‘நேர்மையான அரசியல் வாதி’ என்பதற்குப் பெயர்போனவர் சுதந்திரப் போராட்ட வீரரும், முன்னாள் சட்டமன்ற, நாடாளுமன்ற உறுப்பினரும், பொதுப்பணித்துறை, வேளாண்துறை அமைச்சருமான மறைந்த கக்கன் அவர்கள். கறைபடாத கரங்களுக்குச் சொந்தக்காரரான அவரின் வாழ்க்கை வரலாறு தற்போது திரைப்படமாக வெளியாகியிருக்கிறது.முன்னதாக, படத்தின் பாடல்கள் வெளியீட்டு விழா, முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தலைமையில் நடைபெற்றது. அவர் வெளியிட்ட குறுந்தட்டை கக்கனின் மகள் கஸ்தூரிபாயும் பேத்தி எஸ்.ராஜேஸ்வரியும் பெற்றுக்கொண்டனர். இந்தத் திரைப்படம் பற்றி கக்கனின் பேத்தியும் சேலம் சரக டி.ஐ.ஜி.யுமான ராஜேஸ்வரியிடம் பேசினோம்.உங்க தாத்தாவோட வாழ்க்கை வரலாறு படமா வந்திருக்கிறதை எப்படி ஃபீல் பண்றீங்க?‘‘ரொம்ப சந்தோஷமா இருக்கு. அடுத்த தலைமுறைக்கு இதுவொரு பாடமா நிச்சயம் இருக்கும். முந்தைய தலைமுறையில அரசியல்வாதிங்க இப்படியும் வாழ்ந்தாங்க அப்படீன்னு எல்லாருக்கும் தெரியணும்.’’இந்தப் படத்தோட உருவாக்கத்துல உங்களோட பங்கு என்ன?‘‘எங்கிட்ட சில தகவல்கள் கேட்டாங்க. ஆனா, அவங்களே நிறைய ரிசர்ச் பண்ணியிருந்திருக்காங்க. அதுபோக எங்கிட்ட கேட்ட குறிப்பிட்ட தகவல்களை மட்டும்தான் நான் கொடுத்தேன். அதுக்கப்புறம் இந்தப் படத்துக்கான சான்று வாங்குறது மாதிரியான சில விஷயங்கள்ல நான் உதவினேன்.’’.இசையை வெளியிட்ட முதலமைச்சர், உங்ககிட்ட என்ன சொன்னாரு?‘‘ ‘ஆல் த பெஸ்ட்’-னு சொன்னாரு. இப்படி ஒரு படம் உருவானதுல ஸ்டாலின் சாருக்கு ரொம்பவே சந்தோஷம்.’’படத்தோட இயக்குநர் ஜோசப் பேபி உள்ளிட்ட படக் குழுவினரோட உழைப்பு பத்தி...‘‘இந்தப் படத்துல ஒரு முக்கியமான விஷயத்தை நான் சொல்லியாகணும்... தாத்தாவை ரொம்ப அடிக்கிற மாதிரி ஒரு காட்சி வரும். அதை எடுக்கும்போது ‘அது நேச்சுரலா வரலை. அதனால உண்மையிலேயே அடிங்க’ன்னு டைரக்டர் சொன்னாராம். ஷூட்டிங் முடிஞ்சப்புறம் பார்த்தா, ஜோசப் பேபியோட உடம்பெல்லாம் காயமா ஆகிடுச்சாம். உண்மையிலேயே எங்க தாத்தா உடம்புலயும் காயங்களோட தழும்புகள் நிறைய இருக்கும். நான் சின்னப்பிள்ளையா இருந்தப்போ, ‘அது என்ன?’ன்னு கேட்டிருக்கேன். ‘அதெல்லாம் நான் வாங்கின அடிம்மா’-ன்னு சொல்லுவாரு. எங்க தாத்தாவுக்கு இருந்தது போலவே அவருக்கும் உடம்பெல்லாம் காயங்களா இருக்கு இப்போ! அந்த அளவுக்கு அவர் ரொம்ப டெடிக்கேட்டடா நடிச்சிருக்காரு. இந்தப் படத்துக்காக இயக்குநர் உள்பட எல்லாருமே அவங்களால முடிஞ்ச அளவுக்கு சிறப்பா உழைச்சிருக்காங்க.’’‘கக்கன் - நேர்மையின் அடையாளம்’ திரைப்படம் எப்படி இருக்கு? அதைப் பார்த்து முடிச்சதும் எப்படி ஃபீல் பண்ணீங்க?