-தனுஜா ஜெயராமன் வாகன போக்குவரத்து மிகுந்த பகுதிகளிலும் மக்கள் நடமாட்டம் நிறைந்த தெருக்களிலும் மாடுகள், தெருநாய்கள் அதிகளவில் சுற்றித் திரிகின்றன. இதன் காரணமாக சென்னை அரும்பாக்கத்தில், பள்ளிக்கூடம் சென்றுவிட்டு வீட்டிற்குத் திரும்பிக் கொண்டிருந்த சிறுமியை மாடு ஒன்று ஆக்ரோஷமாக முட்டித் தாக்கிய கொடூர சம்பவம் பொதுமக்களை அதிர்ச்சியில் ஆழ்த்தியுள்ளது..இதேபோன்று அண்டை மாநிலமான கேரளாவில், 10 வயது சிறுமியை தெருநாய்கள் கடித்துக் குதறிய சம்பவமும் கடும் பீதியை கிளப்பியுள்ளது. இந்தச் சம்பவங்கள் குறித்து சிலர் தங்களுடைய கருத்துகளை நம்மிடம் பகிர்ந்து கொண்டார்கள்..ருக்மணி, பள்ளி ஆசிரியை.‘‘பள்ளிச் சிறுமியை மாடு முட்டியது என்கிற செய்தியைக் கேள்விப்பட்டதும், அந்த நேரம் அதிர்ந்து ஆவேசப்பட்டு, உடனே அடுத்த பரபரப்பான செய்திக்கு உணர்ச்சிவசப்பட்டுக் கொண்டிருப்போம். ஆனால், உண்மையில் இது அப்படிச் சாதாரணமாக கடந்து போகக்கூடிய விஷயமல்ல என்பது என்னுடைய கருத்து. சமீபகாலமாக இதுபோன்ற சம்பவங்கள் ஆங்காங்கே நிறைய அரங்கேறுகிறது. நகரமோ கிராமமோ பாரபட்சமின்றி மாடுகள், நாய்கள் தெருவிலும் சாலைகளிலும் தன்னிச்சையாக நடமாடுவது பெரியவர்களுக்கே அச்சத்தை ஏற்படுத்தும்போது குழந்தைகளின் நிலை எவ்வளவு கொடுமையானது என்பது புரியும்.மாடுகளின் உரிமையாளர்கள் சிலர், அவற்றை சாலைகளில் விடுவதும், பால் கறக்கும் நேரத்தில் பாத்திரத்தோடு மாடு இருக்கும் இடத்திற்குப் போய் பால் கறந்து வருவதும்கூட நடக்கிறது என்று கேள்விப்பட்டேன். ஏற்கெனவே நகரத்துக் குழந்தைகள் தெருவில் நடமாடுவதில்லை. கிராமத்துக் குழந்தைகளும் இப்போது அந்த நிலையில்தான் இருக்கிறார்கள். இந்த மாதிரியான வளர்ப்புப் பிராணிகளால் பாதிப்புகள் ஏற்படுவதைத் தடுக்க, அவற்றின் உரிமையாளருக்கு பல்வேறு விதிமுறைகளை அரசு வகுத்து, ஆவண செய்ய வேண்டும்.’’.ஸ்ரீதர் சுப்ரமணியன், சமூக ஆர்வலர், எழுத்தாளர், விலங்குகள் நல ஆர்வலர்.‘‘சிறுமியை மாடு முட்டி காயப்படுத்திய சம்பவத்தால், மனிதர்களிடையே விலங்குகள் வாழ்வது குறித்த விவாதம் பொது மேடைக்கு வந்திருக்கிறது. சிலர் இந்த விஷயத்தில் நாய்களையும் மாடுகளையும் ஒப்பிடுகிறார்கள். இந்த ஒப்பீடே தவறு. தெருவிலேயே பிறந்து ஆதரவு எதுவும் இன்றி தெருவிலேயே வளர்ந்து அங்கேயே மடிந்து போகும் நாய்கள்தான் ‘தெருநாய்கள்’. ஆனால், ‘தெருமாடுகள்’ என்று எதுவும் கிடையாது. எல்லா மாடுகளும் அவற்றின் உரிமையாளரை சார்ந்தே இருக்கின்றன. ‘மாடுகள் வெறிகொள்ளலாமா?’ என்று கேட்கிறார்கள். எல்லா விலங்குகளுக்கும் மனஅழுத்தம் ஏற்படுகிறது. அவை சில நேரங்களில் வெறியாக மாறுவதுண்டு. மாடுகளின் வெறிச்செயலுக்கு அவற்றை அலட்சியமாக தெருவில் உலவ விட்ட உரிமையாளர்களே பொறுப்பேற்க வேண்டும். அவர்கள்மீது வழக்குப் பதிவு செய்து, உரிய தண்டனை உடனடியாக வழங்கப்பட வேண்டும்.