-தேனம்மை லெக்ஷ்மணன் வரலட்சுமி விரதம், ஓணம், ஆவணி அவிட்டம், ரக்ஷா பந்தன், கிருஷ்ண ஜெயந்தி என வரிசையாக பண்டிகைகள் படையெடுக்கும் காலகட்டம் இது. அவற்றை இனிமையாக நீங்கள் கொண்டாட காய், கனிகளில் விதவிதமான ரெசிபிகள் இங்கே அணிவகுக்கின்றன. இவற்றில் உங்களுக்கு விருப்பமான ரெசிபியை செய்து, கடவுளுக்கு நிவேதித்து, நீங்களும் உண்டு மகிழுங்கள்!.பீட்ரூட் - தேங்காய் பர்ஃபிதேவையானவை: பீட்ரூட் - 1, தேங்காய் - அரை மூடி, சர்க்கரை - 1 கப், நெய் -1 டேபிள் ஸ்பூன் + 1 டீஸ்பூன், முந்திரி - 10, ஏலக்காய்த்தூள் - கால் டீஸ்பூன்.செய்முறை: பீட்ரூட்டின் தோலை சீவி, துருவவும். தேங்காயையும் துருவி வைக்கவும். ஒரு ட்ரேயில் ஒரு டீஸ்பூன் நெய்யைத் தடவி வைக்கவும். அடி கனமான பானில் பீட்ரூட் துருவல், தேங்காய்த்துருவலைப் போட்டு, அடுப்பை மிதமான தீயில் வைத்து நன்றாக வதக்கவும். பச்சை வாசனை போனதும் சர்க்கரை சேர்த்துத் தொடர்ந்து கிளறவும். சிறிய பானில் ஒரு டேபிள் ஸ்பூன் நெய் ஊற்றி, முந்திரியை வதக்கி, பீட்ரூட் கலவையில் சேர்க்கவும். நன்றாகக் கிளறி, பாத்திரத்தில் ஒட்டாமல் இறுகி வந்ததும், நெய்த் தடவிய தட்டில் கொட்டி, விருப்பமான அளவில் துண்டுகள் போடவும்..கேரட் - சேமியா கேசரிதேவையானவை: கேரட் - 200 கிராம், சேமியா - 1 கப், நாட்டுச் சர்க்கரை - 1 1/4 கப், தண்ணீர் - 3 கப், நெய் - 3 டேபிள் ஸ்பூன், முந்திரி - 10, ஏலக்காய்த்தூள் - கால் டீஸ்பூன்.செய்முறை: கேரட்டை தோல் சீவித் துருவவும். நெய்யில் முந்திரியை வறுத்து எடுத்து வைக்கவும். அதில் பாதி நெய்யில், கேரட் துருவலைப் போட்டு, பச்சை வாசனை போக நன்றாக வதக்கவும். பின்னர் மீதி நெய்யை விட்டு, சேமியாவைப் போட்டுப் பொன்னிறமாக வறுத்து, கொதிக்கவைத்த தண்ணீரை ஊற்றவும். இதனுடன் வதக்கிய கேரட்டை சேர்க்கவும். கேரட்டும் சேமியாவும் நன்றாக வெந்ததும், நாட்டுச் சர்க்கரையைச் சேர்த்து கிளறவும். கேசரி சுருண்டு, நெய் பிரியும்போது ஏலக்காய்த்தூள், நெய்யில் வறுத்த முந்திரியை தூவி இறக்கிப் பரிமாறவும்..பைனாப்பிள் பொங்கல்தேவையானவை: பைனாப்பிள் - கால் பாகம், பச்சரிசி - 1 கப், பாசிப்பருப்பு - அரை கப், பால் - 1 கப், சர்க்கரை - கால் கப் + 1 டேபிள் ஸ்பூன், முந்திரி - 10, ஏலக்காய்த்தூள் - கால் டீஸ்பூன், பைனாப்பிள் எசன்ஸ் - சில துளிகள், நெய் - 1 டேபிள் ஸ்பூன், ஃபுட் கலர் (மஞ்சள் நிறம்) - சிறிதளவு.