Snegiti
முகங்கள்: ‘‘அட்டைகள் கடித்தன... யானைகள் துரத்தின..!’’
சிறு வயது முதலே போட்டோக்கள் எடுப்பது எனக்குப் பிடிக்கும். நாங்கள் குடும்பத்தோடு அடிக்கடி சுற்றுலா செல்வோம். அருகிலுள்ள மேற்கு மலைத்தொடர்ச்சி வனப் பகுதிகளுக்குள் பலமுறை போகும் வாய்ப்பும் எனக்குக் கிடைத்தது. எங்கள் ஊருக்கு அருகிலேயே சத்தியமங்கலம் வனப் பகுதி இருந்ததால் நிறையத் தடவை அங்கே சென்றிருக்கிறோம். சிறு வயதிலிருந்தே வனவிலங்குகளைப் பார்க்கும் வாய்ப்பு அதிகமாகக் கிடைத்தது. ‘நாம் பார்க்கும் அரிய காட்சிகளெல்லாம் நாளடைவில் மனத்திரையில் இருந்து அகன்றுவிடுமே...