அம்மா... தமிழின் வேறெந்த வார்த்தையும் ஈடுசெய்ய முடியாத ஒரு சொல்! எத்தனை வயசானாலும் நமக்கு ஒண்ணுன்னா முதல்ல தேடுறது அம்மாவைத்தான். ஓர் உயிரை இந்தப் பூவுலகுக்குக் கொண்டுவரும் அற்புத உயிரான அம்மாவுக்கு ஈடு இணை எதுவுமில்லை! ‘தாய்நாடு’, ‘தாய்மொழி’ என்று நாட்டையும் மொழியையும் சிறப்பிப்பது அன்னையை உதாரணம் காட்டித்தானே? ‘அன்னையர் தினம்’ உலகெங்கும் கொண்டாடப்படவுள்ள வேளையில் தங்களின் அம்மாக்கள் குறித்துப் பகிர்ந்துகொள்கிறார்கள் சிநேகிதிகள் சிலர்! வைராக்கியம் சொல்லித்தந்த அம்மா!ஜனனி பொன்னர், திருப்பூர்.‘‘திருமணமாகி 2 ஆண் பிள்ளைகளுக்கு அம்மா நான். ஆனாலும், இப்போவரைக்கும் என் அம்மா லெட்சுமிக்கு நான் குழந்தைதான். அப்பா, கணவர் பாசமா இருந்தாலும், அம்மா பாசம் அவங்களைவிடவும் ஒரு படி மேலதான். என்னோட தம்பி அருண், இதயக் குறைபாடோடு பிறந்தவன். அவனுக்கு மருந்து, மாத்திரை வாங்கவே அப்பாவோட சம்பளம், சரியாப் போயிரும். கஷ்டம் வந்தப்போ, கம்பத்துல இருந்து குடும்பத்தோட திருப்பூர் வந்துட்டாங்க. வைராக்கியமா பனியன் கம்பெனி வேலைக்குப் போய் எங்களைப் பார்த்துக்கிட்டாங்க. \தான் சம்பாதிச்ச பணத்தை வெச்சு, குடும்பத்தை ஒத்தப் பொம்பளையா காப்பாத்தினாங்க. நான் தனிக்குடும்பமா இருந்தாலும் ஏதாவது ஒரு பிரச்னைன்னா வந்து நிக்கறதும், பொருளாதார ரீதியா கைகொடுக்கிறதும் அம்மாதான். அவங்களைப் பார்த்து நான் கத்துக்கிட்டது, ‘வைராக்கியம்’தான். ஒரு பொண்ணு வைராக்கியமா இருந்துட்டா, அவளால எதையும் ஜெயிக்க முடியும், எவ்வளவு பெரிய கஷ்டத்துல இருந்தும் மீண்டு வர முடியும் அப்படிங்கிறதுதான். சுருக்கமாச் சொல்லணும்னா எனக்கு எல்லாமே எங்கம்மாதான்!’’.பாராட்டி, கான்ஃபிடென்ஸ் கொடுக்கும் அம்மா!சுபத்ரா நாட்ராயன், அக்ரா, கானா.‘‘மேற்கு ஆப்ரிக்க நாட்டில் வசித்தாலும் நான் ‘குமுதம் சிநேகிதி’யோட தீவிர வாசகிங்கிறதைப் பெருமையாச் சொல்லிக்கிறேன். ஆன் லைன்ல எல்லா கட்டுரைகளையும் விரும்பிப் படிச்சிருவேன். எங்கம்மா வசந்தா, உறவுகளோட மேன்மையை, தான் வாழ்ந்ததன் மூலமாச் சொல்லித் தந்தாங்க. என்னையும் பெரியம்மாவோட நாலு பிள்ளைகளையும் தன்னோட பிள்ளைகள் போலவே பாரபட்சமில்லாம வளர்த்தாங்க.