- நந்து சுந்து ‘‘இந்த வருஷம் விநாயகர் சதுர்த்திக்கு கொழுக்கட்டை நீதான் செய்யப் போறே!’’ என்றாள், அம்மா தேவிகா.‘‘எனக்கு செய்யத் தெரியாதும்மா...’’ என்றாள், மகள் வேதிகா.‘‘நான் சொல்லித் தரேன். அடி பாகம் கெட்டியாக இருக்கற மாதிரி ஒரு வாணலி எடுத்துக்கோ. உருண்டை வெல்லத்தை கன்னாபின்னானு உடைச்சிக்கோ.’’‘‘உடைச்சாச்சு... உடைச்சாச்சு..!’’‘‘ஒரு தேங்காயை எடுத்துக்கோ.’’‘‘இதையும் கன்னாபின்னானு உடைக்கணுமா?’’‘‘ரெண்டா உடைடீ. இப்போ தேங்காயை பூ மாதிரி துருவணும். என்னடீ துருவச் சொன்னா, திருதிருன்னு முழிக்கறே... சரி, விடு... நானே துருவறேன். அம்மா எவ்வளவு அழகா துருவறேன் பாரு...’’‘‘நீ ஒரு ‘துருவற நட்சத்திரம்’ அம்மா..!’’‘‘அடுப்பு பத்த வைச்சு, அதுல வாணலிய வை. உள்ளே நெய் ஊத்து. வெல்லத்தைப் போடு. என்ன ஆகுது?’’‘‘ஐயா... வெல்லம் உருகுதும்மா..!’’‘‘உருகணும்டீ. என்னடீ முனுமுனுன்னு பாட்டு பாடறே?’’‘‘வெல்லம் உருகுதைய்யா முருகான்னு பாடறேன்.’’.‘‘பிள்ளையாருக்கு கொழுக்கட்டை செய்யறப்ப தம்பியை ஏன் இழுக்கறே? ஏழு ஏலக்காயை எடுத்து, பொடி பண்ணிக்கோ.’’‘‘முருகா... ஏனிப்படி ஏலப்பொடிக் கொண்டு...’’ -பாட ஆரம்பித்தாள் வேதிகா.‘‘மறுபடியும் பாடாதேடீ. ஏலக்காய்த்தூளைப் போட்டுக் கிளறு. வாணலியை இறக்கி வை.’’‘‘கொழுக்கட்டை அவ்வளவுதானா?’’‘‘இன்னும் இருக்கு. ‘பூர்ணம்’ செஞ்சாச்சு. அடுத்தது நாம செய்யப் போறது...’’‘‘விஸ்வநாதனா?’’‘‘பகவானே!’’‘‘நீ மேல சொல்லும்மா...’’‘‘ஒரு பாத்திரத்துல நெய் ஊத்தணும்.’’‘‘நெய் சேர்க்காம எந்தப் பதார்த்தமும் இல்லையா?’’‘‘இருக்கே... ஹோட்டல்ல சாப்பிடற நெய் ரோஸ்ட்!’’‘‘நெய்யும் தண்ணியும் ஊத்தியாச்சு.’’‘‘கொதிச்சவுடனே அதுல அரிசி மாவு போடு. அப்புறம் ஒரு சிட்டிகை அளவுக்கு உப்புப் போடு.’’‘‘சித்தியோட கை அளவுக்கா? அதிகம் இல்லே?’’‘‘அது ‘சித்தி கை’ இல்லே. சிட்டிகை! ஐஸ்க்ரீம் ஸ்பூன் அளவுக்கு உப்புப் போடு. இப்போ நல்லா கிளறு...’’‘‘கொழகொழன்னு ஒரு பேஸ்ட் வந்திருக்கும்மா!’’‘‘இதையும் பூர்ணத்தையும் சேர்த்தா கொழுக்கட்டை தயார்!’’.‘‘அவ்வளவுதானா?’’‘‘அவ்வளவேதான்!’’‘‘சரி, விடு... இனிமே நான் பார்த்துக்கறேன். நீ போய் ஃபேன் கீழே உக்காரு...’’ என்றாள், வேதிகா.ஐந்து நிமிடங்கள் கழித்து, சமையலறைக்குத் திரும்பி வந்தாள் தேவிகா.‘‘இட்லி பானையை எடுத்துக்கோ...’’‘‘அது எதுக்கு? கொழுக்கட்டைதான் செஞ்சு முடிச்சாச்சே!’’வாணலியிலிருந்த மாவு பேஸ்ட்டில் பூர்ணத்தைப் போட்டுக் கிளறியிருந்தாள் வேதிகா.‘‘நீதானே ரெண்டையும் சேர்த்தா கொழுக்கட்டைன்னு சொன்னே... ஆமா? மேல வெள்ளையா பசுத்தோல் மாதிரி ஏதோ போர்த்தியிருக்குமே! அது எங்கே காணோம்?’’ஆத்திரமான தேவிகா, மகளை அடிக்க எதையோ தேடிக் கொண்டிருந்தாள்.(அரட்டை தொடரும்)