வீட்டுக்கு வீடு பியூட்டி! அக்னி நட்சத்திரம் உச்சமடையும் மே மாதத்தில், பெண்கள் மட்டுமல்லாமல் ஆண்களும்கூட தங்கள் சருமத்தைப் பாதுகாக்க பல வழிகளில் முயற்சி செய்வது வாடிக்கைதான்.சூரிய கதிர்களின் தாக்கத்திலிருந்து தங்களை தற்காத்துக்கொள்ள பெரும்பாலானோர் Sunscreen Lotion மற்றும் De-tan Cream உபயோகிப்பது உண்டு.சூப்பர் மார்க்கெட்களிலோ ஆன்லைனிலோ வாங்கி பயன்படுத்தக்கூடிய சன்ஸ்க்ரீன் லோஷனால் பலருக்கும் சரும அலர்ஜி, பருக்கள், கண் எரிச்சல் உள்ளிட்ட பாதிப்புகள் ஏற்படுகின்றன. சன்ஸ்கிரீன் லோஷன்களில் Titanium dioxide, Zinc Oxide உள்ளிட்ட ரசாயனங்கள் சேர்க்கப்படுவதே மேற்காணும் பாதிப்புகளுக்குக் காரணம். தவிர, அந்த ரசாயனங்களால் மார்பகப் புற்றுநோய் ஏற்படுவதற்கான வாய்ப்புகளும் அதிகம். இதற்கு ஒரே தீர்வு, வீட்டிலேயே சன்ஸ்க்ரீன் லோஷன் தயாரித்து பயன்படுத்துவதுதான்!ஹோம்மேட் சன்ஸ்கிரீன் லோஷன்!தேவையானவை: ஷியா வெண்ணெய் (Shea Butter) - 100 கிராம், செக்கு தேங்காய் எண்ணெய், Beewax (தேனடையிலிருந்து தயாரிக்கப்படும் மெழுகு போன்ற பொருள்) - தலா 2 டீஸ்பூன், Carrot Seed Oil, செக்கு நல்லெண்ணெய் - தலா 1 டீஸ்பூன்.செய்முறை: ஒரு பேனில் (Pan) தேவையான அளவு தண்ணீர் ஊற்றி, அடுப்பில் வைத்து கொதிக்கவிடவும். அதன்மீது ஒரு பாத்திரத்தை வைக்கவும். அதனுள் ஷிபா வெண்ணெயைப் போட்டு உருக்கி (Double boiler Method), அதனுடன் தேங்காய் எண்ணெய், Beewax சேர்த்து காய்ச்சி, இறக்கி ஆறவைக்கவும். பின்னர் அதை ஃபிரிட்ஜில் 20 நிமிடங்கள் வைத்திருந்து எடுத்து, Carrot Seed Oil, நல்லெண்ணெய் சேர்த்து, க்ரீம் பதம் வரும் வரை நன்றாக கலக்கவும்..ஷிறிதி 40 நிறைந்த இயற்கையான சன்ஸ்கிரீன் லோஷன் இது!சன் டேன் ரிமூவல் பேக்!வெயிலில் அதிகமாக அலைபவர்களுக்கு முகம், கழுத்து, கைகள் ஆகிய பகுதிகள் கருத்துவிடும். அந்தக் கருமையை நீக்குவதற்கு Sun Tan Removal Pack வீட்டிலேயே எப்படிச் செய்வது என்று பார்ப்போம்...ஒரு பாத்திரத்தில் 50 கிராம் கடலை மாவு எடுத்துக் கொள்ளவும். அதனுடன் தயிர், சந்தனம், கஸ்தூரி மஞ்சள் ஆகியவற்றை தலா 1 டீஸ்பூன் சேர்த்து, 5 மில்லி ரோஸ் வாட்டர் ஊற்றி, நன்றாகக் கலந்துகொள்ளவும். இந்தக் கலவையை, கருமை படர்ந்துள்ள சருமத்தில் அப்ளை செய்யவும். நன்றாக காய்ந்ததும் அந்த இடத்தைச் சுத்தமான தண்ணீரால் கழுவவும். இப்படித் தொடர்ந்து செய்து வந்தால், Sun Tan மறைந்துவிடும்.(தொடர்ந்து அழகாகலாம்)தொகுப்பு: ர. நாகரிகன் - சிந்து வருணிகா ரமேஷ்