-மதிபாரதி‘‘ராஜமனோஹரி என அழைக்கும்போது, எங்கோ எட்டாத உயரத்தில் நான் இருப்பது போன்ற சங்கட உணர்வு ஏற்படும். அதேவேளை ‘மனோஹரி’ என்பது இயல்பாக இருப்பதை உணர்ந்து, இப்பெயரில் படைப்புகளை எழுதி வருகிறேன்!’’ எனச் சொல்லும் இவர், சிறு வயதிலிருந்து ஓவியம், கவிதைகளில் நாட்டம் கொண்டவர்..ஆனாலும், கடந்த ஏழு ஆண்டுகளாக கவிதை எழுதுவதை உள்ளங்கை ரேகையாக்கிக் கொண்டுள்ளார்.‘‘என்னுடைய கவிதைகள் பெரும்பாலும் இயற்கையின் வண்ணங்களை, மனதின் எண்ணங்களை, ஆன்மாவின் தேடல்களைப் பற்றியதாகவே இருக்கும்!’’ என்கிற மனோஹரி, .‘‘என் மதிப்புறு ஆசான் மகாக்கவியின் எழுத்தை படிக்கும்போதெல்லாம் எழுச்சி பெறுகிறேன். அவர் எழுதாத பாடுபொருள் இல்லை!’’ என பாரதியைக் கொண்டாடுகிறார்.பள்ளி நாட்களில் மு.மேத்தாவின் கவிதைகளில் மனம் கரைந்த இவர், ‘‘தமிழில் புரட்சியை ஏற்படுத்திய சுஜாதாவின் படைப்புகளும் என் நேசிப்புக்குரியவை. குறிப்பாக, அவரின் Science Fiction புதுமையின் அணிவகுப்பாகும். பாமரரும் அறிவுஜீவிகளும் அவருடைய எழுத்தை வாசிக்க முடியும். நம் மொழியின் Fashion Designer சுஜாதா. இதேபோல் நினைவில் வாழும் பிரான்சிஸ் கிருபா, நா.முத்துக்குமாரின் கவிதைகளும், இன்றைய நாளில் அறிவுமதி, பழநிபாரதி, ஆரூர் தமிழ்நாடன், பிருந்தாசாரதியின் கவிதைகளும் தனித்துவமாக உள்ளன!’’ என மனம் மலர்கிறார் மனோஹரி..தஞ்சையில் பிறந்து சென்னையில் வளர்ந்த இவர், ஆங்கில இலக்கியத்தில் எம்.ஏ., எம்.எட்., பயின்று ஆசிரியராக இருந்தவர். இப்போது இணைய வழியில் வகுப்புகள் எடுத்து வருகிறார்.கணவர் மதன்மோகன், சார்ட்டட் அக்கவுன்டன்ட். திருமணத்திற்குப் பிறகு அதிக காலம் டெல்லியில் வசித்த மனோஹரிக்கு, அஸ்ஸாம், கேரளா, ஆந்திரா என கூடு மாறிக்கொண்டே இருந்திருக்கிறது. இப்போது சென்னையின் நிரந்தர பிரஜை..‘‘கவிதை... எல்லோராலும் படித்ததும் புரிந்துகொள்ளும் மொழியில், சட்டென ஓர் எழுச்சியை ஏற்படுத்த வேண்டும்!’’ என்கிற மனோஹரி, இரண்டாம் உலகப்போர் சமயம் சிங்கப்பூரில் ராணுவத்தில் மருத்துவராகப் பணியாற்றி ஓய்வுபெற்ற தம்முடைய தாத்தாவின் வீட்டை நினைவில் கொண்டு முதல் கவிதையை எழுதியிருக்கிறார்.‘இன்றுக் கண்ணுக்கு சிறியதாகத் தெரியும் / தாத்தா வீடு / நினைவில் / பிரமாண்டமாக நிற்கிறது!’ என்பதுதான் அந்த முதல் கவிதை!இதுவரையில் ‘தங்கக் கழுகு பதிப்பகம்’ எனும் தம்முடைய சொந்த பதிப்பகத்தின் வழியாக, ‘விரல்களில் சிக்காத காற்றாய் நெஞ்சமெல்லாம் நிறைந்தாய்’, ‘கரையும் மணித்துளியில் ஒளிரும் நொடிகள்’, ‘சிறகில் விரியும் காடு’, ‘நினைவு வெளியில் நனையும் நிலா’ (தொகுப்பு) ஆகிய கவிதை நூல்களை வெளியிட்டுள்ளார். விரைவில், ‘பிங்க் நிற ஆர்கிட் பூக்கள்’ எனும் இவருடைய ஐந்தாவது நூல் விளைச்சல் காணவுள்ளது.வரும் நாட்களில் சினிமாவிற்கு பாடல் எழுத வேண்டும், மியூசிக் ஆல்பம் தயாரிக்க வேண்டும், பெண்கள் மேம்பாடு குறித்து நூல் எழுத வேண்டும், நாவல் எழுத வேண்டும் என்கிற மனோஹரியின் பல ‘வேண்டும்’கள் நிறைவேற வாழ்த்துவோம்!.மனோஹரி கவிதைகள் ஒற்றைக் காலில் தவமிருக்கும் கொக்கின் பிரார்த்தனையை தற்காலிகமாகநிறைவேற்றி வைக்கிறதுஒற்றைக் கெண்டை மீன்! *****முத்தமிட்டுப் பறக்கும்பட்டாம்பூச்சிக்குக் காட்டுச் சிங்கம் குறித்துபயமொன்றும் இல்லை! *****மீனைக் கொத்திய பறவையின்சிறகைப் பற்றிக்கொண்டதுதுளி கடல்! *****நீ என் உள்ளங்கையைப்பற்றிக்கொள்கிறாய்நீள்கிறதென் ஆயுள் ரேகை!