- சமாத்மிகாதேனி மாவட்டம் கோட்டூரிலுள்ள அரசு மேல்நிலைப் பள்ளியில் கணித ஆசிரியையாக பணியாற்றி வருபவர் நாகரத்தினம். இவர், இப்பள்ளியில் நடைபெறும் நீதி போதனை வகுப்புகளில் ‘தமிழ் பிராமி எழுத்துகளை’ மாணவர்களுக்கு கற்றுக் கொடுக்கும் சீரிய பணியை மேற்கொண்டு வருகிறார். அவரிடம் பேசினோம்..‘‘அப்பா என்னுடைய கைகளைப் பிடித்துக் கொண்டு நூலகத்திற்குள் அழைத்துச் சென்று புத்தகங்களை அறிமுகப்படுத்தியபோது நான் இரண்டாம் வகுப்பு படித்துக் கொண்டிருந்தேன். அம்மாவோ ‘சாண்டில்யன் புத்தகம் எடுத்துக் கொண்டு வா... லக்ஷ்மி எழுதிய புத்தகம் எடுத்துக் கொண்டு வா...’ என்று எழுத்தாளரின் பெயரை குறிப்பிட்டு புத்தகம் எடுத்துவர பணிப்பார். அப்படியாகத்தான் தமிழ், புத்தகங்கள், நூலகம் என்ற புதிய உலகிற்குள் நுழைந்தேன்.படித்து முடித்தவுடன் எனக்குப் பிரியமான ஆசிரியர் பணியில் சேர்ந்தேன். ஒருமுறை நாகப்பட்டினம் மாவட்டத்தில் உள்ள மணல்மேடு என்ற கிராமத்தில் பணிபுரிந்தபோது அப்பள்ளியின் தலைமை ஆசிரியர் இளங்கோவன், ‘பிராமி’யில் சில எழுத்துகளின் நுணுக்கமான வித்தியாசங்களை கற்றுக் கொடுத்தார். தனிப்பட்ட ஆர்வத்தால் நானாகவே மேலும் கற்றுக் கொண்டேன்.பின்னர் அதே ஊரிலுள்ள அரசு மேல்நிலைப் பள்ளியில் பணி மாறுதல் பெற்றேன். பள்ளிகளில் ‘நீதி போதனை’க்காக இரண்டு வகுப்புகள் ஒதுக்குவார்கள். அதில், மாணவர்களுக்காக கையெழுத்து பிரதி இதழ் ஒன்றை நடத்தினேன். மாணவர்கள் எழுதும் கதை, கவிதை, கட்டுரை போன்ற படைப்புகள் அந்த இதழில் வெளியாகும். கூடவே அவர்களுக்கு ‘பிராமி’ எழுத்துகளையும் கற்றுக் கொடுக்க ஆரம்பித்தேன்..ஒவ்வொரு மாணவருக்கும் கி 4 சைஸ் பேப்பர் ஒன்றை கொடுத்து, 10 திருக்குறள்களை எழுதச் சொன்னேன். 133 மாணவர்கள் அந்த 10 குறள்களையும் தமிழில் எழுதிக் கொண்டு வந்தார்கள். பிராமி நன்கு அறிந்த மாணவர்கள் அவற்றை பிராமியில் எழுதினார்கள். அப்படி 1330 குறள்களையும் மாணவர்கள் பிராமியில் எழுதினார்கள். அதை ஸ்பைரல் பைண்டிங் செய்து, நான் பள்ளிக்குக் கொண்டு வந்தபொழுது சக ஆசிரியர்கள் வியந்து என்னை பாராட்டினர். தவிர, பள்ளியில் ஆசிரியர் தின விழாவின்போது மாணவர்கள் வாழ்த்து அட்டைகள் முழுவதையும் பிராமியில் எழுதிக் கொடுத்தார்கள். நான் மிகவும் சந்தோஷமாக உணர்ந்த தருணம் அது!தொல்லியல் துறை இயக்குனராக உதயச்சந்திரன் ஐ.ஏ.எஸ்., அவர்கள் பதவி வகித்தபோது, மரியாதை நிமித்த மாக அவரைச் சந்தித்தேன். பிராமி எழுத்துகளை மாணவர்களுக்கு நான் கற்றுக் கொடுப்பதை அறிந்து, மிகவும் என்னை பாராட்டினார். அவரிடமிருந்து கிடைத்த அங்கீகாரம் எனக்கு மகிழ்ச்சியாகவும் உத்வேகம் தருவதாகவும் அமைந்தது. தொடர்ந்து பள்ளிகளில் மாணவர்களுக்கு கற்றுக் கொடுக்க ஆரம்பித்தேன்..ஓய்வுபெற்ற ஐ.ஏ.எஸ்., அதிகாரியான பாலகிருஷ்ணன் ஐயா அவர்கள், ஒடிசா மாநில கூடுதல் தலைமைச் செயலாளராகவும் வளர்ச்சி ஆணையராகவும் பணியாற்றி, ஓய்விற்குப் பிறகு அம்மாநிலத்தின் சிறப்புத் தலைமை ஆலோசகர் பொறுப்பில் உள்ளார். அவருடைய நூல் வெளியீட்டு விழாவுக்கு நான் சென்றிருந்தபோது, அங்கே ‘ரோஜா முத்தையா ஆராய்ச்சி நூலகம்’ பற்றி குறிப்பிட்டார். நைந்து போன அட்டைகளுடன் பழுப்பேறிய காகிதங்களுடன் அழியும் நிலையில் இருந்த, பழைய புத்தகங்களை புதுப்பிக்கும் உன்னதமான பணிகள் அந்த நூலகத்தில் நடந்து கொண்டிருப்பது பற்றி விளக்கினார்.