மேஷம்சூரியானால் இருந்து வந்த அக்கம் பக்கத்தினர் தொல்லைகள் 17ஆம் தேதிக்குப் பிறகு மறையும். செவ்வாயால் உங்களுக்கு அபார ஆற்றல் பிறக்கும். பொருளாதார வளம் அதிகரிக்கும். சுக்கிரனால் மதிப்பு, மரியாதை அதிகரிக்கும். உறவினர்களிடம் சுமூக நிலை ஏற்படும். வேலைக்குச் செல்லும் பெண்களுக்கு வசதிகள் பெருகும். வியாபாரம் செய்யும் பெண்களுக்கு எதிரிகளால் இருந்து வந்த முட்டுக்கட்டைகள் விலகும். 16ஆம் தேதிக்குப் பிறகு உடல் ஆரோக்கியம் மேம்படும்.வழிபாடு: தட்சிணாமூர்த்திக்கு வீட்டில் விளக்கு ஏற்றி வழிபடுங்கள். ரிஷபம்இந்தக் காலகட்டத்தில் புதனால் பொருள் சேரும். சுக்கிரனால் செல்வாக்கு மேம்படும். கணவன்&மனைவி இடையே அன்பு, பாசம் மேலோங்கும். கேதுவால் பொருளாதார வளம் அதிகரிக்கும். உத்தியோகத்தில் உள்ளவர்களுக்கு பதவி உயர்வு கிடைக்கும். சுயதொழில் செய்யும் பெண்களுக்கு ஆண்கள் வகையில் இருந்த இடர்பாடுகள் 17-ஆம் தேதிக்குப் பிறகு மறையும். உடல் நலம் சிறப்படையும்.வழிபாடு: தினமும் சூரிய தரிசனம் செய்யுங்கள். காக்கைக்கு அன்னமிட்டு உண்ணுங்கள். மிதுனம்குரு, சுக்கிரன், ராகுவால் எடுத்த காரியம் அனைத்திலும் வெற்றி காணலாம். மதிப்பு, மரியாதை அதிகரிக்கும். அரசு வகையில் அனுகூலம் ஏற்படும். கணவரின் அன்பு கிடைக்கும். உங்களால் குடும்பம் சிறக்கும். வேலைக்குச் செல்லும் பெண்களுக்கு மேலதிகாரிகளின் ஆதரவும் சக ஊழியர்களின் ஒத்துழைப்பும் கிடைக்கும். வியாபாரம் செய்யும் பெண்களுக்கு வங்கிக் கடன் எளிதாகக் கிடைக்கும். உடல் நலம் சிறப்படையும். பயணத்தின்போது கூடுதல் கவனம் தேவை.வழிபாடு: துர்க்கையை வழிபடுங்கள். ஏழைகளுக்கு கொள்ளு தானம் செய்யுங்கள். கடகம்இந்தக் காலகட்டத்தில் செவ்வாயால் கடவுளின் கருணை உங்களுக்கு பரிபூரணமாகக் கிடைக்கும். புதிய சொத்து வாங்குவதற்கான அனுகூலம் உண்டு. சகோதரர்களால் மேன்மை கிடைக்கும். உத்தியோகத்தில் இருப்பவர்கள் உழைப்புக்கு ஏற்ற பலனை காணலாம். ஆன்மிகம் சம்பந்தப்பட்ட மற்றும் பூஜை பொருள்கள் வியாபாரம் செய்பவர்கள் அதிக லாபத்தைப் பெறுவர். 17ஆம் தேதிக்குப் பிறகு கண் வலி பூரண குணமடையும்.வழிபாடு: புதனன்று குலதெய்வத்தை வணங்கி, பாசிப்பயறு தானம் செய்யுங்கள். சிம்மம்இந்தக் காலகட்டத்தில் சகோதரிகள் மிகவும் உறுதுணையாக இருப்பர். திருமணம் போன்ற சுபநிகழ்ச்சிகள் கைகூடும். வேலைக்குச் செல்லும் பெண்கள் சிலர் இடமாற்றத்தைக் காணலாம். பூ வியாபாரம் செய்யும் பெண்கள் நல்ல வருமானத்தையும் எதிரிகளின் இடையூறை முறியடிக்கும் வல்லமையையும் பெறுவார்கள். பயணத்தின்போது கூடுதல் கவனம் தேவை.வழிபாடு: சந்தர்ப்பம் கிடைக்கும்போது நவகிரகங்களைச் சுற்றி வந்து வழிபடுங்கள். கன்னிசுக்கிரனால் பண வரவு கூடும். சொந்தபந்தங்களின் வருகை இருக்கும். கணவன் - மனைவி இடையே அன்பு, பாசம் மேலோங்கும். வேலைக்குச் செல்லும் பெண்களுக்கு இடமாற்ற பீதி மறையும். வியாபாரம் செய்யும் பெண்கள் நல்ல வருமானத்தைப் பெறுவர். சூரியனால் ஏற்பட்ட பொருள் விரையம், தொழிலில் நஷ்டம் முதலியன 17ஆம் தேதிக்குப் பிறகு மறையும். உடல் நலத்தில் சிறிது அக்கறை காட்ட வேண்டியதிருக்கும்.வழிபாடு: நவகிரகங்களையும் குலதெய்வத்தையும் வழிபடுங்கள்..