பக்கெட் தண்ணியில பிள்ளையாரை கரைப்போம்!சித்ரா சங்கர், ஆஸ்திரேலியா.‘‘நாங்கள் சிட்னிக்கு வந்து முப்பது வருஷங்கள் ஆகுது. அப்போ பிள்ளையார் சதுர்த்தி கொண்டாடுறதெல்லாம் கொஞ்சம் கஷ்டமா இருக்கும். வீட்ல படம் வச்சு பூஜைபண்ணுவோம். இங்கநிறைய ‘களிமண்’ (சிறீணீஹ்) கிடைக்கும். .அதைவாங்கி, தாங்களே பிள்ளையார் செஞ்சும் சிலர் கொண்டாடுவதுண்டு. ‘பிள்ளையார்குடை’யை நானே என் கையால் செய்வேன். ஆனா, இப்போ இங்கேயும் மண் பிள்ளையார், கலர்கலரா ஈக்கோஃப்ரெண்ட்லி பிள்ளையார் பொம்மைகளும் வெவ்வேறு அளவுகள்ல கிடைக்குது. பூஜை முடிச்சுட்டு, மண் பிள்ளையாரை பக்கெட் தண்ணியில கரைச்சு, தோட்டத்துலஊத்திடுவோம்..சிட்னியில கற்பக விநாயகர் கோயில் இருக்கு. தவிர, சிட்னியிலேருந்து 70 கி.மீ., தொலைவுல ஸ்ரீவெங்கடேஸ்வரா கோயில் ஒண்ணும் இருக்கு. அங்க ‘விநாயகர் சதுர்த்தி விழா’, ஆடல், பாடல்னு ரொம்பவே கோலாகலமா நடக்கும். பிள்ளையார் சதுர்த்தி முடிஞ்சு, அடுத்து வரக்கூடிய ஞாயிற்றுக்கிழமை எல்லா இந்துக்களும் அந்தக் கோயில்ல ஒன்றுகூடி ‘விசர்ஜன்’கிற பெயர்ல பிள்ளையாரை தண்ணியில கரைக்கும் நிகழ்வை விசேஷமா கொண்டாடுவோம். பிள்ளையாரை ஊர்வலமாகக் கொண்டு போய், பக்கத்திலேயே இருக்கிற கடல்ல கரைச்சிடுவோம்.’’. நண்பர்கள் ஒன்றிணைந்து கொண்டாடுவோம்!ஜெயா வெங்கடேஷ், சென்னை.‘‘தோஹா மற்றும் யு.ஏ.இ._யின் பகுதியான அபுதாபியில் கணவரின் பணி நிமித்தமாக 10 - 15 ஆண்டுகளுக்கு முன்பாக நாங்கள் வசித்துள்ளோம். அப்போதெல்லாம் பூஜை அறையில் கொலுவில் வைக்கும் பிள்ளையார் பொம்மையை வைத்து பூஜை செய்வோம். இந்திய குடும்பங்கள், நண்பர்கள் யார் வீட்டிலாவது குழுமி பூஜையை கொண்டாடுவோம்..மாலையில் ‘இந்திய அசோசியேஷன்’ அல்லது ‘கலாசார மையங்களில்’ இந்தியர்கள் கூடி பண்டிகையை ஒன்றாகக் கொண்டாடுவோம். இப்போதெல்லாம் யு.ஏ.இ., மற்றும் தோஹாவில் பிள்ளையார் உருவ பொம்மைகளும் பூஜை சாமான்களும் கிடைக்கின்றன. ஊர்வலமாக போவதில்லை. மற்றபடி இந்திய குடும்பங்கள் ஒன்றாக கம்யூனிட்டி ஹாலை புக் செய்து, பண்டிகையை சிறப்பாகக் கொண்டாடுவதுண்டு.’’