‘கடவுளின் நேரடிக் குழந்தைகள்’ என்று ‘சிறப்புக் குழந்தைகளை’ (Special kids) சொல்வார்கள். அவர்களின் உலகம் எப்படிப்பட்டது? அவர்கள் எதிர்கொள்ளும் பிரச்னைகள் என்னென்ன? என்பது பற்றி அறிய, உளவியல் நிபுணர் சிந்து மேனகாவை சந்தித்தோம்.இந்தக் குழந்தைகளோட தினமும் நேரம் செலவிடறது உங்களுக்கு என்ன மாதிரியான உணர்வைத் தருது?‘‘ரொம்பவே ஹாப்பியாதான் இருக்கும். ஏன்னா, நம்மகிட்ட வரக் குழந்தைகள் எல்லாருமே சாதாரண குழந்தைகள் மட்டுமில்லாம... ‘ஸ்பெஷல் சில்ரன்’னு சொல்லப்படக்கூடிய ‘சிறப்புக் குழந்தை’களும் வருவாங்க. அவங்களோட உலகம் எப்பவுமே மழலையாகத்தான் இருக்கும். அந்த மாதிரியான குழந்தைகள சரிசெய்வதன் மூலமா அவங்க பெற்றோருக்கு நாம கொடுக்குற சந்தோஷம், நமக்கு தினசரி ஒரு உந்து சக்தியா இருக்கும்.’’நீங்க பார்த்த குழந்தைகள்ல, மறக்க முடியாத குழந்தை அல்லது அவங்களப் பத்தின நினைவுகள் ஏதாவது?‘‘நாங்க பார்க்குற எல்லா குழந்தையுமே ரொம்ப புதுமையாத்தான் இருப்பாங்க. குறிப்பா, சிறப்புக் குழந்தைகள்னு எடுத்துக்கிட்டா, அவங்களுக்கான ஆய்வுகள் இன்றுவரை உலகெங்கும் நடந்துக்கிட்டுதான் இருக்கு. அதனால ‘இவங்க இப்படித்தான் இருப்பாங்க’ன்னு வகைப்படுத்திட முடியாது. சில குழந்தைகளுக்கு மரபணுரீதியான பிரச்னைகள் இருக்கலாம். சிலருக்கு பெற்றோரின் வளர்ப்பில்கூட பிரச்னைகள் இருக்கலாம். அதைத் தாண்டி சமூக ரீதியா அவங்க சந்திக்கும் சிக்கல்களும் உண்டு. ஆட்டிஸம் குழந்தையோ அல்லது ADHD குழந்தையோ... எவ்வளவு சீக்கிரம் நாம அவங்களோட பிரச்னையை கண்டுகொள்கிறோமோ, அவ்வளவு சீக்கிரம் அவங்கள நம்மால குணப்படுத்த முடியும்.’’தங்களோட குழந்தைக்கு ஆட்டிஸம் இருக்கிறதா பெற்றோர் பலருக்கும் தெரியிறதில்லையே... ஏன்?‘‘இது பெரிய பிரச்னைதான். நாம எவ்வளவு சீக்கிரமா அதைக் கண்டுகொள்றோமோ, அவ்வளவு சீக்கிரமா அதைக் குணப்படுத்த முடியும். பொதுவா ஆட்டிஸம் இருக்கும் குழந்தைகளோட செயல்பாடுன்னு பார்த்தா, ‘சோஷியலைசேஷன்’ (Socialisation). அவங்களால மற்றவங்களோட சகஜமா பேசிப் பழக முடியாது. தற்போது இதுகுறித்த தெளிவு எல்லார்கிட்டயும் வருவதை பார்க்க முடியுது. ஆனா, ஆட்டிஸமுக்கும் ID-ன்னு சொல்லப்படக்கூடிய Intellectual disabilityக்குமே நிறையா வித்தியாசங்கள் இருக்கு. அதைக் கண்டுபிடிக்க, சம்பந்தப்பட்ட குழந்தைக்கு முதல்ல IQ Test எடுக்குறதுதான் சரியான வழி.’’ஆட்டிஸம் குழந்தைகளால சாதாரண குழந்தைகள் போல் நடந்துகொள்ள முடியுமா?‘‘அது, அவங்க பாதிப்போட வீரியத்தப் பொறுத்த விஷயம். Mild categoryக்குள்ள வருபவர்களை சரி செய்றது கொஞ்சம் சுலபம். அவங்களோட வேலைகளை அவங்களையே செய்ய வைக்கிறது போல் சின்னச் சின்ன விஷயங்களை மாற்றலாம். ஆனா, ஆட்டிஸம் குழந்தைகளால மற்றவங்களோட பழக வைக்கிறதுதான் கடினமான விஷயம். அவங்களுக்கென தனித் திறமைகள் இருக்கலாம். சிலர் நல்ல ஓவியராக இருக்கலாம், சிலர் கணிதத்துல சிறந்து விளங்கலாம். அதை நாம சரியா கண்டுபிடிச்சு, அதற்குத் தகுந்த வழியில அவங்கள கொண்டு செல்வதுதான் சரியான அணுகுமுறையா இருக்கும்.’’