எல்லார்க்கிட்டேயும் அன்பாவும் கனிவாவும் இருக்கணும்னு எப்பவும் சொல்லிக்கிட்டே இருப்பாங்க. பொறுமையும் சகிப்புத்தன்மையும் அம்மாக்கிட்ட அதிகம்! அவங்க வயசுல என்னால அப்படி இருக்க முடியுமான்னு தெரியல. சின்னத் தப்புப் பண்ணாலும் சுட்டிக்காட்டி, அதைச் சரிப்பண்ணுவாங்க. அதேசமயம், முதல் பாராட்டும் அவங்ககிட்ட இருந்துதான் வரும். அது, பெரிய கான்ஃபிடென்ட் கொடுக்கும். பல்லாயிரம் மைல்கள் கடந்து இங்கே வாழுறோம்னா, அதுக்கு அம்மாக்கிட்ட கத்துக்கிட்ட பாடங்கள்தான் துணையா இருக்கு!’’.தந்தையுமான தாய்!வனிதா வெங்கடேஷ், மதுரை.‘‘நான் நாலாம் வகுப்புப் படிக்குறப்பவே அப்பா வேலைக்காக வெளிநாடு போயிட்டார். அம்மா அமுதாதான் என்னையும் தங்கச்சியையும் தனியாளாப் பாத்துக்கிட்டாங்க.நாலு வருஷத்துக்கு ஒரு தடவைதான் அப்பாவால ஊருக்கே வரமுடியும். அதனால ஒரு ஆண் செய்ய வேண்டிய எல்லாத்தையும் எங்கம்மாதான் எங்களுக்குச் செஞ்சு கொடுத்து வளர்த்தாங்க. எங்களுக்கு அம்மாதான் ‘தந்தையுமானவளா’ இருந்தாங்க. இன்னைக்கு டெக்னாலஜி வளர்ந்திருச்சு. வீடியோ கால், சாட்டிங்லாம் இருக்கு. உலகத்துல எந்த மூலையில் இருந்தாலும் மனுஷங்களை நம்ம கண்ணு முன்னால கொண்டு வந்துடுது. 20 வருஷங்களுக்கு முன்னாடி லெட்டர்தான் ஒரே தொடர்பு சாதனமா இருந்துச்சு. அதனால, அப்பா பாசத்தை விர்ச்சுவலாக்கூட அனுபவிக்க முடியலை. அப்பா பாசத்தையும் எங்க அம்மாதான் சேர்த்துப் புகட்டினாங்க. ‘பொம்பளைப் பிள்ளைங்க நல்லா தைரியமா, போல்டா இருக்கணும்’னு சொல்லிச் சொல்லி வளர்த்ததோட, அப்படியே வாழ்ந்தும் காட்டினாங்க அம்மா. அதுதான் இப்போ எனக்கு ரொம்ப உதவியா இருக்கு. எங்கேயும் தயக்கமில்லாம தைரியமாப் போயிட்டு வர்றேன். என்னோட ரோல்மாடல் எங்கம்மாதான்!’’.பாசத்தை மறைத்து வளர்த்த அன்னை!சௌமியா, சென்னை. ‘‘‘வெகு விரைவாக இந்த உலக வாழ்வை விட்டுச் சென்று விடுவோம்!’ எனத் தெரிந்ததாலோ என்னவோ, விவரம் அறியா வயதிலேயே எனக்கான உலகப் பாடத்தைச் சொல்லிச் சென்றுவிட்டார் என்னுடைய அம்மா ஜெயலட்சுமி.நான் பள்ளி செல்லும் வயதில், என்மீது அவர் பாசமாக இருந்ததில்லை. 'சிநேகிதிகளின் அம்மா போல நம்முடைய அம்மா இல்லையே’ என நான் ஏங்கிய நாட்களே ஏராளம். ‘உண்மையாக இருக்கவேண்டும், முடிந்த மட்டும் உழைப்பைக் கொடுக்கவேண்டும், யாரிடமும் சுடுசொல் பேசக்கூடாது, ஒழுக்கத்தைப் பேணவேண்டும்’ எனக்கு உபதேசித்துக்கொண்டே இருந்தார்..