துலாம்புதனால் குடும்பத்தில் மகிழ்ச்சி நிலவும். குருபகவான் காரிய அனுகூலத்தையும் பொருளாதார வளத்தையும் தந்து கொண்டிருக்கிறார். பணப்புழக்கம், மதிப்பு, மரியாதை அதிகரிக்கும். உத்தியோகத்தில் உள்ளவர்களுக்கு அரசு வகையில் எதிர்பார்த்த லோன் எளிதில் கிடைக்கும். சுயதொழில் செய்யும் பெண்களுக்கு லாபம் அதிகரிக்கும். 17ஆம் தேதிக்குப் பிறகு பித்தம், மயக்கம் போன்ற உபாதைகள் சிலருக்கு வரலாம்.வழிபாடு: ராகு காலத்தில் துர்க்கைக்கு பூஜை செய்யலாம். பைரவருக்கு தயிர் சாதம் படைத்து வழிபடலாம். விருச்சிகம்இந்தக் காலகட்டத்தில் சூரியன் சாதகமாக இருப்பதால் எடுத்த காரியத்தை சிறப்பாக செய்து முடிக்கலாம். செவ்வாயால் குடும்பத்தில் மகிழ்ச்சி நிலவும். சுக்கிரனால் பொருளாதார வளம் அதிகரிக்கும். சகோதரிகள் மிகவும் ஆதரவுடன் இருப்பர். அரசு வேலையில் இருக்கும் பெண்கள் முன்னேற்றம் காணலாம். சுயதொழில் செய்யும் பெண்களுக்கு வங்கிக் கடன் எளிதாகக் கிடைக்கும். உடல் உபாதைகள் அனைத்தும் பூரணமாக குணமடையும்.வழிபாடு: வியாழனன்று தட்சிணாமூர்த்திக்கு அர்ச்சனை செய்யவும். தனுசுகுரு மற்றும் சுக்கிரனால் உங்கள் ஆற்றல் மேம்படும். சகோதரிகளால் பொருள் சேரும். திருமணம் ஆகாமல் இருக்கும் பெண்களுக்கு நல்ல வரன் அமையும். உத்தியோகத்தில் இருக்கும் பெண்களில் சிலருக்கு புதிய பதவி கிடைக்கும். சுயதொழில் செய்யும் பெண்களுக்கு வாடிக்கையாளர் மத்தியில் நற்பெயர் கிடைக்கும். புதனால் தீயோர் சேர்க்கைக்கு சிலர் ஆளாகலாம். எனவே எச்சரிக்கை தேவை. உடல் நலம் சிறக்கும்.வழிபாடு: செவ்வாயன்று முருகனை வழிபட்டு, சிவப்பு ஆடையை தானம் செய்யலாம். மகரம்இந்தக் காலகட்டத்தில் புதனால் வசதிகள் பெருகும். முயற்சிகளில் வெற்றி கிடைக்கும். அண்டை வீட்டார் அனுகூலமாக இருப்பர். புத்தாடை, அணிகலன்கள் வாங்கலாம். பிள்ளைகளால் மகிழ்ச்சியும் பெருமையும் கிடைக்கும். கணவன் - மனைவி இடையே அன்னியோன்யமான சூழல் இருக்கும். உத்தியோகத்தில் உள்ளவர்களின் கோரிக்கைகள் நிறைவேறும். சுயதொழில் செய்யும் பெண்கள் செழிப்போடு காணப்படுவர். உடல் நலம் சுமாராக இருக்கும்.வழிபாடு: தினமும் சூரியனையும் சனியன்று பெருமாளையும் வழிபடுங்கள். கும்பம்ராகு 3ஆம் இடத்தில் இருந்து பல்வேறு நன்மைகளை செய்து கொண்டிருக்கிறார். கணவன் - மனைவி அனுசரித்துப் போவது நல்லது. வேலை நிமித்தமாக குடும்பத்தை விட்டு சிலர் பிரிந்து செல்ல நேரலாம். சுயதொழில் செய்யும் பெண்களுக்கு ஏற்பட்ட அவப்பெயர், அலைச்சல், சோர்வு முதலியன 17ஆம் தேதிக்குப் பிறகு இருக்காது. வரவு - செலவு கணக்கை சரியாக வைத்துக்கொள்ளவும். வயிறு தொடர்பான உபாதைகள் சரியாகும்.வழிபாடு: வெள்ளியன்று சுக்கிரனுக்கு பால்பாயசம் படைத்து வணங்கலாம். மீனம்இந்தக் காலகட்டத்தில் பெரியோர்களின் ஆதரவு கிடைக்கும். சிநேகிதிகள் உதவிகரமாக இருப்பர். எடுத்த காரியம் வெற்றியடையும். திருமணம் போன்ற சுபநிகழ்ச்சிகள் நடைபெறலாம். உத்தியோகத்தில் இருக்கும் பெண்களின் கோரிக்கைகள் நிறைவேறும். 17ஆம் தேதி வரை சூரியன் சாதகமான நிலையில் இருப்பதால், சுயதொழில் செய்யும் பெண்கள் தங்கள் பகைவர்களை வெற்றி கொள்ளலாம். உடல் ஆரோக்கியம் மேம்படும்.வழிபாடு: செவ்வாயன்று முருகனை வழிபட்டு, துவரை தானம் செய்யுங்கள். - பண்டித காழியூர் நாராயணன்