Snegiti
நெகிழ்ச்சி ஸ்டோரி: போனது கை...கிடைத்தது வாழ்க்கை..!உருகுகிறார் நாராயணசாமி
‘‘நானெல்லாம் எங்க உயிர் வாழப் போறேன்னு நெனச்சேண்ணே. ‘கூன், குருடு, செவிடு இல்லாம பிறக்கணும்!’னு சொல்வாங்க. நல்லவிதமா பிறந்து வளர்ந்துட்டு, திடீர்னு கையை இழந்ததும் என்னோட வாழ்க்கையே சூனியமா போயிடுச்சுன்னுதான் நினைச்சேன். அப்போ காதலியா இருந்த என் மனைவி நதியா பேசின வார்த்தைகள்தான் எனக்குப் பெரிய நம்பிக்கையைக் கொடுத்துச்சு. எப்படியாவது மாற்று கைகள் பொருத்திடணும்னு தீவிரமா முயற்சி பண்ணேன். இதோ இன்னைக்கு என்னோட மூணு வயசுப் பையனை செல்லமா தூக்கிக் கொஞ்சுறேன். என்னோட மனைவிக்கு நான் காலத்துக்கும் கடமைப்பட்டிருக்கிறேன்!’’ என தம்முடைய மனைவியின் கரம் பற்றி நெக்குறுகிச் சொல்கிறார் 33 வயதான நாராயணசாமி.