செய்முறை: பைனாப்பிள் தோலை நீக்கி, ஒரு இன்ச் சதுரத் துண்டுகளாக்கி, ஒரு டேபிள் ஸ்பூன் சர்க்கரை, சிறிதளவு தண்ணீர் சேர்த்து வேகவைத்து எடுக்கவும். பச்சரிசி, பாசிப்பருப்பை குக்கரில் போட்டு, இரண்டரை கப் தண்ணீர் சேர்த்து வேகவைத்து எடுத்து, சர்க்கரை, பால் ஊற்றிக் குழைத்து, வெந்த பைனாப்பிளை சேர்க்கவும். நெய்யில் முந்திரியை வறுத்துப் போட்டு, ஃபுட் கலர், எசன்ஸ் சேர்த்து நன்றாக கலந்துவிட்டு பரிமாறவும்..ஆலு பான்கேக்தேவையானவை: உருளைக்கிழங்கு - 2, ஆல் பர்ப்பஸ் மாவு / மைதா - 1 கப், பால் - 1 கப், சர்க்கரை - கால் கப், வெண்ணெய் - 1 டேபிள் ஸ்பூன், பேக்கிங் பவுடர் - 1 சிட்டிகை, ஆலிவ் ஆயில் - சிறிதளவு.செய்முறை: உருளைக்கிழங்கின் தோலை சீவி, நைசாகத் துருவவும். வெண்ணெய், பேக்கிங் பவுடர், சர்க்கரை சேர்த்து நன்றாக அடித்துக் கலக்கவும். இதில், துருவிய உருளை, மைதா, பாலை சிறிது சிறிதாகச் சேர்த்துக் கலக்கவும் (அதிகம் அடிக்க வேண்டாம்). நான்ஸ்டிக் தவாவில் ஆலிவ் ஆயிலை ஸ்ப்ரே செய்து, ஒரு பெரிய கரண்டி அளவு மாவை ஊற்றி, லேசாக ஊத்தப்பம் போல் தடவவும். 2 நிமிடங்கள் கழித்து, திருப்பிப் போட்டு வேகவைத்து எடுக்கவும். தேன் / ஜாம் / வெண்ணெயுடன் பரிமாறவும்..ஸ்வீட் கார்ன் மிக்ஸ்தேவையானவை: வேகவைத்த ஸ்வீட் கார்ன் - 2 கப், பொடியாக நறுக்கிய வெங்காயம் - 1 டேபிள் ஸ்பூன், பொடியாக நறுக்கிய தக்காளி - 1 டேபிள் ஸ்பூன், பொடியாக நறுக்கிய கேரட் - 1 டேபிள் ஸ்பூன், மிளகாய்த்தூள் - கால் டீஸ்பூன், கருப்பட்டிப் பாகு - 2 டீஸ்பூன், பேரீச்சை ஜாம் - 2 டீஸ்பூன், தக்காளி சாஸ் - 2 டீஸ்பூன், பொடியாக நறுக்கிய கொத்தமல்லித்தழை - சிறிதளவு, உப்பு - கால் டீஸ்பூன். செய்முறை: மேற்காணும் அனைத்து பொருள்களையும் அகலமான பாத்திரத்தில் போட்டு நன்றாக கலந்து கொள்ளவும். இதை அப்படியே பரிமாறலாம். இல்லாவிட்டால், மேலாக ஓமப்பொடி, பொரி சேர்த்தும் பரிமாறலாம்..இஞ்சி முரப்பாதேவையானவை: தோல் நீக்கி துருவிய இஞ்சி - 1 கப், பால் - 1 கப், சர்க்கரை - 1 கப், நெய் - தேவையான அளவு.