Snegiti
ஒற்றை குழந்தை வைத்திருக்கும் பெற்றோரா நீங்கள்?
அந்தக் காலத்தில் பதினாறு பிள்ளைகள் இருந்த வீடுகளில்கூட, பிள்ளைகள் மனநல பாதிப்புகள் இல்லாமல் நல்ல முறையில் வளர்ந்தனர். ஆனால், இன்று ஒரே ஒரு பிள்ளையை வளர்ப்பதற்குள் பெற்றோர் படும்பாடு சொல்லி மாளாது. குழந்தை ஒற்றை ஆளாக வளரும்போது, பிடிவாதம், கோபம், மற்றவர்களோடு இணைந்து செயல்பட முடியாமை, பகிர்ந்துகொள்ளும் குணம் இல்லாமை போன்ற குணங்களோடு வளர அதிக வாய்ப்புகள் இருக்கின்றன. இந்தப் பிரச்னைக்கு ‘சிங்கிள் சைல்ட் சிண்ட்ரோம்’ (Single Child Syndrome) என்று பெயர்.