், குரு, கேது ஆகியோர் முன்னேற்றம் தருவார்கள். உங்களை புரிந்து கொள்ளாமல் இருந்தவர்கள் உங்கள் மேன்மையை அறிந்து சரணடையும் நிலை வரலாம். தடைபட்டு வந்த திருமணம் நடக்க வாய்ப்பு உண்டு. உத்தியோகத்தில் இருக்கும் பெண்களுக்கு சக ஊழியர்கள் மிகவும் ஆதரவுடன் இருப்பர். ஆன்மிகம் சம்பந்தப்பட்ட மற்றும் பூஜை பொருள்கள் வியாபாரம் செய்பவர்கள் அதிக லாபத்தைப் பெறுவர். உடல்நலம் சிறப்பாக இருக்கும்.வழிபாடு: ராகு பகவானுக்கு மந்தாரை மலர்களால் அர்ச்சனை செய்யுங்கள். கன்னிஇந்தக் காலகட்டத்தில் செவ்வாய், புதன், சனி ஆகியோர் நற்பலனை கொடுப்பார்கள். பகைவர்களின் சதியை முறியடிக்கும் வல்லமையை பெறுவீர்கள். பிள்ளைகளால் மகிழ்ச்சியும் பெருமையும் கிடைக்கும். உத்தியோகத்தில் இருக்கும் பெண்களுக்கு பணவிரயம் குறையும். வியாபாரம் செய்யும் பெண்களுக்கு ஆண்கள் வகையில் இருந்த தொல்லைகள் அடியோடு மறையும். உடல் நலம் சீராக இருக்கும்.வழிபாடு: தினமும் காலையில் சூரியனை வழிபடுங்கள். பைரவருக்கு பூஜை செய்யலாம். துலாம்குருவும் சுக்கிரனும் நற்பலனை கொடுப்பார்கள். சுக்கிரனால் மகிழ்ச்சியும் நற்சுகமும் கிடைக்கும். சகோதரிகள் மிகவும் ஆதரவுடன் இருப்பர். திருமணமாகாமல் இருக்கும் பெண்களுக்குத் திருமணம் கைகூடும். அரசு வேலையில் இருப்பவர்கள் தங்கள் பணியை அதிக அக்கறையுடன் செய்யவும். வியாபாரம் செய்யும் பெண்கள் வரவு-செலவு கணக்கை சரியாக வைத்துக்கொள்ளவும். பயணத்தின்போது கவனம் தேவை.வழிபாடு: புதனன்று குலதெய்வத்தை வணங்கி, பாசிப்பயறு தானம் செய்யலாம். .விருச்சிகம்இந்தக் காலகட்டத்தில் புதன், சுக்கிரன், ராகு ஆகியோரால் முன்னேற்றம் உண்டு. எந்தப் பிரச்னையையும் முறியடித்து வெற்றிக்கு வழி காணலாம். கணவன்-மனைவியிடையே இருந்து வந்த பிரச்னைகள் மறையும். வேலைக்குச் செல்லும் பெண்களுக்கு சக ஊழியர்கள் உதவிகரமாக இருப்பர். வியாபாரம் செய்யும் பெண்கள் நல்ல வருமானத்தைப் பெறுவர். வாயு உபாதைகள் வரலாம்.வழிபாடு: துர்க்கை வழிபாடு நடத்துங்கள். ஏழைகளுக்கு மொச்சை தானம் செய்யுங்கள்.தனுசுசூரியன், குரு, சனி, கேது ஆகியோர் நற்பலனை கொடுப்பார்கள். எதிரிகளால் இருந்துவந்த முட்டுக்கட்டைகள் விலகும். நீண்ட நாட்களாகத் தடைப்பட்டு வந்த திருமணம் கைகூடும். சகோதரிகளால் மேன்மை கிடைக்கும். உத்தியோகத்தில் இருக்கும் பெண்கள் விரும்பிய இடத்துக்கு மாற்றம் பெறலாம். சுயதொழில் செய்யும் பெண்களுக்கு வீண் அலைச்சல் ஏற்படும். புதிய வியாபாரம் ஓரளவு அனுகூலத்தைத் தரும். உடல் ஆரோக்கியம் மேம்படும்.வழிபாடு: வெள்ளியன்று சுக்கிரனுக்கு அர்ச்சனை செய்யுங்கள். மகரம்இந்தக் காலகட்டத்தில் புதன் சாதகமாக இருப்பதால் நீங்கள் முன்னேற்றம் காணலாம். பொருள் சேரும். குடும்பத்தில் மகிழ்ச்சி அதிகரிக்கும். கணவன்-மனைவி ஒருவருக்கொருவர் விட்டுக் கொடுத்து போகவும். வேலைக்குச் செல்லும் பெண்களுக்குப் பதவி உயர்வு கிடைக்கும். சுயதொழில் செய்யும் பெண்களுக்கு அதிக லாபம் கிடைக்கும். மறைமுக பகைவர்களால் அவ்வப்போது இடையூறுகள் ஏற்படலாம். உஷ்ணம், தோல் தொடர்பான உபாதைகள் சிலருக்கு வரலாம்.வழிபாடு: சனியன்று பெருமாள் மற்றும் ஆஞ்சநேயரை வழிபடுங்கள்.கும்பம்செவ்வாய், சுக்கிரன், ராகு ஆகியோர் அனுகூலமான பலன்களை தருவார்கள். புதிய வீடு, மனை, வாகனம் வாங்க அனுகூலம் உண்டு. சுக்கிரனால் பெரியோர்களின் ஆதரவும் ஆலோசனையும் கிடைக்கும். புனித ஸ்தலங்களுக்குச் சென்று வருவீர்கள். வேலைக்குச் செல்லும் பெண்களின் திறமைக்கேற்ற அங்கீகாரம் கிடைக்கும். வியாபாரம் செய்யும் பெண்களுக்குப் பழைய கடன்கள் அடைபடும். உடல்நலம் சிறப்படையும்.வழிபாடு: கேது சாதகமற்ற இடத்தில் இருப்பதால், அவருக்கு அர்ச்சனை செய்யுங்கள். மீனம்இந்தக் காலகட்டத்தில் சூரியன், சுக்கிரன், குரு ஆகியோரால் முன்னேற்றம் கிடைக்கும். குருவால் பண வரவு அதிகரிக்கும். சூரியன், சுக்கிரனால் செல்வாக்கு மேம்படும். உறவினர்களிடம் சுமூக நிலை ஏற்படும். உத்தியோகத்தில் இருக்கும் பெண்களின் கோரிக்கைகள் நிறைவேறும். சுயதொழில் செய்யும் பெண்களுக்குப் பகைவர்கள் வகையில் இருந்து வந்த இடையூறுகள் மறையும். உடல் ஆரோக்கியம் மேம்படும்.வழிபாடு: தினமும் மாலையில் வீட்டில் விளக்கு ஏற்றி, காளியை வழிபடுங்கள்.