‘‘படம் பார்த்துட்டு வந்தவுடனே, ‘இப்படி ஒருத்தர் இருந்திருப்பாரா!’ அப்படீன்னு எங்க ஃபேமலி மெம்பர்ஸ்ல என்னோட பையனுக்கு மட்டுமில்ல... தாத்தாவோட கிரேட் கிராண்ட்சன்ஸ் எல்லாருக்கும் ரொம்ப ஆச்சரியமா இருந்தது. எல்லாரும் கதைன்னு நினைச்சுகிட்டு இருந்தாங்க. இந்தப் படத்தைப் பார்த்தவுடனே உண்மையிலேயே தாத்தா அப்படி இருந்தாருங்கிறது ரொம்ப பெருமையா ஃபீல் பண்ணாங்க.’’.உங்க தாத்தாவுடனான உங்களோட ஞாபகங்களை சொல்ல முடியுமா?‘‘நான் ஒரு பத்து வருஷம்தான் அவர்கூட இருந்திருப்பேன். எனக்கு அப்பல்லாம் அவர் அரசியல்வாதி அப்படீனெல்லாம் தெரியாது, தாத்தான்னு மட்டும்தான் தெரியும். பார்க்கிறதுக்கே ரொம்ப டிவைனா இருப்பாரு. அவரைப் பார்க்கும்போதே அவ்ளோ நல்லா இருக்கும். அவரைப் பார்க்கிறதுக்கு நிறைய பேர் வருவாங்க. யாராவது ஏதாவது வாங்கிட்டு வந்தாலும், அதை வாங்கிக்க மாட்டாரு. வீட்டுக்கு வர்றவங்களுக்கு முதல்ல சாப்பாடுப் போட்டுடணும். அது ரொம்ப முக்கியம் அவருக்கு. ‘பசியோட யாரையும் அனுப்பிடக் கூடாது’ன்னு சொல்லுவாரு. வீட்ல பணம் இல்லைன்னாகூட வந்தவங்களுக்கு எப்படியாவது சாப்பாடு கொடுத்தே ஆகணும்னு சொல்லுவாரு. யார்கிட்டயும் எந்த கிஃப்ட்டும் வாங்கிக்க மாட்டாரு. கீரை விற்கிறவங்கள்லேருந்து எல்லாருக்குமே ரொம்ப மரியாதை கொடுப்பாரு.’’திரைப்படத்துல வராத அவரைப் பத்தி பெருமிதப்படும்படியான விஷயங்களை உங்க அம்மாவோ மாமாக்களோ சொல்லியிருக்காங்களா?‘‘இந்தத் திரைப்படத்துல அவரோட ஆரம்ப கால வாழ்கையைத்தான் நிறையா எடுத்திருக்காங்க. ஆக்சுவலி, அவர் மினிஸ்டர் ஆனதுக்கு அப்புறமாதான் அவரோட கான்ரிபியூஷன் நிறைய இருந்தது. எங்க அம்மா கல்யாணத்துலல்லாம் பார்த்தீங்கன்னா ‘பரிசுப் பொருள்களை தவிர்க்கவும்’-னு பத்திரிகையிலேயே போட்டுட்டாராம். அதையும் மீறி யாரோ ரெண்டு வளையல்களை கிஃப்ட்டா கொடுத்தது அவர் கண்ணுல பட்டுடுச்சாம். அதை யார் கொடுத்தாங்கன்னு கண்டுபுடிச்சி, ‘உங்க ஆசீர்வாதம் மட்டும் போதும். இந்த நகையெல்லாம் வேண்டாம்’னு திருப்பிக் கொடுத்துட்டாராம். கல்யாணத்துக்கு அம்மா பட்டுப் புடவை வாங்கணும்னு சொன்னப்போ, ‘நமக்கு எதுக்கும்மா பட்டெல்லாம்? கதரை போட்டே கல்யாணம் பண்ணிக்கலாம்’னு சொல்லி, அதைத்தான் வாங்கினாராம். இந்த மாதிரி நிறைய சம்பவங்கள் இருக்கு. ஆனா, அவ்வளவையும் ஒரு படத்துல கவர் பண்ண முடியாது. அவங்களால முடிஞ்ச அளவுக்கு கவர் பண்ணியிருக்காங்க... அவ்ளோதான்.’’.உங்களோட இளமை காலம், படிப்பு, குடும்பம் பற்றி...