-சி.எம். ஆதவன் பாசமுள்ள அம்மா, கோபக்கார அம்மா, ஜாலியான அம்மா... என அம்மா கேரக்டர்களிலேயே அத்தனை வெரைட்டிகள் காட்டி நடித்து, சீரியல் ரசிகர்களை தன் பக்கம் இழுத்து வைத்திருப்பவர் நடிகை ஆர்த்தி ராம்.‘காற்றுக்கென்ன வேலி’, ‘ஈரமான ரோஜாவே - 2’, ‘மீனாட்சி பொண்ணுங்க’, ‘கனா’ என ஒரே சமயத்தில் நான்கு சீரியல்களில் அதகளம் செய்து கொண்டிருப்பவரை, ஷூட்டிங் பிரேக்கில் அழைத்து பேசினோம்..சின்னத்திரைக்கு எப்படி நடிக்க வந்தீர்கள்?‘‘நடிக்க வேண்டும் என்கிற திட்டமிடல் எல்லாம் எனக்கு இல்லை. மத்திய அரசு வேலையில் இருந்ததால் என்னுடைய அப்பா மனோகர், இந்தியாவின் பல மாநிலங்களிலும் வேலை செய்தார். நான் புனேயில் பிறந்தேன். மஹாராஷ்டிரா, ஆந்திரா என சென்று, பெங்களூருவில் செட்டில் ஆனோம். அங்கு கல்லூரியில் எம்.பி.ஏ., காலேஜ் டாப்பர், யுனிவர்சிட்டி ரேங்கர் நான். என்னுடைய அம்மா ரத்தினமாலா, டபுள் டிகிரி முடித்தவர். அதனால் நான் நன்றாக படித்து, நல்ல கௌரவமான வேலையில் இருக்க வேண்டும் என பெற்றோர் விரும்பினர். அப்படியே மும்பை, பெங்களூரு, சென்னை என ஐ.டி., நிறுவனங்களில் பணியில் இருந்தேன்.பள்ளி, கல்லூரியில் படிக்கும்போது நாடகங்களில் நடித்தேன். ‘மஞ்சுநாத் கலாஷேத்ரா’ என்ற நாடகக் குழுவிலும் இருந்தேன். அங்கு பொழுதுபோக்காகத்தான் நடித்துக் கொண்டிருந்தேன். அந்தச் சமயத்தில், சில கன்னட லோக்கல் சேனல்களில் வி.ஜே., ஆகவும் இருந்தேன். இதுவே எனக்கு தொழிலாகவும் அடையாளமாகவும் மாறும் என அப்போது நான் நினைக்கவில்லை. திருமணத்திற்குப் பின்பு ‘மிஸ். சென்னை’ பட்டம் பெற்றேன். அதன்மூலம் விளம்பரங்களில் நடிக்க வாய்ப்பு கிடைத்தது. அதைத் தொடர்ந்து சின்னத்திரை, சினிமா என வந்து விட்டேன்.’’.பார்ப்பதற்கு வடஇந்திய நடிகை போலவே இருக்கிறீர்களே?‘‘ஆமாங்க. எங்களுடைய பூர்வீகம் தமிழ்நாடுதான் என்றாலும் அதிகமாக வடஇந்தியாவிலும் பெங்களூருவிலும்தான் இருந்தோம். என்னுடைய தோற்றத்தையும் அவ்வப்போது நான் இந்தி பேசுவதையும் பார்த்து, ‘நீங்கள் இந்தி நடிகையா?’ என்று கேட்பார்கள். போதாக்குறைக்கு ‘பாரிஸ் ஜெயராஜ்’ படத்தில், வடஇந்தியப் பெண்ணாகவும் நடித்து விட்டேன். தமிழ், தெலுங்கு, கன்னடம், இந்தி, மராத்தி, ஆங்கிலம் என 6 மொழிகள் எனக்கு அத்துபடி. கோவாவில் கொஞ்ச காலம் இருந்ததால் ‘கொங்கணி’ மொழியும் ஓரளவிற்குத் தெரியும்!’’‘பாரிஸ் ஜெயராஜ்’ படத்துக்குப் பிறகு, வேறு படங்களில் உங்களைப் பார்க்க முடியவில்லையே?‘‘அந்தப் படத்திற்கு அடுத்து நிறைய வாய்ப்புகள் வந்தன. ‘டிடி ரிட்டன்ஸ்’ படத்தில் நடிப்பதற்குக்கூட சந்தானம் சார் கேட்டிருந்தார். என்னுடைய சூழ்நிலை காரணமாக நடிக்க முடியவில்லை. ‘இப்படித்தான் ஆடை அணிய வேண்டும், இதுபோன்ற காட்சிகளில் நடிக்க கூடாது!’ என எனக்கென சில பாலிசிகள் வைத்திருக்கிறேன். அதை ஒருபோதும் மீற மாட்டேன். என்னுடைய பாலிசிக்கு ஒத்து வந்தால் பாட்டியாக நடிக்கவும் தயார்!.‘விக்ரம்’ படத்தில் விஜய்சேதுபதியின் மூன்று மனைவிகளில் ஒருவராக நடிப்பதற்கு கேட்டார்கள். அது எனக்கு ஒத்து வராது என்பதால் நடிக்கவில்லை. தவிர, வெளியூர் ஷூட்டிங் சென்று வருவதும் எனக்கு சிரமமாக இருந்தது. இப்படியே பல படங்களில் நடிக்க முடியாமல் போய்விட்டது. விஜய் டி.