-அன்புவேலாயுதம்வட ஆற்காடு மாவட்டம் வேலூரில் தோன்றிய ‘சிப்பாய் கலகம்’தான் இந்திய சுதந்திரப் போராட்டத்தின் முதல் தீப்பொறி என்பது பலருக்குத் தெரிந்திருக்கும்..‘‘இந்தக் கட்டுரையின் தலைப்புதான் இந்திய சுதந்திரப் போருக்கும் தலைப்பாக அமைந்தது என்றால் ஆச்சரியமாக இருக்கலாம். ஆனால், இந்தச் சரித்திரத்தை பள்ளியில் படித்தபொழுது, ‘அட... நம் வேலூரிலா!’ என்று விழிகள் விரிய ஆச்சரியப்பட்டிருக்கிறேன். இன்றும் வேலூர் கோட்டையைக் கடக்கின்ற பொழுதெல்லாம் அந்த வீர வரலாறு என் கண் முன்னே விரிகிறது. அது எங்கள் ஊரின் பெருமை!’’ என்கிறார், வேலூர் மாநகராட்சி மேயர் சுஜாதா ஆனந்தகுமார். ‘வேலூர் சிப்பாய் கலகம்’ பற்றிய நினைவுகளை அவர் நம்மிடம் பகிர்ந்து கொண்டார்.‘‘1806ஆ-ம் ஆண்டு ஜூலை மாதம் 10-ஆம் தேதி இந்திய சுதந்திரத்துக்கு அடித்தளமிட்ட நாளாகும். ‘குள்ள நரியாக 100 ஆண்டுகள் வாழ்வதை விட புலியாக ஒரே ஒரு நாள் வாழ சம்மதம்’ என்றார் திப்பு சுல்தான்.பீரங்கிகளாலும் துப்பாக்கிகளாலும் பரங்கியரை போரில் எதிர்கொண்ட திப்பு, பலமுறை அவர்களை தோற்கடித்தார். எனினும், வெள்ளையரால் சீரங்கப்பட்டிணத்தில் நயவஞ்சகமாக கொல்லப்பட்டார். திப்பு சுல்தான் கொல்லப்பட்டப் பிறகு அவருடைய குடும்பத்தினர் வேலூர் கோட்டையில் காவலில் வைக்கப்பட்டனர்..திப்புவிற்கு 12 மகன்களும் 6 மகள்களும் இருந்தனர். இவர்களுடன் திப்புவின் பணியாளர்களையும் சேர்த்து மொத்தம் 300 பேர் கைது செய்யப்பட்டனர். இவர்களை 370 வெள்ளையர்களும் 1,500 இந்திய சிப்பாய்களும் காவல் காத்தனர். அவர்களில் இந்து, முஸ்லிம்களும் இருந்தனர். ஆனால், அவர்களில் தமிழர்களே ஏராளம்!இந்தியச் சிப்பாய்களை வெள்ளையர்கள் நடத்திய முறை வெப்பத்தை உருவாக்கியது. சிப்பாய்கள் காதில் கடுக்கண் அணியக் கூடாது. நெற்றியில் குங்குமமோ விபூதியோ இடக் கூடாது. தாடி வளர்க்கக் கூடாது. தலைப்பாகையாக புதுவகை தொப்பி அணியவேண்டும் என்று வெள்ளையர்கள் கெடுபிடி செய்தனர்.புதிதாக தரப்பட்ட துப்பாக்கி தோட்டாக்களில் மாடு மற்றும் பன்றியின் கொழுப்பு சேர்க்கப்பட்டிருந்ததாக செய்தி உலவியது. இதனால் இந்து, முஸ்லிம் என இரு தரப்பு சிப்பாய்களும் ஆவேசம் அடைந்தனர். வாலாஜாபாத், பெங்களூரு, கொல்லம், பெல்லாரி, ஐதராபாத், பாளையங்கோட்டை, வேலூர் முதலிய ராணுவத்தளங்களில் இருந்த வீரர்கள், கோபத்தால் கொதித்தெழுந்தனர்..