சவால்கள் நிறைந்த ஃபவுண்ட்ரி (Foundry) தொழிலில் இறங்கி, வெற்றிகரமாக நடத்தி வருகிறார் கோவையைச் சேர்ந்த பாரதி. அலுமினியத்தை உருக்கி, ‘டை காஸ்ட்டிங்’ (Die casting) முறையில் உதிரி பாகங்கள் தயாரிக்கும் ஃபவுண்ட்ரி யூனிட்டை இந்தியாவிலேயே திறமையுடன் நடத்தி வரும் ஒரே பெண் இவர்தான்!கோவை கோல்டுவின்ஸ் நகரில் உள்ளது இவருடைய சி.என்.சி. யூனிட். சிறந்த தலைமைப் பண்பு, சீரிய நிர்வாகம், கடமையின் மேல் உறுதியான நிலைப்பாடு, எதற்காகவும் தம்முடைய உழைப்பை சமரசம் செய்துகொள்ளாத போக்கு இவையெல்லாம் பாரதியுடைய தனிச்சிறப்புகள். அவரிடம் பேசினோம்.‘‘நான் BA corporate secretaryship படித்துள்ளேன். மிகவும் கடினமான இந்தத் தொழிலுக்கு வருவதற்கு முன்னால், திருப்பூரில் எங்கள் குடும்பத்தினர் நடத்தி வந்த கார்மென்ட் கம்பெனி டெய்லரிங் யூனிட், ஆயத்த ஆடைகள் தயாரிக்கும் நிறுவனங்களில் பணியாற்றினேன். மாவுப் பொருள்கள் தயாரித்தல், மசாலாப் பொருள்கள் தயாரித்தல், உடற்பயிற்சிக் கூடம் நடத்தியது என்று பல தொழில்களிலும் எனக்கு அனுபவம் உண்டு!ஆனால், நான் தற்போது நடத்தி வரும் ஃபவுண்ட்ரி தொழிலில் எந்தவொரு முன்அனுபவமும் கிடையாது. இந்தத் தொழில் நிறுவனத்தை என்னுடைய நெருங்கிய உறவினர் நடத்தி வந்தார். பெரும் கடனில் மூழ்கி புதைந்து கொண்டிருந்த அந்த யூனிட்டை, என்னுடைய நகைகள் முழுவதையும் அடகு வைத்து, அதன் மூலம் வந்த பணத்தில் மீட்டெடுத்து நடத்தத் தொடங்கினேன்.இளம் வயது, குடும்பச்சூழல், நாலாபக்கமும் அழுத்தம் மற்றும் நெருக்கடிகளைச் சமாளிக்க வேண்டிய நிலை. தனி ஒருத்தியாய் யூனிட்டுக்கான ஜாப் ஆர்டர்களை (Job Order) பிடிப்பதற்காக 200க்கும் அதிகமான கம்பெனிகளில் ஏறி இறங்கினேன். பலமுறை வெறும் கையுடனே திரும்பி வந்தேன். பிறகு புதிதாக ஃபவுண்ட்ரி யூனிட் ஒன்றை ஆரம்பித்து, உதிரி பாகங்களை தயாரிக்கத் துவங்கினேன். விடாமுயற்சியுடன் போராடி, என்னுடைய ஆட்டோமொபைல் நிறுவனத்துக்காக T.S. மற்றும் IATF சான்றிதழ்களை பெற்றேன்’’ என்றார்..பெண்கள் அவ்வளவு எளிதில் இறங்கி நடத்த முடியாத இந்த ஃபவுண்ட்ரி தொழிலை இளம் வயதில் முன்னின்று வெற்றிகரமாக நடத்தும் இவரின் துணிச்சல், உழைப்பு, தரம், நேர்மை, காலம் தவறாமை ஆகியவற்றைப் பார்த்து ஏராளமான ஆர்டர்கள் தேடி வந்துள்ளன! ஜாப் ஆர்டர்கள் மூலம் கிடைத்த வருமானத்தை வைத்து ‘பிரஷர் டை காஸ்ட்டிங் மெஷின்’ (Pressure die casting machine) வாங்கி, கனரக வாகனங்களுக்கான பிரேக் வால்வுகளை அதிகளவில் தயாரிக்கத் துவங்கியுள்ளார்.