செய்முறை: இஞ்சித்துருவலை மிக்ஸியில் போட்டு பால் சேர்த்து மைய அரைக்கவும். இதனுடன் சர்க்கரை சேர்த்து அடுப்பில் வைத்து, பாத்திரத்தில் ஒட்டாமல் வரும் வரை கிளறி இறக்கவும். இந்தக் கலவையை நெய்த் தடவிய ட்ரேயில் கொட்டி, விருப்பமான அளவில் துண்டுகள் போடவும். சூடு நன்றாக ஆறியதும், காற்றுப் புகாத டப்பாவில் அடைக்கவும். தேவையானபோது எடுத்து உபயோகிக்கவும்..சர்க்கரைவள்ளி ஃபிங்கர் சிப்ஸ்தேவையானவை: சர்க்கரைவள்ளிக் கிழங்கு - கால் கிலோ, சர்க்கரை - 1 கப், ஏலக்காய்த்தூள் - 1 சிட்டிகை, முந்திரி, கிஸ்மிஸ் - தலா 2, நெய் - 2 டீஸ்பூன், எண்ணெய் - பொரிக்க தேவையான அளவு.செய்முறை: சர்க்கரைவள்ளிக் கிழங்கின் தோலை உரித்து, குச்சிகளை போல நீளநீளமாக சீவி, எண்ணெயில் பொரித்து எடுக்கவும். முந்திரி, கிஸ்மிஸை நெய்யில் பொன்னிறமாக வறுத்து, பொரித்த சிப்ஸில் சேர்க்கவும். சர்க்கரையில் 'முத்துப் பாகு' காய்ச்சி, அதில் ஃபிங்கர் சிப்ஸைப் போட்டு நன்றாகப் புரட்டி வைக்கவும். சர்க்கரைக்குப் பதிலாக வெல்லமும் பயன்படுத்தலாம்..கோபி ஸ்வீட் லாலிபாப்தேவையானவை: காலிஃப்ளவர் துண்டுகள் - 15, மைதா மாவு - கால் கப், சோளமாவு - கால் கப், பனீர் துருவல் - 1 டேபிள் ஸ்பூன், சர்க்கரை - 1 டேபிள் ஸ்பூன், எண்ணெய் - பொரிக்க தேவையான அளவு.செய்முறை: காலிஃப்ளவர் பூக்களை வெந்நீரில் போட்டு, மூன்று நிமிடங்கள் வேகவைத்து எடுத்து, வடிகட்டி வைக்கவும். நைசாக துருவிய பனீருடன் சோளமாவு, மைதா மாவு, சர்க்கரை சேர்த்துக் கெட்டியாகக் கரைத்துக்கொள்ளவும். இந்தக் கரைசலில் காலிஃப்ளவர் பூக்களை தோய்த்து, நன்றாக காய்ந்த எண்ணெயில் போட்டு பொரித்து எடுத்து, பரிமாறவும்..பறங்கிக்காய் அல்வாதேவையானவை: பறங்கிக்காய் - 2 கீற்று, சர்க்கரை - 1 கப், நெய் - 2 டேபிள் ஸ்பூன், கெட்டியான பால் - 1 கப், முந்திரி, கிஸ்மிஸ் - தலா 8, ஏலக்காய்த்தூள் - கால் டீஸ்பூன்.செய்முறை: பறங்கிக்காயின் தோலை சீவி, மென்மையாகத் துருவவும். பாதி நெய்யில் முந்திரி, கிஸ்மிஸை வறுத்து எடுத்து தனியே வைக்கவும். மீதமுள்ள நெய்யில் பறங்கிக்காய்த் துருவலைப் போட்டு, பச்சை வாசனை போகும் வரை வதக்கவும். பின்னர் இதில் பாலை ஊற்றி வேகவிடவும். கலவை நன்றாக வெந்ததும், சர்க்கரை சேர்த்து கைவிடாமல் கிளறவும். இறுகியதும், வறுத்த முந்திரி, கிஸ்மிஸ், ஏலக்காய்த்தூள் சேர்த்து நன்றாகக் கிளறி இறக்கி, பரிமாறவும்..