அம்மா தேவிகாவின் கையில் வந்தனாவின் திருமணப் பத்திரிகை. ‘‘சாயங்காலம் ஏழரை மணிக்கு ரிசப்ஷன். நாம அஞ்சு மணிக்கே போகணும்’’ என்றாள் மகள் வேதிகாவிடம்.தனக்கு மகள் பிறந்தபோது ‘தேவிகா’ என்ற தன் பெயரில் கொஞ்சம் எழுத்துகளை மாற்றிப்போட்டு ‘வேதிகா’ எனப் பெயர் வைத்துவிட்டாள்.இருவர் பெயரிலும் ‘கா’ இருந்ததால் அடிக்கடி சண்டை போட்டு ‘கா’ விட்டுக்கொள்வார்கள்.‘‘எதுக்கு அவ்வளவு சீக்கிரம்? அஞ்சு மணிக்கு 'பேல் பூரி’ கொடுப்பாங்கன்னுதானே போறே? கல்யாண வீட்டு பேல் பூரி, இட்லிக்கு ஊற வெச்ச அரிசி மாதிரி இருக்கும். அதைச் சாப்பிட மெலிசா ஒரு பிளாஸ்டிக் ஸ்பூன் வேற. இலியானா இடுப்பு மாதிரி வளையும் அந்த ஸ்பூன். நான் பியூட்டி பார்லர் போயிட்டு கல்யாணத்துக்கு மெதுவாத்தான் வருவேன்’’ என்றாள் வேதிகா.‘‘பியூட்டி பார்லர் எதுக்கு? நான் பியூட்டி பார்லரா போறேன்?’’‘‘நான் ஸ்டீமிங் செஞ்சுக்கப் போறேன்.’’‘‘மூஞ்சியை வேக வெச்சுக்கப் போறியா?’’‘‘ஆமா!’’‘‘பார்த்து... ரெண்டு விசில் அதிகமா வெச்சிடப் போறாங்க. மூஞ்சி குழைஞ்சுப் போயிடப் போகுது.’’‘‘அதுக்கப்புறம் புருவத்தை த்ரெட்டிங் பண்ணி, மெலிசாக்கப் போறேன்.’’‘‘பாவி... புருவம்னா திக்கா இருக்கணும்டீ. ‘தில்லானா மோகனாம்பாள்’ பத்மினி புருவத்தைப் பாத்திருக்கியா? சிவாஜியும் பத்மினியும் புருவத்தாலயே பேசிப்பாங்க!’’‘‘வாட்ஸ்அப்ல பேசற எனக்கு வண்டி வண்டியா புருவம் எதுக்கு? அதுக்கப்புறம் ஐ லைனர் வைக்கப் போறேன்.’’‘‘என்னைப் பாரு. வீட்ல செஞ்ச மைதான் வைக்கறேன். கரண்டிய அடுப்புல வெச்சு காய்ச்சின மை. கண் எவ்வளவு அழகா இருக்கு பாரு!’’‘‘கண்ணையே அடுப்புல வெச்ச மாதிரிதான் இருக்கு. சகிக்கலே. அப்புறம் மேனிக்யூர்.’’‘‘அப்படின்னா?’’‘‘நகத்துக்கு கலர் பண்றது.’’‘‘புஃப்பே டின்னர்ல வந்து பிசிபேளாபாத்ல கைய விடப்போறே... அதுக்கு நகம் எந்த கலர்ல இருந்தா என்ன? எதுக்கு இத்தனை மெனக்கெடறே?’’‘‘நான் யூத். அப்படித்தான் வரணும். கல்யாணப் பொண்ணு பியூட்டி பார்லர் போய் எப்படி சிங்காரிச்சுக்கிட்டு வருவான்னு பாரு. நீ அம்மாக்காரி. வேணும்னா சிம்பிளா வந்துக்கோ.’’.ஆறு மணிக்கு வேதிகா பியூட்டி பார்லரிலிருந்து வந்துவிட்டாள்.கல்யாண வீட்டுக்குப் போனார்கள். இன்னும் ரிசப்ஷன் ஆரம்பிக்கவில்லை. மணமகள் வந்தனா எளிமையாக ஹோம்லியாக இருந்தாள்.‘‘பியூட்டி பார்லர் போகலியா?’’ என்றாள் வேதிகா.‘‘அது எதுக்கு? இந்த இயற்கை அழகுதான் நல்லா இருக்கு!’’ என்றாள் வந்தனா.‘‘பாத்தியாடீ... பியூட்டி பார்லருக்கே போகலே. இதுதான்டீ குடும்பம்!’’ என்றாள் அம்மா தேவிகா.கால் மணி நேரம் ஆனது. வந்தனா மேடைக்கு வரவில்லை.‘‘நேரமாச்சு. சீக்கிரம் மேடைக்கு வா’’ என்றாள் தேவிகா.‘‘என்னோட அம்மா வரணும்.’’‘‘எங்கே போயிருக்காங்க?’’‘‘பியூட்டி பார்லருக்கு!’’(அரட்டை தொடரும்)- நந்து சுந்து