குடும்பத் தலைவியாக இருந்து, தற்போது வெற்றிகரமான தொழிலதிபராக ஜொலிக்கிறார் சுகுணா ஷண்முகம். தன்னைப்போலவே எல்லா இல்லத்தரசிகளையும் தொழில் முனைவோராக்க வேண்டுமென்ற உயரிய கொள்கையில் செயல்பட்டு வருகிறார்.படிப்பு, குடும்பம், தொழில் பற்றி சொல்லுங்க...‘‘சேலம் மாவட்டத்துல பிறந்து, அப்பா, அம்மா, தம்பி-ன்னு ஒரு சின்னக் குடும்பத்துல வளர்ந்தேன். பள்ளிக்கூடம் படிச்சிக்கிட்டிருந்தப்பவே என்னை கோயம்புத்தூர் மாவட்டத்துல கல்யாணம் பண்ணிக் கொடுத்துட்டாங்க. என்னோட புகுந்த வீடு ரொம்பப் பெரிய விவசாயக் குடும்பம். என் கணவர் ஷண்முகநாதனும் விவசாயிதான். என் முதல் மகன் பிறந்து, அவனுக்கு ஒரு வயசு ஆனப்புறம்தான் நான் தொடர்ந்து படிக்கணும்னு என் கணவர்கிட்ட சொன்னேன். அதுக்கு என் புகுந்த வீட்டுல எல்லாருமே சப்போர்ட் பண்ணதால டிஸ்டன்ஸ் எஜுகேஷன்ல பி.காம் படிச்சேன். அதுகூட சில கம்ப்யூட்டர் கோர்ஸ்களையும் முடிச்சேன். அதுக்கப்புறமா நிறைய ஃபேஷன் டிஸைனிங் கோர்ஸ் படிச்சி, இப்போ கோவையிலயே ஒரு இன்ஸ்டிடியூட் நடத்திட்டு வர்றேன். ரதீஷ், கிஷோர்னு எனக்கு ரெண்டு மகன்கள். அவங்க பள்ளிக்கூடத்துல படிச்சிக்கிட்டிருக்காங்க.’’தையற்கலையில் ஆர்வம் வந்தது எப்படி?‘‘நான் பி.காம் முடிச்சதும் என் குடும்பத்துல எல்லாரும் பேங்க் எக்ஸாம் எழுதச் சொன்னாங்க. ஆனா, அதைவிட தையல் கத்துக்கிட்டா நல்லா இருக்கும்னு நினைச்சேன். மாமனார் எனக்கு தையல் மிஷின் வாங்கிக் கொடுத்தாரு. எங்க ஊர்ல சொல்லிக் கொடுத்த ஒரு அக்காகிட்ட தையல் கத்துக்கிட்டேன். அப்புறமாதான் கோவையில ஃபேஷன் டிஸைனிங் கோர்ஸ்ல சேர்ந்தேன். வீட்ல எல்லாருமே சப்போர்ட் பண்ணாங்க.’’.ஃபேஷன் இன்ஸ்டிடியூட் தொடங்கினது பற்றி...‘‘ஒரு கட்டத்துல இதையே நாம தொழிலா ஆக்கிக்கிட்டா என்ன-ன்னு தோணுச்சி. அதுக்காக நிறைய இன்ஸ்டிடியூஷன்ல சேர்ந்து, ஃபேஷன் டிஸைனிங் மட்டுமில்லாம ஆரி ஒர்க், ஆர்ட் & கிராஃப்ட், எம்பிராய்டரினு எல்லாத்தையும் கத்துக்கிட்டேன். அதுக்கப்புறம் எங்க ஊர்லயே சின்னதா ஒரு இன்ஸ்டிடியூட்டை ஆரம்பிச்சு, 150 பேருக்கும் மேல சொல்லிக் கொடுத்தேன்.பெரிய அளவுல தொழில் தொடங்கணும்னா சிட்டிக்கு போனாதான் சரியா இருக்கும்கிறதால, கோவையில ஒரு இன்ஸ்டிடியூட்ல வேலைக்குச் சேர்ந்து, மார்க்கெட்டிங் மேனேஜராவும் வேலை செஞ்சேன். அதுக்கப்புறம் ஃபேஷன் டிஸைனிங்ல மாஸ்டர் டிப்ளமோ கோர்ஸை முடிச்சு, கோவையில மட்டுமில்லாம தமிழ்நாடு முழுக்க நடக்கிற எல்லா கான்டஸ்ட்லயும் கலந்துக்க ஆரம்பிச்சேன். நிறைய ஃபேஷன் ஷோக்களுக்கு டிஸைன் பண்ணேன். ஃபேஷன் ஷோக்கள்ல பார்டிசிபேட் பண்ணி, நிறைய பரிசுகளையும் வாங்கினேன். 