‘‘பாட்டி டீச்சரா இருந்தாங்க. மொத்த குடும்பமே அவங்க சம்பாத்தியத்துலதான் ரன் ஆச்சு. தாத்தா மினிஸ்டரா இருந்தும், அவரோட கான்ரிபியூஷன் ஒண்ணுமே கிடையாது. அதனால ஃபேமிலியை ரன் பண்றதுக்கு பாட்டிதான் முழுக்க முழுக்க ரொம்ப கஷ்டப்பட்டிருக்காங்க. தாத்தா அவரோட பசங்களை செட்டில் பண்ணாமலேயே இறந்துட்டாரு. எல்லாருமே தாங்களாவே படிச்சுதான் செட்டில் ஆனாங்க. அப்பா அந்தமான்ல சீஃப் இன்ஜினியரா இருந்தாரு. அதனால நான் படிச்சதெல்லாமே அந்தமான்லதான். எனக்கு ஒரு பையன் இருக்கான். அவன், லா முடிச்சிருக்கான். கணவர் ரெயில்வேயில ஆஃபீஸரா இருக்காரு.நாங்க அந்தமான்லேருந்து லீவ்லதான் தாத்தாவை வந்து பார்ப்போம். அவர்கிட்டதான் கதை கேட்போம், நிறைய கதை சொல்லுவாரு. அந்தமான்ல செல்லுலார் ஜெயிலைப் பத்திதான் கேட்பார். அப்போல்லாம் ‘காலா பானி’யில உள்ள ஜெயில்லதானே எல்லாரையும் அடைப்பாங்க. அதனால அதைப் பத்திதான் ரொம்ப க்யூரியஸா கேட்பார். அப்பல்லாம் எங்களுக்கு லேங்குவேஜே ஹிந்திதான். தமிழ் சுத்தமா கிடையாது. அதனால நான் ஹிந்தியில பேசும்போதெல்லாம் சிரிப்பாரு. இப்படி அவர்கூட நான் இருந்தது ரொம்ப கொஞ்ச காலம்தான்.’’காவல்துறை அதிகாரியா நீங்க சந்திக்கிற வழக்குகள்லேருந்து சமுதாயத்துல பெண்களோட நிலைமை எப்படி இருக்கு?‘‘பெண்களின் நிலைமை இப்ப ரொம்பவே மேம்பட்டுதான் இருக்கு. எல்லா துறைகள்லயும் பெண்கள் சாதிக்கிறாங்க. அவங்களோட பாதுகாப்புக்கும் நிறைய திட்டங்களை செயல்படுத்தியிருக்காங்க. நிறைய மகளிர் காவல் நிலையங்கள் இருக்கு, அவசர கால உதவிக்கு நிறைய ஹெல்ப் லைன் நம்பர்ஸ் இருக்கு. இப்போ பார்த்தீங்கன்னா குடும்பத்துக்குள்ளேயிருந்து வர்ற பிரச்னைகள் பத்தின கேஸ்கள்தான் அதிகமா வருது. ரேர் கேஸ்ல பார்த்தாலும் நெய்பர்ஸ், ரிலேஷன்ஸ் அந்த மாதிரிதான் இருக்கு. வெளியிலேருந்து வந்து யாரும் க்ரைம் பண்ற மாதிரி நிறைய நடக்கிறதில்லை. பொதுவா எல்லா கேஸுக்குமே டைம் லிமிட் ஃபிக்ஸ் பண்ணிட்டாங்க கோர்ட்ல. அதனால அபார்ட் ஃப்ரம் காம்பன்சேஷன் உடனே சார்ஜ் ஷீட்டும் போட்டுடறோம். இது குட் டிரெண்ட். எந்த கேஸ் வந்தாலும் நாங்க ரிஜிஸ்டர் பண்ணிடறோம்.’’இந்தக் காலத்திலும், வீட்டுலயும் வெளியிலயும் சமூக ஊடகங்கள்லயும் சுதந்திரமா இயங்க முடியாம ஒடுக்கப்படற பெண்களுக்கு உங்களோட அறிவுரை?‘‘பெண்கள் முதல்ல தைரியமா இருக்கணும், வெளியில வரணும். சும்மா அடிக்கிறாங்கன்னா தாங்கிக்கிட்டே இருக்கக் கூடாது. பெண்களுக்கு சுய சம்பாத்தியம் ரொம்ப முக்கியம். பொருளாதாரத் தேவைகளுக்காக யாரையும் சார்ந்து இருக்கக் கூடாது. அட்லீஸ்ட்... அவங்களுக்கு வேண்டிய அளவுக்காவது அவங்க சம்பாதிக்கிறதுக்கான வழியை ஏற்படுத்திக்கணும்.’’ - வாசுகி லட்சுமணன்