அங்கூரி பேடாதேவையானவை: பூசணிக்காய் - 2 கீற்று, சுண்ணாம்பு - 1/2 டீஸ்பூன், சர்க்கரை - 1 1/2 கப், ஏலக்காய் - 3, தாழம்பூ எசன்ஸ் - சில துளிகள், குங்குமப்பூ - 1 சிட்டிகை, கேசரி கலர் - ஒரு சிட்டிகை.செய்முறை: பூசணியின் தோலை சீவி, ஒரு இன்ச் சதுரத் துண்டுகளாக்கவும். 3 கப் தண்ணீரில் சுண்ணாம்பைக் கரைத்து, அதில் பூசணித்துண்டுகளை 24 மணி நேரம் ஊறவைக்கவும். பின்னர் நன்றாக அலசி, கழுவி எடுத்து, தண்ணீரில் போட்டு 1 நிமிடம் வேகவைத்து வடிக்கவும். சர்க்கரையுடன் ஏலக்காய்த்தூள், குங்குமப்பூ, கேசரி கலர், கால் கப் தண்ணீர் சேர்த்து அடுப்பில் வைக்கவும். சர்க்கரை கரைந்ததும், பூசணித்துண்டுகளைச் சேர்த்து, நீர் வற்றியதும் அடுப்பிலிருந்து இறக்கவும். தாழம்பூ எசன்ஸை ஸ்பிரே செய்து, ஆறியதும் பரிமாறவும்..பழம்பொரிதேவையானவை: நேந்திரன் வாழைப்பழம் - 2, மைதா - அரை கப், பச்சரிசி மாவு - 1 டேபிள் ஸ்பூன், சர்க்கரை - ஒரு டேபிள் ஸ்பூன், உப்பு - 1 சிட்டிகை, பேக்கிங் சோடா - 1 சிட்டிகை, எண்ணெய் - பொரிக்க தேவையான அளவு. செய்முறை: நேந்திரன் வாழைப்பழத்தின் தோலை நீக்கி, பஜ்ஜிக்கு சீவுவது போல சீவிக்கொள்ளவும். மைதா, பச்சரிசி மாவு, பேக்கிங் சோடா, சர்க்கரை ஆகியவற்றுடன் தேவையான அளவு தண்ணீர் சேர்த்து, 'பஜ்ஜி மாவு' பதத்தில் கரைத்துக்கொள்ளவும். வாணலியில் எண்ணெயைக் காயவைத்து, நேந்திரன் ஸ்லைஸுகளை மாவில் தோய்த்துப் போட்டு, பொரித்தெடுக்கவும்..கேரட் ஸ்டஃப்டு குல்சாதேவையானவை: கேரட் - கால் கிலோ, மைதா - 2 கப், சர்க்கரை - கால் கப், உப்பு - அரை டீஸ்பூன், நெய் - 2 டேபிள் ஸ்பூன், ஈஸ்ட் - சிறிதளவு.செய்முறை: கேரட்டின் தோலை சீவி, துருவி, ஒரு பானில் போட்டு, பச்சை வாசனை போகும் வரை நன்றாக வதக்கவும். பின்னர் சர்க்கரை சேர்த்து வேகவைத்து, 'பூரணம்' போல கிளறி எடுக்கவும். சற்றே வெதுவெதுப்பான நீரில் ஈஸ்ட்டை ஊறவைத்து, மைதா மாவு, உப்புக் கலவையில் ஊற்றி, மென்மையாகப் பிசைந்து, ஒரு மணி நேரம் ஊறவைக்கவும் (மூடி போட்டு வெயிலிலும் வைக்கலாம்). இதில் எலுமிச்சை அளவு உருண்டையை எடுத்து, கேரட் பூரணத்தை வைத்து மூடி, கனமான சப்பாத்திகளாகத் திரட்டி, நெய் ஊற்றி சுட்டு எடுக்கவும்..