அந்தக் காலகட்டத்தில் ராணுவ முகாம்களில் ‘பக்கீர்கள்’ என்ற பெயரில் புரட்சியாளர்கள் இருந்தனர். அவர்கள் மத சாமியார் வேடத்தில் ‘பொம்மலாட்டம்’ கலை நிகழ்ச்சிகள் நடத்தினர். அதில்ஆங்கிலேயர் இறுதியில் தோற்பது போல் காட்சிகள் இருந்தன. விடுதலை உணர்வின் திரிக்கு இதுவும் தீ மூட்டியது. வேலூர் சிப்பாய்கள் கிளர்ச்சியில் முந்தியமைக்கு, திப்பு சுல்தான் குடும்பம் அங்கு இருந்ததே முக்கியக் காரணம்.சீரங்கப்பட்டிணத்திலிருந்து தேச பக்தர்கள் ஏராளமானோர் வேலூரில் ஊடுருவி இருந்தனர். திப்புவின் மூத்த மகன் பத்தே ஹைதரின் தலைமையில் கோட்டையில் ரகசியக் கூட்டங்கள் நடந்தன. கர்னல் மேரியர் என்பவன் வேலூர் கோட்டையில் தலைவனாகவும் திப்புவின் குடும்பத்தின் காவலனாகவும் இருந்தான்..வேலூர் கோட்டையின் களம் யாராலும் யூகிக்க முடியாத அளவு இருந்தது. புரட்சிக்கு முதல் நாள் இரவு, இந்தியச் சிப்பாய்கள்300 பேர் வேலூர் கோட்டைக்கு வந்து சேர்ந்தனர்.ஜூலை 10-ஆம் தேதி அதிகாலை 2 மணி; வேலூரின் விழிகளை தூக்கம் கனத்து போர்த்தியிருந்தது. இந்த நிலையில் திடீரென கேட்ட வேட்டு சத்தத்தில் வேலூர் விழித்தது. கோடை இரவில் காற்றோட்டமாய் தெருக்களில், திண்ணைகளில் உறங்கியோரும் கோட்டையை நோக்கி ஓடினர்.புரட்சி வீரர்கள் ஆயுதக் கிடங்கிலிருந்து தளவாடங்களுடன் வெளியே வந்தனர். கோட்டைக்குள் ஜலகண்டேஸ்வரர் ஆலயம் ஆயுத கிட்டங்கியாக மாறியது.6 பவுண்ட் எடை கொண்ட 2 பீரங்கிகளும் இந்தியச் சிப்பாய்களிடம் இருந்தன.எதுவும் புரியாத கலக்கத்துடன் ஆங்கிலேயே அதிகாரிகள் அரண்மனைகளிலிருந்து வெளியில் வந்தனர்.புரட்சியாளருடன் இந்தியச் சிப்பாய்கள் மொத்தமாக 500 பேராக அணிவகுத்திருந்தனர். ஆங்கிலேயர்கள் தங்கியிருந்த விடுதிகள், மாளிகைகள் சுற்றிவளைக்கப்பட்டன. வெளியே வந்த ஆங்கில அதிகாரிகள் சுட்டு வீழ்த்தப்பட்டனர். திப்புவின் குடும்பத்தை காவல் காத்த கர்னல் மேரியர், உதவி கர்னல்கள் கோம்ஸ், ஈவிங், மிட்செல் உள்ளிட்ட 8 ஆங்கில அதிகாரிகள் தங்குமிடங்கள் குறிவைக்கப்பட்டன. அவர்கள் தேடித் தேடி கொல்லப்பட்டனர்.கோட்டையின் தலைவன் பேங்கோர்ட்டும் தாக்குதலில் கீழே விழுந்தான். ‘நீதானே புதிய தொப்பி போட வைத்தாய்’ என சிப்பாய்கள் அவன்மீது ஆக்ரோஷமாக பாய்ந்து, துப்பாக்கியின் பின்பக்க மரப்பிடியால் அடித்தே கொன்றனர். கோட்டை இந்தியச் சிப்பாய்களின் வசம் வந்தது. கோட்டையின் வாசலில் இந்திய வீரர்கள் காவலுக்கு நிறுத்தப்பட்டனர்.