பழைய புத்தகங்களை பாதுகாப்பது எவ்வளவு அவசியமானது என்பதையும் அதன் முக்கியத்துவத்தையும் விளக்கினார். ‘அந்த நூலகம் எங்கே இருக்கிறது? எவ்வாறு தொடர்பு கொள்வது?’ என்ற விவரங்களை பாலகிருஷ்ணன் ஐயா அவர்களிடமிருந்து தெரிந்து கொண்டேன்.அந்த நூலகத்திற்கு பலரும் நன்கொடைகள் தந்தார்கள். அந்த நூலகத்தில் நம்மால் ஒரு புத்தகமாவது உயிர் பெற்றால், பல மாணவர்கள் படிப்பிற்கு உதவியாக இருக்குமே என்று எண்ணி, மாதந்தோறும் ஐந்தாயிரம் ரூபாய் அனுப்பி வருகிறேன். அந்தத் தொகை, பழைய புத்தகத்தை புதுப்பிக்கும் பணிக்கு செலவிடப்படும். ஒருமுறை அந்த நூலகத்திற்கு சென்று பார்த்தேன். எங்கள் ஊரிலுள்ள மிகச் சிறிய நூலகம் மற்றும் பள்ளியிலுள்ள நூலகத்தைத் தவிர அதுவரை நான் வேறெந்த நூலகத்தையும் பார்த்ததில்லை.நான் தற்போது தேனி மாவட்டம் கோட்டூர் அரசு மேல்நிலைப் பள்ளியில் கணித ஆசிரியையாக பணியாற்றி வருகிறேன். இங்கும் நீதி போதனை வகுப்புகளில் தமிழ் பிராமி எழுத்துகளை மாணவர்களுக்கு கற்றுக் கொடுக்கிறேன். அவர்களும் மிகவும் ஆர்வமாக கற்றுக்கொள்கிறார்கள். தவிர, அவர்களின் படைப்புக்காக ‘கையெழுத்து பிரதி இதழ்’ ஒன்றையும் நடத்தி வருகிறேன்..கண் தானம் செய்துள்ளேன். என்னுடைய உடல், மருத்துவக் கல்லூரி மாணவர்களின் ஆராய்ச்சிக்குப் பயன்படட்டும் என்று தேனி அரசு மருத்துவக் கல்லூரியில் உடல் தானமும் அளித்துள்ளேன். என்னுடைய சொந்த ஊரான கோம்பையில் மாணவர்களுக்கு கணித பாடத்திற்கு டியூஷன் எடுத்து வருகிறேன். வார இறுதி நாட்களிலும் விடுமுறை காலத்திலும் அவர்களுக்கு வகுப்பு எடுத்து வருகிறேன். இதற்காக யாரிடமும் பணம் வாங்குவதில்லை.அவர்கள் நன்றாக கல்வி பயின்று பிற்காலத்தில், அவர்களும் இதுபோல பிறருக்கு உபயோகமாக விளங்குவார்கள் என்ற நம்பிக்கை எனக்கு உண்டு. இதுவொரு தொடர் சங்கிலி போல நீண்டு கொண்டே இருக்க வேண்டும் என்பதே என்னுடைய ஆவல். இறக்கும் வரை பிறருக்கு உபயோகமாக இருப்போம். வாழ்க்கையை அர்த்தமுள்ளதாக ஆக்கிக்கொள்வோம்!’’ என்று அழகாக சொல்லி முடித்தார், நாகரத்தினம் டீச்சர்..‘பிராமி’ என்ற ‘தமிழி’!இந்தியாவின் பழம்பெறும் எழுத்து முறைகளில் ‘பிராமி’யும் ஒன்று. இடப்பக்கத்தில் இருந்து வலப்பக்கமாக எழுதப்படும் ஒரு எழுத்து முறை. இவற்றை ‘வட்ட எழுத்துகள்’ என்றும் கூறுவர். தெற்காசியா முழுவதும் இந்த எழுத்து உரு உபயோகப்படுத்தப்பட்டுள்ளது. தமிழ் பிராமி எழுத்துகளை ‘தமிழி’ என்றும் அழைப்பர். பெரும்பாலும் கல்வெட்டுகள் மற்றும் சமய நூல்கள் எழுதவே இந்த எழுத்து முறை பயன்படுத்தப்பட்டுள்ளது. இதன் காலம் கி.மு. மூன்றாம் நூற்றாண்டு முதல் இருக்கக்கூடும் என அறியப்படுகிறது. சில நூற்றாண்டுகள் கழித்து ‘சமஸ்கிருதம்’ தோன்றியதால், சமஸ்கிருதத்தில் உள்ள சில ஒலிகளுக்கு பிராமியில் எழுத்து வடிவம் இல்லை.