கேரட் ஸ்டஃப்டு குல்சாபலாக்காய் சுக்குவரட்டிதேவையானவை: லேசாகப் பழுக்க ஆரம்பிக்கும் பலாச்சுளைகள் - 15, வெல்லம் - 1 கப், ஏலக்காய்த்தூள், சுக்குத்தூள் - தலா 1 சிட்டிகை, தேங்காய் எண்ணெய் - பொரிக்க தேவையான அளவு.செய்முறை: பலாச்சுளைகளிலுள்ள கொட்டைகளை நீக்கி, நான்காகப் பிளந்து வைக்கவும். வெல்லத்துடன் சிறிதளவு தண்ணீர் சேர்த்து 'முத்துப் பாகு' ரெடி செய்து கொள்ளவும். இதனுடன் ஏலக்காய்த்தூள், சுக்குத்தூள் சேர்த்து கலந்து வைக்கவும். காய்ந்த எண்ணெயில் பலாச்சுளைகளைப் பொரித்தெடுத்து, வெல்லப்பாகில் போட்டு புரட்டி உடனே எடுக்கவும். பின்னர் அவற்றை ஒரு தட்டில் பரப்பி, ஆறவைத்து பரிமாறவும்..செவ்வாழை புட்டிங்தேவையானவை: செவ்வாழைப்பழம் - 2, தேங்காய்த்துருவல் - 2 டேபிள் ஸ்பூன், தேன் - 1 டேபிள் ஸ்பூன், ஏலக்காய்த்தூள் - 1 சிட்டிகை.செய்முறை: செவ்வாழைப்பழத்தின் தோலை உரித்து, வட்ட வடிவ ஸ்லைஸுகளாக நறுக்கி, ஒரு கிண்ணத்தில் வட்ட வடிவில் அடுக்கவும். அதன் மீது தேங்காய்த்துருவலைத் தூவி, தேன் ஊற்றவும். இறுதியாக ஏலக்காய்த்தூளை தூவிப் பரிமாறவும்.குறிப்பு: இந்தப் புட்டிங்கை குழந்தைகள் மிகவும் விரும்பிச் சாப்பிடுவார்கள்!-.மின்ட் சர்பத்தேவையானவை: ஆய்ந்த புதினா இலைகள் - ஒரு கப், சர்க்கரை (அல்லது) வெல்லம் - கால் கப், பச்சை எலுமிச்சங்காய் (தோலுடன்) - கால் பாகம், கருப்பு உப்பு - 1 சிட்டிகை, இஞ்சி - சிறிய துண்டு, பச்சை மிளகாய் - சிறிய துண்டு, வறுத்து அரைத்த சீரகத்தூள் - கால் டீஸ்பூன், ஐஸ் க்யூப்ஸ் - 10.செய்முறை: ப்ளெண்டரில் 5 ஐஸ் கியூப்களை போட்டு, மேற்காணும் மற்ற பொருள்களை சேர்த்து நன்றாக அடித்து, வடிகட்டவும். இதனுடன் தேவையான அளவு தண்ணீர் சேர்த்து, மீதமுள்ள 5 ஐஸ் கியூப்களை போட்டுப் பரிமாறவும்..பலாக்கொட்டை சுகியன்தேவையானவை: பலாக்கொட்டைகள் - 30, தேங்காய்த்துருவல் - 2 டேபிள் ஸ்பூன், வெல்லம் - 2 அச்சு, புதிதாக அரைத்த இட்லிமாவு - 1 கப், ஏலக்காய்த்தூள் - 1 சிட்டிகை, எண்ணெய் - பொரிக்க தேவையான அளவு.