வி., ஜீ தமிழ் சேனல்களில் நான்கு சீரியல்களில் நடிப்பதற்கும் என்னுடைய பிசினஸை பார்த்துக்கொள்வதற்கும் எனக்கு நேரம் சரியாக இருக்கிறது.’’.என்ன பிசினஸ் பண்ணுகிறீர்கள்?‘‘திருமணமாகி என்னுடைய மகன் பிறந்தபோது வேலையை விட்டிருந்தேன். அதன் பிறகு, என்னுடைய கணவர் ராம்குமாரும் நானும் சேர்ந்து பி.பி.ஓ., ஆரம்பித்தோம். இப்போது வரை அதனை திறம்பட நிர்வகித்து வருகிறோம். தவிர, கட்டுமான நிறுவனமும் நடத்துகிறோம். சென்னை வேளச்சேரியில் எங்களுடைய இடத்தில், இன்ஜினியர் ஒருவரை துணைக்கு வைத்துக் கொண்டு ‘சர்வீஸ் அப்பார்ட்மென்ட்’ கட்டினோம். அப்படித் தொடங்கிய அது, தற்போது கட்டுமான நிறுவனமாக வளர்ச்சியடைந்துள்ளது. தவிர, சென்னை அண்ணாநகரில் எங்களுடைய பங்களா ஒன்றையும் ஷூட்டிங்கிற்காக வாடகைக்கு விட்டிருக்கிறோம்.’’.இத்தனை வேலைகளையும் எப்படி மேனேஜ் பண்ணுகிறீர்கள்?‘‘மனைவியை நன்றாக புரிந்து கொள்கிற அருமையான வாழ்க்கைத் துணை கிடைத்தால் எல்லாமே சாத்தியம்தான். திருமணமாகி நாங்கள் பதினாறாவது ஆண்டைத் தொட்டிருக்கிறோம். என்னுடைய மாமியார் ஜோதிமணி உள்பட குடும்பத்தினரின் ஒத்துழைப்பு இல்லாமல் இதனை எங்களால் நிச்சயமாக செய்ய முடியாது. மாமனார் சுப்பிரமணி, அந்தக் காலத்திலேயே இன்ஜினியரிங் படித்து, துபாயில் வேலை பார்த்தவர். என்னுடைய கணவரும் துபாய், ஆஸ்திரேலியா என வெளிநாடுகளில் வேலை செய்தவர். இப்போது ஐ.டி., நிறுவனத்தில் உயர் பொறுப்பில் இருக்கிறார். இப்படிக் குடும்பத்தினர் அனைவரும் வெளி அனுபவம் உள்ளவர்களாக இருப்பது எங்களுக்கு உதவியாக இருக்கிறது.பிசினஸ் வேலைகளை நானும் கணவரும், நேரம் கிடைக்கும்போதெல்லாம் பார்த்துக்கொள்கிறோம். ஷூட்டிங் இல்லாத நாட்களில் எங்களுடைய அலுவலகத்திற்கு சென்று கணக்கு வழக்கு விவரங்களை சரிபார்த்து வருகிறேன். வீட்டில் இருக்கும் சமயங்களில் என்னுடைய மகன் கிருத்திக்கிற்கு பாடங்களும் சொல்லிக் கொடுப்பேன். நடிகை, தொழிலதிபர், குடும்பத்தலைவி என என்னுடைய ரோல்களை சிறப்பாக செய்வதாக நான் நம்புகிறேன். நீங்களும் திட்டமிட்டு செய்தால் நேரம் போதவில்லை என சொல்ல மாட்டீர்கள்.’’.சினிமாவை விட சீரியலில் நடிப்பது சுலபமாக இருக்கிறதா?‘‘நடிப்பு என்பது பொதுவான விஷயம்தான் என்றாலும், சினிமாவுக்கும் சீரியலுக்கும் வித்தியாசம் இருக்கிறது. சீரியல் ஷூட்டிங் ஸ்பாட்டில் இருப்பது, வீட்டில் இருப்பது போலத்தான் இருக்கும். குடும்பத்தைச் சுற்றியே கதை இருக்கும் என்பதால், நாங்கள் எல்லோரும் குடும்பத்தினர் போலவே பழகுவோம். இதுவும்கூட ஒருவிதத்தில் நன்றாகத்தான் இருக்கிறது.’’விளம்பரங்களில் அதிகம் உங்களை பார்க்க முடிகிறதே?‘‘அதுவும் ஒரு வகையில் நடிப்புதானே! நடிகர் நானியுடன் வேஷ்டி விளம்பரம், ஜுவல்லரி, இன்ஷுரன்ஸ், நெய், வீட்டு உபயோகப் பொருள்கள் என பல விளம்பரங்களில் நடித்திருக்கிறேன். எந்த வகையிலாவது டி.வி.யில் அடிக்கடித் தோன்றி, மக்களோடு இணைந்து இருப்பது சந்தோஷம் தரும் வேலையாக இருக்கிறது.’’அடுத்து நடிக்க இருப்பது?‘‘போனிகபூர் சார் தயாரிப்பில் ஓ.டி.டி.யில் வெளியாக உள்ள ஒரு வெப் சீரிஸில் நடிக்கவிருக்கிறேன். முழுக்க வெளிநாடுகளில் படப்பிடிப்பு நடக்கவிருக்கிறது. விரைவில் இதற்கான அறிவிப்புகள் வெளியாகும்.’’