சில பெற்றோர் சரியான ஒத்துழைப்பு தராமல் இருந்திருக்காங்களா?‘‘எங்கக்கிட்ட வர்ற பேரன்ட்ஸ்ல 90 சதவிகிதம் பேர், முழுமையான ஒத்துழைப்பு தந்திருக்காங்க. சிலர் தங்கள் குழந்தையோட பிரச்னையை ஏற்றுக்கொள்ளாமலும் இருந்திருக்காங்க. நாம யாரையும் கட்டாயப்படுத்த முடியாது. ஆனா, எங்களால முடிஞ்சவரை அவங்களுக்குப் புரியவைக்க முயற்சி செய்வோம்.’’.Mental disorder மாதிரியான பிரச்னைகள் இருக்கிற குழந்தைகளையும் நீங்க பார்த்திருக்கீங்களா?‘‘Hearing impaired, Visually impaired, Learning disabilityன்னு எல்லா வகையான குழந்தைகளையும் நாங்க பார்த்திருக்கோம். இப்போ Learning disability கொண்ட குழந்தைகள் ரொம்பவே அதிகமாகிட்டாங்க. கணக்கு மட்டுமே போடத் தெரியாத குழந்தைகள்கூட இருக்காங்க. அவங்களுக்கு உளவியல்ரீதியான பிரச்னைகள் எதுவும் கிடையாது. அவங்களுக்கு இருக்குறது உடல்ரீதியான பிரச்னை மட்டும்தான். அதைப் பயிற்சிகள் மூலமாவே சரி செய்துட முடியும்.’’குழந்தைகள் மனதளவுல பாதிக்கப்படுவது எதனால்?‘‘சிறப்புக் குழந்தைகள் மட்டுமில்ல... சாதாரண குழந்தைகள்கிட்டயும் பெற்றோராலயோ மற்ற நபர்கள் மூலமாவோ பிரச்னைகள் வரலாம். சின்ன வயதில் ஏற்பட்ட மோசமான நிகழ்வோட பாதிப்புனாலயும் ஏற்படலாம். அப்படிச் சின்ன வயசுல, தன்னோட ஸ்கூல் டீச்சர்னால நிர்வாணமா முட்டிப் போட வைக்கப்பட்ட ஒரு அம்மா, தன்னோட குழந்தையையும் அப்படி யாராவது பண்ணிடுவாங்களோன்னு பயந்து, என்கிட்ட கூட்டிட்டு வந்தாங்க. அந்தத் தண்டனைய அந்த அம்மாவுக்குக் கொடுத்த டீச்சருக்கு இது ஒரு சாதாரண விஷயமா இருந்திருக்கலாம். ஆனா, அதோட பாதிப்பு எந்தளவுக்கு இருந்திருக்கு பாருங்க. அதனால, குழந்தை வளர்ப்புல பெற்றோருக்கு பெரிய பங்கு, கடமை, பொறுப்பு இருக்கு.’’வேலைக்குப் போகும் பெண்கள்ல சிலருக்கு ‘சிறப்புக் குழந்தை’ இருக்கலாம். அவங்களுக்கு நீங்க சொல்ல நினைக்கிற விஷயம்?‘‘யாருமே தனியா எதையும் செய்துட முடியாது. உதவி செய்யும் குழுக்கள் நிறையா இருக்கு. அவங்கள அணுகுறது நல்லதுன்னு சொல்வேன். பொதுவா பெண்களுக்கு, ‘நாமே எல்லாமே செஞ்சிடலாம்’கிற எண்ணம் எப்போதும் இருக்கும். ஆனா, என்னைப் பொறுத்தவரை சிறப்புக் குழந்தைகள் வைத்திருக்கும் அம்மாக்கள் மட்டுமில்ல... எல்லா அம்மாக்களுமே எல்லா வேலையையும் இழுத்துப் போட்டு செய்யாம, வேலைகளை எல்லார்கிட்டயும் பகிர்ந்து தர்றதுதான் புத்திசாலித்தனம்!’’ - ஷா சிந்து மேனகாவின் பேட்டியை வீடியோவாக காண இந்த QR codeஐ ஸ்கேன் செய்யுங்கள்!