செய்முறை: பலாக்கொட்டைகளின் மேல்தோலை உரித்து, ப்ரவுன் நிற தோலையும் சீவி, நன்றாக கழுவி வேகவைத்து, நீரை வடிக்கவும். பின்னர் அவற்றை மிக்ஸியில் அரைத்து, தேங்காய்த்துருவல், வெல்லம், ஏலக்காய்த்தூள் சேர்த்து கலந்து வைக்கவும். இந்தக் கலவையை எலுமிச்சை அளவு உருண்டைகளாக உருட்டி, இட்லி மாவில் தோய்த்து, காய்ந்த எண்ணெயில் போட்டு பொரித்தெடுக்கவும்..பாகற்காய் ஸ்வீட் பச்சடிதேவையானவை: பாகற்காய் - கால் கிலோ, வெல்லம் - 1 அச்சு, தக்காளி - 1, புளி - 2 சுளை, உப்பு - அரை டீஸ்பூன், மிளகாய்த்தூள் - அரை டீஸ்பூன், எண்ணெய் - 2 டீஸ்பூன், கடுகு - அரை டீஸ்பூன், அரிசி மாவு - ஒரு டீஸ்பூன்.செய்முறை: பாகற்காயின் விதைகளை நீக்கி, பொடியாக நறுக்கவும். தக்காளியின் தோலை நீக்கி, பொடியாக நறுக்கவும். ஒரு டீஸ்பூன் எண்ணெயில் பாகல் துண்டுகளை வதக்கி, தக்காளி, உப்பு சேர்க்கவும். புளியை அரை கப் தண்ணீரில் கரைத்து ஊற்றி, மிளகாய்த்தூள் சேர்த்து வேகவிடவும். நன்றாக வெந்ததும் வெல்லத்தை பொடித்து போடவும். வெல்லம் கரைந்ததும், கடுகை தாளித்து கொட்டி அடுப்பிலிருந்து இறக்கவும். சூடான சாதத்துடன் பரிமாறவும்..ஆம்லா ஸ்வீட் தொக்குதேவையானவை: முழு நெல்லிக்காய் - 30, வெல்லம் - 2 அச்சு, தேன் - கால் கப், உப்பு - 1 சிட்டிகை.செய்முறை: நெல்லிக்காய்களை ஆவியில் வேகவைத்து எடுத்து, விதைகளை நீக்கி, பொடியாக நறுக்கி மிக்ஸியில் போடவும். கொரகொரப்பாக அரைத்து மசித்து வைக்கவும். இதனுடன் துருவிய வெல்லம் சேர்த்து அடுப்பில் வைத்து, கைவிடாமல் கிளறவும். கலவை நன்றாக இறுகி வரும்போது அடுப்பிலிருந்து இறக்கவும். நன்றாக ஆறியதும் தேன் சேர்த்து, கலந்துவிட்டு பரிமாறவும்..ஆம்லா ஸ்வீட் தொக்குசர்க்கரைவள்ளி பாயசம்தேவையானவை: சர்க்கரைவள்ளிக் கிழங்கு - 200 கிராம், பச்சரிசி, பாசிப்பருப்பு - தலா 2 டீஸ்பூன், தேங்காய்த்துருவல் - 1 டேபிள் ஸ்பூன், வெல்லம் - 1 அச்சு, நெய் - 2 டீஸ்பூன், ஏலக்காய்த்தூள் - 1 சிட்டிகை, முந்திரி, கிஸ்மிஸ் - தலா 8.செய்முறை: சர்க்கரைவள்ளிக் கிழங்கை வேகவைத்து தோலுரித்து, மசித்து வைக்கவும். பச்சரிசி, பாசிப்பருப்பை வெறும் வாணலியில் போட்டு லேசாக வெதுப்பி, மிக்ஸியில் போட்டு ஒன்றும் பாதியுமாக உடைத்துக்கொள்ளவும். இதை 2 கப் தண்ணீரில் கரைத்து வேகவிடவும். நன்றாக வெந்ததும், மசித்த சர்க்கரைவள்ளிக் கிழங்கு, வெல்லத்தூளைச் சேர்த்து கொதிக்க விடவும். தேங்காயை அரைத்து ஊற்றி, அடுப்பிலிருந்து இறக்கவும். நெய்யில் முந்திரி, கிஸ்மிஸை பொரித்து போடவும். ஏலக்காய்த்தூளை கலந்து பரிமாறவும். .