பொன்னிற காலை கதிரொளியில், திப்புவின் குடும்பம் தங்கிய பகுதிக்குள் சிலர் நுழைந்தனர். அவர்களை தலைமை ஏற்க கோரினர். இளவரசர் மொய்சுதின், திப்புவின் புலி சின்னம் பொறிக்கப்பட்ட கொடியை புரட்சியாளர்களிடம் தந்தார். கோஷம் முழங்க கொடி ஏற்றப்பட்டது. இனிப்புகள், உணவு, பானம் வழங்கப்பட்டது.அப்போது திப்புவின் மூத்த மகன் பத்தே ஹைதர் வெளியில் வந்தார். ‘ஒற்றுமையாகவும் கட்டுக்கோப்பாகவும் இருந்து கோட்டையை காப்பாற்றுங்கள்’ என பேசினார். காலை 7:30 மணிக்கு திடீரென நிலைமை மாறியது. சம்பவங்கள் வேறுவிதமாய் திரும்பின. புரட்சியாளர்கள் திகைத்து சிதறினர். அவர்களின் மனவலிமை குன்றியது.அப்போதுதான் அருகில் ஆற்காட்டில் முகாமிட்டிருந்த கர்னல் கில்லெஸ்பி, செய்தியறிந்து வேலூர் நோக்கி விரைந்து கொண்டிருந்தான். அவனுடைய குதிரைப்படையில் கேப்டன் யெங், லெப்டினெண்ட் உட்ஹவுஸ் உள்ளிட்டோர் இருந்தனர். மிரட்சியுடன் அவர்கள் வந்தாலும், வேலூர் கோட்டையில் அவர்கள் கண்ட காட்சி பீதியை போக்கியது.பிரதான வாசலிலோ பின்புறமோ காவலுக்கு யாரும் இல்லை. கில்லெஸ்பி படை எதிர்ப்பின்றி உள்ளே விரைந்தது. இதே நேரம் ஒரு கூட்டம், தெற்கு கோட்டையின் மதில் சுவரில் சிறு கதவு வழியே முண்டியடித்து தப்பிக்க எத்தனித்தது. நெரிசலில் பலர் அகழியில் விழுந்து இறந்தனர். குழப்பத்தை வெள்ளையர் லகுவாக கையாண்டனர். இந்தியச் சிப்பாய்களை கைது செய்து, வரிசையாக சுட்டுக் கொன்றனர். கோட்டையின் தலைமை பொறுப்பை தற்காலிகமாக கில்லெஸ்பி ஏற்றான்.ஆரவாரமாய் புலி வேட்டையாய் தொடங்கிய விடுதலைப் போராட்டம் எலி வேட்டையாய் குறுகியது. 8 மணி நேரத்தில் வேலூர் கோட்டையை ஆங்கிலேயர்கள் மீட்டனர். திப்புவின் குடும்பம் கொல்கத்தா சிறைக்கு மாற்றப்பட்டது. எனினும், வேலூர் புரட்சி ஆங்கிலேயருக்கு அதிர்ச்சி தந்தது. இந்திய சுதந்திரப் போராட்டத்தில் வட இந்தியாவை தென்னிந்தியா... குறிப்பாக, தமிழகம் முந்தியது என்பதற்கு ‘வேலூர் சிப்பாய் கலகம்’ ஒரு சரித்திரச் சான்றாகும்!’’ என்று உரத்த குரலில் பெருமிதமாக சொல்லி முடித்தார்மேயர் சுஜாதா..மூவர்ண கொடிதயாரித்த பெருமை!1947ஆம் ஆண்டு ஆகஸ்ட் 15ஆம் தேதி நாடு சுதந்திரம் அடைந்ததும், டெல்லி செங்கோட்டையில் ஏற்றப்பட்ட சுதந்திரக் கொடி எங்கு தயாரிக்கப்பட்டது தெரியுமா? வேலூர் மாவட்டம் குடியாத்தத்தில் வசித்த கைத்தறி நெசவாளர்களால் உருவாக்கப்பட்டதுதான் அந்த மூவர்ண கொடி. வேலூர் மாவட்டத்திற்கு கிடைத்த மற்றுமொரு பெருமை இது!