கேன்சரால் பாதிக்கப்பட்டிருந்த அவர், எனது 15_ம் வயதில் என்னை விட்டுப்பிரிந்தார். பாசம் வைத்தால் எங்கே என்னைத் தனிமைத் துயர் வாட்டிவிடுமோ? என நினைத்து, பாசம் இல்லாததைப் போல நடித்திருக்கிறார் என்பதையே அப்போதுதான் உணர்ந்தேன். பாசம் இருந்தும் வெளிக்காட்ட முடியாதது எத்தனை பெரிய துயரம்? இந்த உலகைவிட்டுப் பிரிந்தாலும், அவருடைய அணுக்கத்தை நான் இப்போதும் உணர்கிறேன். என் ஒவ்வொரு அடியிலும் இன்றும் வழிகாட்டி, ஆசிர்வதித்துக் கொண்டிருக்கிறார்!’’ . நான் அம்மா பிள்ளை!சின்னத்திரை நடிகை நேகா மேனன்‘‘உங்களுக்கு அம்மா பிடிக்குமா? அப்பா பிடிக்குமா? என்று கேட்டால், ஆப்ஷனே இல்லாமல் நான் அம்மாவைத்தான் சொல்வேன்’’ என்கிறார் நடிகை நேகா மேனன். ‘பாக்கியலட்சுமி’ சீரியலில் ‘அப்பா பிள்ளை’யாக நடிப்பவர், நிஜத்தில் ‘அம்மா பிள்ளை’!‘‘பொண்ணுங்கன்னாலே பொதுவா அப்பா செல்லம்னு சொல்வாங்க இல்லையா? நான் அதுக்கு நேரெதிர்! நான் குழந்தையா இருக்குறப்போ இருந்து என்னோட அப்பா ஃபாரின்ல ஒர்க் பண்றாரு. மூணு மாசத்துக்கு ஒரு தடவைதான் இந்தியா வந்துட்டுப் போவாரு. அதனால, அப்பாவோட பாசத்தையும் சேர்த்துக் கொடுத்தாங்க அம்மா.நான் 10 வயசுலயே நடிக்க வந்துட்டேன். எனக்கு எது வேணும்? எது வேணாம்?னு முடிவு பண்றது அவங்கதான். ஷூட்டிங் ஸ்பாட்டுக்கு என்கூடவே துணையா வருவாங்க. எனக்கு என்ன வேணும்னு பார்த்துப் பார்த்து செய்வாங்க. நான் நடிக்க வந்ததால எனக்காக அவங்களோட வேலையையும் ரிஸைன் பண்ணிட்டாங்க. கடந்த 10 வருஷமா கூடவே இருந்து கண்ணுங்கருத்துமா பாத்துக்கிட்டாங்க.ரெண்டு வருஷத்துக்கு முன்னாடி என்னோட தங்கச்சி ‘சாஹிதி’ பொறந்தா. அவளைக் கவனிச்சுக்கிறதுக்காக, என்னோட அம்மா இப்போல்லாம் ஷூட்டிங்குக்கு வர்றதில்லை. அந்தச் சமயங்கள்ல நான் அம்மாவை ரொம்பவே மிஸ் பண்றேன். இருந்தாலும், எந்த விஷயத்தையும் அம்மாகிட்ட கேட்டுத்தான் செய்வேன்.அம்மம்மா, சித்தி, மாமான்னு கூட்டுக்குடும்பம் எங்களோடது. அதுல, எங்கம்மாதான் ‘டிசிஷன் மேக்கர்’. குடும்பத்துக்குத் தலைவியா இருந்து பார்த்துக்கிறது அவங்கதான். அம்மா மேல குடும்பத்துல எல்லோருக்கும் ஒரு ‘ரெஸ்பெக்ட்’ இருக்கு. அதைப்போலத்தான் நானும் இருக்கணும்னு விரும்பறேன். அப்புறம் எல்லா அம்மாக்களுக்கும் ஹேப்பி மதர்ஸ் டே!’’ - சி.எம். ஆதவன்