பீட்ரூட் - ரவா கேக்தேவையானவை: சின்ன சைஸ் பீட்ரூட் - 1, வெள்ளை ரவை - 1 கப், பொடித்த சர்க்கரை - 1 கப், பால் - 1 கப், தயிர் - அரை கப், பேக்கிங் பவுடர் - அரை டீஸ்பூன், பேக்கிங் சோடா - கால் டீஸ்பூன், நெய் - 3 டேபிள் ஸ்பூன்.செய்முறை: பீட்ரூட்டின் தோலை சீவி, துருவி, வெறும் வாணலியில் போட்டு பச்சை வாசனை போகும் வரை வதக்கி ஆறவிடவும். தயிரை நன்றாக அடித்துக்கொள்ளவும். இதில், பீட்ரூட், பொடித்த சர்க்கரை, ரவை, பால், பேக்கிங் பவுடர், பேக்கிங் சோடா சேர்த்து நன்றாக கலந்து, சிறிது நேரம் வைக்கவும். குக்கரில் கீழே ஒரு ஸ்டாண்ட்டை வைத்து, 5 நிமிடங்கள் சூடாக்கவும். பேக்கிங் ட்ரேயில் நெய்த் தடவி, ரவை - பீட்ரூட் கலவையை ஊற்றி, குக்கரில் வைத்து, கேஸ்கட், வெயிட் போடாமல், முக்கால் மணி நேரம் அடுப்பை மீடியமான தீயில் வைத்து, வெந்ததும் எடுக்கவும்..டொமேட்டோ ஜாம்தேவையானவை: தக்காளி - அரை கிலோ, சர்க்கரை - 350 கிராம், எலுமிச்சைச்சாறு - அரை டேபிள் ஸ்பூன், பட்டை, கிராம்பு - தலா 3.செய்முறை: தக்காளிகளை கீறி, கொதிக்கும் வெந்நீரில் போட்டு 10 நிமிடங்கள் மூடி வைக்கவும். ஆறியதும், தோலை உரித்து, விதை இல்லாமல் சதைப்பகுதியை மட்டும் தனியே எடுத்து, மிக்ஸியில் போட்டு மையாக அரைத்து எடுக்கவும். இந்த விழுதை ஒரு பானில் போட்டு, நீர் சுண்டும் வரை கிளறவும். பின்னர் சர்க்கரை சேர்த்து நன்றாகக் கிளறவும். ஓரளவு தளதளவென கொதித்து, கலவை கெட்டியாகும்போது எலுமிச்சைச்சாறு சேர்க்கவும். பின்னர் பட்டை, கிராம்பைப் பொடித்துப் போட்டு நன்றாகக் கிளறி இறக்கவும். வெதுவெதுப்பாக இருக்கும்போதே கண்ணாடி பாட்டில்களில் நிரப்பி, மூடிவைக்கவும்.குறிப்பு: பிரெட் / சப்பாத்திக்குத் தொட்டுக்கொள்ள ஏற்ற ஜாம் இது!.மரவள்ளிக்கிழங்கு போளிதேவையானவை: மரவள்ளிக்கிழங்கு - 250 கிராம், மைதா - 2 கப், வெல்லம் - ஒன்றரை கப், தேங்காய்த்துருவல் - அரை கப், நெய் - 2 டேபிள் ஸ்பூன், எண்ணெய் - 200 கிராம், மஞ்சள்தூள் - 1 சிட்டிகை.