தெருநாய்களுக்கு தகுந்த தடுப்பு ஊசியும், ABC எனப்படும் குடும்பக் கட்டுப்பாடு நடவடிக்கைகளையும் அரசாங்கம் முறையாக மேற்கொள்வது அவசியம். ‘சத்துணவுத் திட்டம்’ போல அவற்றின் உணவுத் தேவைக்கான முனைப்புகளை முன்னெடுக்க வேண்டும். இதையும் தன்னார்வலர்கள் மற்றும் வார்டு கவுன்சிலர்கள் உதவியுடன் சுலபமாக நடைமுறைப்படுத்த முடியும். இதன் மூலம் நாய்களின் தாக்குதல்கள் குறையும். நாளடைவில் நாய்களின் எண்ணிக்கை குறைந்து, பிரச்னைகள் பெருமளவு கட்டுக்குள் வரும்.’’.ஜோதி, கல்லூரி பேராசிரியை.‘‘மாடு, நாய் முதலிய வீட்டு விலங்குகள் மனிதர்களை தாக்குகின்றன என்கிற கருத்தில் எனக்கு உடன்பாடில்லை. ஒரு தடவை உணவு அளித்தாலே உயிரையும் கொடுப்பவை அந்த வாயில்லா ஜீவன்கள். வீட்டில் வளர்ப்பதற்காக வாங்கிவிட்டு, அதைப் பொறுப்பில்லாமல் தெருவில் விடும் மனிதர்கள் ஒருபுறம். பசியும் பட்டினியுமாய் உணவைத் தேடி அலையும் இவ்விலங்குகளை கொடுமைப்படுத்தி விளையாடும் இக்கால குழந்தைகள் மறுபுறம்.மாடுகளை வைத்து பால் வியாபாரம் செய்து, பணம் ஈட்டுபவர்களே அவற்றை முறையாக பராமரிக்காமல் வெளியே விடுவது எந்த வகையில் நியாயம்? தன்னை வளர்க்கும் மனிதர்களை, உணவிடும் மனிதர்களை அடையாளம் கண்டு அன்பு செலுத்துவதில் அந்த வாயில்லா ஜீவன்களுக்கு நிகர் வேறு யாருமில்லை. மொத்த குடும்ப சந்தோஷத்துக்கும் உத்தரவாதம் கொடுக்கும் நாய்களை வாங்கி, கழுத்தில் பட்டியை கட்டி, ஒரு வாரத்திலேயே அதைக் கண்காணாத இடத்தில் விட்டு விட்டுப் போகும் மனிதர்களை என்னவென்று சொல்வது?’’.வத்சலா, தொழில் முனைவோர்.‘‘முதலில் அந்தக் குழந்தையை மாடு தாக்கியது என்பதே பெரும் வருத்தம் எனக்கு. இதுபோல மாடுகளை வெளியே நடமாட விடுபவர்களுக்கு கடும் தண்டனை கொடுக்கப்பட வேண்டும். தெருவில் மேய விடப்படும் பசுக்களை மாநகராட்சி கைப்பற்றிக் கொண்டு போய் வைக்கிறது. ஆனால், மாடுகளின் உரிமையாளர்களோ அதற்குண்டான அபராதத் தொகையை கட்டி, அழைத்து வந்து மறுபடியும் சாலையில் விட்டு விடுகிறார்கள். எனவே அரசாங்கம் அந்த அபராதத் தொகையை அதிகப்படுத்த வேண்டும். மறுபடியும் அதே தவறை செய்தால், மாட்டின் உரிமையாளருக்கும் தகுந்த தண்டனை அளிக்கப்பட வேண்டும்.’’.வனஜா செல்வராஜ், ஆடை வடிவமைப்பாளர்.