2017ஆம் வருஷம் தமிழ்நாடு முழுக்க 300-க்கும் அதிகமான டிஸைனர்கள் கலந்துகிட்ட ‘டெக்ஸ்வேலி’ நடத்தினப் போட்டியில ‘பெஸ்ட் கிரியேட்டிவ் டிஸைனர் ஆஃப் தமிழ்நாடு’ அவார்டு வாங்கினேன். அதுக்கடுத்த வருஷம்தான் சொந்தமா இன்ஸ்டிடியூட் ஆரம்பிச்சேன்.’’இதுவரைக்கும் எவ்வளவு பேரை உருவாக்கியிருக்கீங்க?‘‘கடந்த ஆறு வருஷத்துல 1,500-க்கும் அதிகமான ஆடை வடிவமைப்பாளர்களை உருவாக்கியிருக்கேன். கைம்பெண்கள், கணவனால் கைவிடப்பட்டவங்க, ஆதரவற்ற பெண்கள், ஏழைப்பெண்களுக்கு இலவசமா சொல்லிக் கொடுத்துக்கிட்டிருக்கேன். அவங்கள்ல பலருக்கும் தொழில் தொடங்கவும் உதவி செய்யறேன். இதையெல்லாம் தாண்டி என் மாணவர்களுக்கு ஊக்கத்தையும் உற்சாகத்தையும் கொடுக்கிறதுக்காக ரெண்டு மாசத்துக்கு ஒரு தடவை போர்ட்ஃபோலியோ போட்டோ ஷூட் கண்டக்ட் பண்றோம். மார்ச் மாசத்துல மகளிர் தினக் கொண்டாட்டமாவும், அக்டோபர் மாசம் ஃபேஷன் ஆர்ட்ஆனிவசரிக்கும்னு வருஷத்துக்கு ரெண்டு தடவை ஃபேஷன் ஷோ நடத்தறேன். அதுல, அவங்க டிஸைன் பண்ண டிரெஸ்ஸை அவங்களேகூட போட்டுகிட்டு ஷோ பண்ணுவாங்க. அதே போல மாற்றுத் திறனாளிகளுக்காகவே ஒரு ஃபேஷன் ஷோவை நடத்தி, அவங்க போட்டு டிஸ்ப்ளே பண்ண காஸ்ட்லி டிரெஸ் எல்லாத்தையும் அவங்களுக்கே கொடுத்துட்டோம்.’’.உலக சாதனை படைச்சது பற்றி சொல்லுங்க...‘‘போன வருஷம் ஃபேஷன் ஆர்ட் ஸ்டூடண்ட்ஸ் உருவாக்கின 300 டிரெஸ்ஸை, ப்ரொஃபஷனல் மாடல்ஸ்கூட அவங்களையும் ராம்ப்வாக் பண்ண வச்சு தொடர்ந்து மூணு மணிநேரத்துக்குள்ள அத்தனை டிரெஸ்ஸையும் டிஸ்ப்ளே பண்ணி உலக சாதனை படைச்சிருக்கோம். உலகத்துல இதுவரைக்கும் யாருமே அந்தச் சாதனையை பண்ணதில்ல!’’உங்களுக்குக் கிடைச்ச விருதுகள்?‘‘உலக சாதனை படைக்கிறதுக்கு முன்னாடியும் பின்னாடியும் நிறைய விருதுகள் எனக்கும் எங்க இன்ஸ்டிடியூட்டுக்கும் கிடைச்சிருக்கு. கிரியேட்டிவ் டிஸைனர் ஆஃப் தமிழ்நாடு அவார்ட், வுமன் ஆண்ரப்ரனர் அவார்ட், யங் அச்சீவர் அவார்ட், பெஸ்ட் ஆண்ரப்ரனர் அவார்ட், டைனமிக் ஆண்ரப்ரனர் அவார்ட், ‘சாதனைப் பெண்மணி 2023’னு நிறைய விருதுகள் எனக்குக் கிடைச்சிருக்கு. தமிழன் ஐகான் இன்ஸ்டிடியூட், பெஸ்ட் ஃபேஷன் டிஸைனிங் இன்ஸ்டிடியூட் அவார்டை போன வருஷமும் இந்த வருஷமும் கொடுத்திருக்காங்க.’’உங்க எதிர்கால லட்சியம்?‘‘இன்னும் பெரிய லெவல்ல ஃபேஷன் டிஸைனர்களை உருவாக்கணும்கிறதுக்காக நான் இப்பவும் பெங்களூருவுல ஒரு ஹையர் லெவல் கோர்ஸ் படிக்கிறேன். இப்போ கோவையில மூணு ப்ராஞ்ச் ஓப்பன் பண்ணி, அதுல, என் ஸ்டூடண்ட்ஸ் நிறைய பேருக்கு வேலை கொடுத்திருக்கேன். அதே மாதிரி என்னால முடிஞ்சவரைக்கும் தமிழ்நாடு முழுக்க இருக்கிற இல்லத்தரசிகளை தொழில்முனைவோர் ஆக்கி, அவங்களை சொந்தக்கால்ல நிக்கவைக்கணும்.’’ - வாசுகி ராஜா