அது ஒருவகையான அக்கறை நிறைந்த அடக்குமுறை காலம். சைக்கிள் ஓட்ட கற்றுக்கொண்ட வளர்ந்த பெண் பிள்ளைகள் ‘‘ம்மா... நான் நாளையிலேருந்து ஸ்கூலுக்கு சைக்கிள்ளேயே போட்டுமா?’’ என்று கேட்டு சிறகு விரிக்கத் தயாரானால், அம்மாக்கள் பதறிப்போவார்கள்.‘‘வேணாம் பாப்பா. ரோட்டுல பஸ், லாரிக்காரனுங்க கண்ணுமண்ணு தெரியாம ஓட்டுறாங்க. பயமாக்குது கண்ணு. எப்பவும் போல அப்பாவே உன்னை கொண்டுபோயி விடுவாங்க’’ என்று அந்தச் சிறகுகளுக்கு ரப்பர்பேண்ட் போட்டும(மு)டக்கிவிடுவார்கள்.இந்த நிலை சில ஆண்டுகளுக்கு முன்பு மாறி, புல்லட் மற்றும் கார்களை எடுத்துக் கொண்டு இளைஞிகள் கல்லூரி வருமளவுக்குச் சூழல் உருவானது. ஆனால், இன்றோ நிலைமை தலைகீழாக மாறிவிட்டது! எந்தளவுக்கு என்றால்... அறுபது எழுபது பேர் பயணிக்கும் பேருந்தை அசால்ட்டாக ஓட்டுமளவுக்குப் பெண் பிள்ளைகளின் வீரம் விளைந்து நிற்கிறது!‘கோயம்புத்தூர் பொண்ணுங்கண்ணா அன்பாவும் குறும்பாவும் இருப்பாங்க’ என்ற வழக்கத்தை மாற்றி, ‘நாங்க கெத்தா வீரமும் காட்டுவோமுங்க’ என்று நிரூபித்திருக்கிறார் ஷர்மிளா. கோவை வடவள்ளியைச் சேர்ந்த 24 வயது இளம்பெண்ணான இவர், ‘வெயிட் லைசென்ஸ்’ எனப்படும் கனரக வாகனம் ஓட்டும் உரிமத்தை முறையாகப் பெற்றுள்ளார்..ஃபார்மாவில் டிப்ளமோ படித்துள்ள ஷர்மிளா, கோவை சிட்டியின் தலைநகரான காந்திபுரத்திலிருந்து சோமனூருக்குத் தனியார் பேருந்தை தற்போது இயக்கிக் கொண்டிருக்கிறார். காலை 5 மணியிலிருந்து இரவு 10 மணி வரை சளைக்காமல் டூட்டி பார்க்கிறார் அம்மணி.தனியார் பேருந்துகள் என்றாலே வேகத்துக்கு மட்டுமல்ல இனிமையான பாடல்களுக்குப் பேர் போனவைதான். அதுவும் ஓட்டுநர் இருக்கையில் அழகான ஷர்மிளா எனும்போது மெலடிக்கு கேட்கவா வேண்டும்! ஆனாலும், அடிக்கடி ‘நிமிர்ந்து நில், துணிந்து செல்! சிங்கப் பெண்ணே சிங்கப் பெண்ணே’ என்று உத்வேகம் தரும் பாடல்களும் ஸ்பீக்கரை தெறிக்கவிடுகின்றன!சிங்கிள் ட்ரிப்பை முடித்துவிட்டு வந்த ஷர்மிளாவிடம் பேசினோம்...‘‘டிரைவிங் என்னோட ஆசை இல்ல வெறித்தனமான கனவுங்ணா. எங்கப்பா ஆட்டோ டிரைவர். அவரோட ஆட்டோவை சும்மா வீட்டுப் பக்கத்துல மூவ் பண்றது, ரிவர்ஸ் எடுக்குறதுன்னு ஸ்கூல் டைம்லேயே ஸ்டியரிங்ல கை வெச்சேன். அப்புறம் அது மேலே பெரிய லவ் ஆகிடுச்சு. ஆட்டோவை ஜாலியா ஓட்டக் கத்துக்கிட்டேன். பிறகு முறையா லைசென்ஸ் வாங்கினேன். இப்படித்தான் டிரைவிங் ஃபீல்டுக்குள்ளே வந்தேன்.ஆட்டோவோ காரோ பஸ்ஸோ அதுல உட்கார்ந்து கைய கட்டிட்டு வேடிக்கை பார்க்கிறது சந்தோஷம். ஆனா, கிளட்ச்ல கால் வெச்சு, ஸ்டியரிங்கை வளைச்சு ஓட்டும்போது ஒருவித பரவச உணர்வு கிடைக்கும்! எனக்கு அந்தப் பரவசம் பிடிச்சதாலே டிரைவராயிட்டேன்.எனக்கு ஈஸியா இந்த வேலை கிடைச்சுடல. துவக்க நிலையில ‘பொண்ணுக்கு ஹெவி டிரைவிங் வேலை செட் ஆவாது’ன்னு தவிர்த்துவிட்டாங்க. ‘உன் உயரத்துக்கு பஸ் டிரைவராகணுமா?’ன்னு சீண்டி துரத்தினாங்க. ஆனா, நான் என்னோட கனவுல உறுதியா இருந்தேன். ஆண்கள் எப்படி வாகனத்தை ஓட்டி லைசென்ஸ் வாங்கினாங்களோ அப்படித்தான் நானும் வாங்கினேன். ‘அவங்களுக்கு டிரைவர் வேலை கிடைக்குறப்ப பெண்களுக்கு ஏன் அந்த வேலை கிடைக்கக் கூடாது?’ங்கிறதுதான் என்னோட கேள்வி. என்னால ஹெவி வாகனங்கள் ஓட்ட முடியும் அப்படின்னு தொடர்ந்து நிரூபிச்சுட்டே இருந்தேன்..திடீர்னு எங்க பஸ் ஓனர் என்னை கூப்பிட்டு சாவியை கொடுத்துட்டார். இப்ப என்னோட ஹெவி டிரைவிங் கனவைவிட அவர் என் மேலே வெச்சிருக்கிற நம்பிக்கை ரொம்பப் பெருசா தெரியுது. பல பேர் என்னை நம்பி பஸ்ல ஏறுறாங்க. அவங்களோட பாதுகாப்பும் என் கையில இருக்குதுங்கிற பொறுப்பை நான் நல்லா உணர்ந்திருக்கிறேன்.எந்தச் சூழல்லேயும் எந்த இடத்துலேயும் உணர்ச்சி-வசப்பட்டுடாம ரொம்பத் தெளிவா, விதிகளுக்கு உட்பட்டு சரியா பஸ் ஓட்டிட்டு இருக்கேன். ‘கோவையோட முதல் பெண் பஸ் டிரைவர்!’ அப்படின்னு புகழடைஞ்சதுல இருக்கிற பெருமையைவிட, என்னைய நம்பி சீட்ல உட்காரும் பயணிகள் வைக்கிற நம்பிக்கைதான் எனக்கு ரொம்ப பெரிய சந்தோஷத்தைத் தருது.ஆசை இருக்கிற நிறைய பொண்ணுங்க தைரியமா இப்படி ஹெவி டிரைவிங்குக்கு வரணும், சாதிக்கணும்’’ என்று கியரைப் போட்டார்.போலாம் ரைட் ஷர்மி!-எஸ்.ஷக்தி