‘‘மாடுகளை அதன் உரிமையாளர்கள் பொறுப்பில்லாமல் நடுரோட்டில் விடும்பொழுது அவை, ஒரு சில காரணங்களால் ஆக்ரோஷமாகி பொதுமக்களுக்கு தொந்தரவை விளைவிக்கின்றன. ஒருமுறை நாங்கள் திண்டிவனம் பைபாஸ் சாலையில் வண்டியில் போய்க் கொண்டிருந்தபோது ஒரு மாடு டக்கென்று சாலையில் குறுக்கிட்டது. வேகமாக சடன் பிரேக் அடித்ததால் நூலிழையில் நாங்கள் உயிர் தப்பினோம். பெரிய விபரீதம் தடுக்கப்பட்டது. ஆனால், அந்தப் படபடப்பும் பயமும் அப்பப்பா... அந்தச் சம்பவத்தை நினைத்தால் இப்போதும் நடுக்கமாக உள்ளது. வாயில்லா ஜீவன்கள் பாவம் என்ன செய்யும்? அவற்றை வளப்பவர்கள் பொறுப்போடு செயல்பட்டால் இதுபோன்ற விபரீதங்களை நிச்சயம் தடுக்கலாம். அரசாங்கமும் தகுந்த விதிமுறைகளை வகுத்து நடைமுறைப்படுத்துவது காலத்தின் கட்டாயம்!’’.மாடுகள் வயிற்றில்‘பிளாஸ்டிக்’ கழிவுகள்!ராப் தங்கதுரை, அசோசியேட் லைஃப் மெம்பர், புளூ க்ராஸ் ஆஃப் இந்தியா.‘‘பள்ளி செல்லும் சிறுமியை மாடு முட்டி தாக்கிய சம்பவம் துரதிர்ஷ்டவசமானது. இனி அப்படி நடக்காமல் இருக்க வேண்டுமானால், அரசின் விதிமுறைகளுக்கு மாடுகள் வளர்ப்போரும் ஒத்துழைப்பு தருவதுதான் ஒரே வழி. மாடு வளர்ப்பதற்கென்று அரசு பல்வேறு விதிமுறைகளை போட்டு, அதை வீதிகளில் திரிய விடுவோர் மீது தகுந்த நடவடிக்கை எடுத்து வருகிறது. ஆனால், அவற்றையெல்லாம் காற்றில் பறக்க விடுவோரை என்னதான் செய்வது?மாடு வளர்ப்போர் அவற்றுக்கு தகுந்த உணவை வழங்காமல், மேய்ச்சலுக்கும் அனுப்பாமல் வீதிகளில் பசியுடன் திரிய விடுகிறார்கள். இதனால் அவை, சாலையோரம் குப்பைமேடுகளில் கிடக்கும் கழிவுகளையும் பிளாஸ்டிக் கவர்களையும் உண்டு, வயிறு பெருத்து அவதிப்படுகின்றன. எங்களிடம் சிகிச்சைக்காக வரும் மாடுகளின் வயிற்றிலிருந்து கிலோ கணக்கில் பிளாஸ்டிக் கழிவுகளை அகற்றியுள்ளோம். பிளாஸ்டிக் கவர்களை விழுங்கிவிட்டு அந்த மாடுகள் படும் வேதனை சொல்லி மாளாது..மாடுகளுக்கு உணவே வைக்காமல் பாலை மட்டும் கறந்துகொள்ளும் உரிமையாளர்களும் உண்டு. அந்த மாடுகள் எலும்பும் தோலுமாக பார்க்கவே பரிதாபமாக காட்சியளிக்கும். அவற்றுக்கு முறையான தடுப்பூசிகளும் போடப்படுவதில்லை. இதனால் மாடுகளின் உடலில் ஆங்காங்கே கொப்புளங்கள் தோன்றி, அவை அவஸ்தைப்படுவதுண்டு.தவிர, மாடுகளை இரவு நேரங்களில் தேசிய நெடுஞ்சாலைகளில் விட்டுவிட்டு கவலையின்றி சிலர் இருக்கிறார்கள். அந்த மாடுகளால் சாலைகளில் வண்டியில் செல்வோருக்கும் ஆபத்து. அப்போது ஏற்படும் விபத்துகளால் மாடுகளுக்கு பலமுறை கால்கள் உடைந்து அவதிப்படும் நிகழ்வுகளும் நடக்கிறது. இதுபோன்று சாலைகளில் கேட்பாரற்று திரியும் மாடுகள் குறித்தத் தகவல்களை 1913 என்ற தொலைபேசி எண்ணில் தொடர்பு கொண்டு தெரிவிக்கலாம். மாநகராட்சி அதிகாரிகள் அந்த மாடுகளை பிடித்து வந்து, 7 நாட்கள் வைத்திருப்பார்கள். அதன் பிறகும் உரிமையாளர் வரவில்லையெனில், அந்த மாடுகள் ‘ப்ளூ க்ராஸ்’ வசம் ஒப்படைக்கப்படும். அதன்பிறகு நீதிமன்றத்தை அணுகித்தான் சம்பந்தப்பட்டவர்கள் அவற்றை உரிமை கோர முடியும்.’’