செய்முறை: மரவள்ளிக்கிழங்கை வேகவைத்து உதிர்த்து வைக்கவும். ஒரு பானில் வெல்லம், தேங்காய்த்துருவல், உதிர்த்த மரவள்ளிக்கிழங்கை சேர்த்து கெட்டியாகும் வரை கிளறி, சிறிதளவு நெய் சேர்த்து இறக்கிவைத்தால் 'பூரணம்' தயார். மைதாவுடன் மஞ்சள்தூள், ஒரு சிட்டிகை உப்பு, ஒரு சிட்டிகை சர்க்கரை சேர்த்து நீர் தெளித்துப் பிசைந்து, எண்ணெய் ஊற்றி, ஊறவைக்கவும். இரண்டு மணி நேரம் கழித்து, மைதாவில் உருண்டைகள் செய்து, அதன் நடுவில் மரவள்ளிக்கிழங்கு பூரணத்தை சிறிதளவு வைக்கவும். பின்னர் அவற்றை கனமான சப்பாத்திகளாக திரட்டி, சூடான தவாவில் போடவும். சுற்றிலும் நெய் விட்டுச் சுட்டு எடுக்கவும்..வாழைக்காய் ஸ்வீட் போண்டாதேவையானவை: நாட்டு வாழைக்காய் - 2, கோதுமை மாவு - 1 டேபிள் ஸ்பூன், மைதா - ஒரு டேபிள் ஸ்பூன், ரவை - 1 டேபிள் ஸ்பூன், வெல்லம் - 1 டேபிள் ஸ்பூன், உப்பு - 1 சிட்டிகை, ஏலக்காய்த்தூள் - 1 சிட்டிகை, எண்ணெய் - பொரிக்க தேவையான அளவு.செய்முறை: வாழைக்காய்களின் தோலை நீக்கி, உப்பு, வெல்லம் சேர்த்து நன்றாக பிசையவும் (மிக்ஸியில் போட்டுக் கூழாகவும் அரைக்கலாம்). இதனுடன் ஏலக்காய்த்தூள், ரவை, மைதா, கோதுமை மாவைச் சேர்த்து கட்டிகள் இல்லாதவாறு பிசைந்து, சில நிமிடங்கள் ஊறவைக்கவும் (மாவு இறுக்கமாக இருந்தால், சிறிதளவு பால் தெளித்துப் பிசையலாம்). வாணலியில் எண்ணெயை காயவைத்து, ஊறிய மாவை சிறிய போண்டாக்களாக உருட்டிப் போட்டு, பொரித்தெடுக்கவும். பேரீச்சை ஜாமுடன் பரிமாறவும்..மேங்கோ பன்னாதேவையானவை: மாங்காய் - 2, சர்க்கரை - மாங்காயின் சதைப்பகுதி அளவில் 2 மடங்கு, ஏலக்காய்த்தூள் - கால் டீஸ்பூன், வறுத்து அரைத்த சீரகத்தூள் - அரை டீஸ்பூன், மிளகுத்தூள் - கால் சிட்டிகை, கருப்பு உப்பு (அல்லது) சாதாரண உப்பு - 2 டீஸ்பூன்.செய்முறை: மாங்காய்களை கழுவி, பிரஷர் குக்கரில் போட்டு, 2 கப் நீரூற்றி வேகவைத்து, வடிக்கவும் (இந்த நீர், ஜூஸ் தயாரிக்கும்போது உதவும்). மாங்காயின் தோலை உரித்து, கொட்டைகளை நீக்கி, சதைப்பகுதியை நன்றாக மசிக்கவும். இதனுடன் சர்க்கரை, ஏலக்காய்த்தூள், வறுத்து அரைத்த சீரகத்தூள், மிளகுத்தூள், கருப்பு உப்பு சேர்த்து நன்றாக கரைத்து, சுத்தமான பாட்டிலில் நிரப்பி வைக்கவும். இதிலிருந்து 2 அல்லது 3 டீஸ்பூன் எடுத்து ஒரு க்ளாஸில் போட்டு, மாங்காய் வேகவைத்த தண்ணீரைக் கலந்து பரிமாறவும். படங்கள்: கே. கஸ்தூரி