தொழிலில் படிப்படியாக உயர்ந்துள்ள இவர், இரண்டு மற்றும் நான்கு சக்கர வாகனங்கள், டெக்ஸ்டைல் இயந்திரங்கள், டெக்ஸ்டைல் எலக்ட்ரானிக் உபகரணங்கள் உள்ளிட்ட பலதரப்பட்ட இயந்திரங்களுக்கு மாதந்தோறும் 100 டன்களுக்கும் அதிகமான உதிரி பாகங்களைத் தயாரித்து வழங்குகிறார். இவருடைய கணவர், மெக்கானிக்கல் துறை சார்ந்த பிஸினஸ் செய்து வருவதால், தொழில் சம்பந்தமான ஆலோசனைகளை அவரிடம் கேட்டு பெற்றுக்கொள்கிறார் பாரதி.ஆரம்ப காலகட்டங்களில் இவருடன் இணைந்து கடுமையான சுமைகளைத் தங்கள் தோள்களில் சுமந்த தொழிலாளர்கள் இன்றுவரை இந்நிறுவனத்தில் தொடர்ந்து பணியாற்றுகிறார்கள். வெளியூர்கள், வெளி மாநிலங்களிலிருந்து கோவைக்கு வந்து, இவருடைய நிறுவனத்தில் பணி செய்யும் 300க்கும் அதிகமானவர்களுக்கு உணவு மற்றும் இருப்பிட வசதியை இலவசமாக வழங்கியுள்ளார். தவிர, உள்ளூரிலேயே வீட்டிலிருந்து வந்து வேலை செய்பவர்களுக்கு மதிய உணவும் இந்நிறுவனத்தில் வழங்கப்படுவது சிறப்பு!‘‘மேடம் மிகவும் தைரியமானவர். எவ்வளவு கடினமான வேலையாக இருந்தாலும் இரவு எவ்வளவு நேரமானாலும் வேலையை முடித்துவிட்டுத்தான் வீட்டுக்குப் போவார். தொழிலாளர்களான எங்கள் எல்லோரையும் சமமாகவும் அன்பாகவும் அக்கறையாகவும் கவனித்துக்கொள்வார்’’ என்று ஒருமித்த குரலில் நெக்குருகி சொல்கிறார்கள் இங்கு பணிபுரியும் ஊழியர்கள்.‘‘ஆயிரம் கோடி வரை டர்ன் ஓவர் செய்வது, இன்னும் பல நூறு பேருக்கு வேலை வாய்ப்புகளை உருவாக்கித் தருவது, இந்திய அளவில் மிக உயரிய வளர்ச்சியுடன் உற்பத்தியில் மிகச் சிறந்த இடத்தை அடைவதே எங்களுடைய எதிர்கால இலக்கு!’’ என்று தன்னம்பிக்கை ததும்ப உறுதியாகச் சொல்கிறார் பாரதி.கவுன்சில் ஸ்டேட் இண்டஸ்ட்ரியல் டெவலப்மென்ட் & இன்ஸ்ட்ரூமென்ட்ஸ் ஆஃப் இண்டியா தேசிய விருது, நேஷனல் இன்டெக் கல்சுரல் அகாடமியின் ஸ்டார் ஆஃப் தமிழ்நாடு விருது, பாரத்ஜோதி விருது, சிறந்த பெண் தொழில் முனைவோருக்கான டாக்டர் லட்சுமி விருது உள்பட ஏராளமான விருதுகளும் பாரதிக்கு வழங்கப்பட்டுள்ளன. சமீபத்தில் இவருக்கு சிறந்த சாதனைப் பெண்மணிக்கான தேசிய விருதை SIDBI Economic Times வழங்கியுள்ளது! - ஆர்.பாலா