இல்லத்தரசிகளின் எவர்டைம் சாய்ஸ், நகைகள்தான். ஆண்டுக்கு ஒரு நகையாவது வாங்க வேண்டும் என்ற ஆர்வம் அவர்களுக்கு எப்போதுமே உண்டு. தற்போது தங்கம் விலை ஏற்ற இறக்கமாக இருந்து கொண்டிருக்கிறது.ஏறுகிற வேகத்தைப் பார்த்தால், சவரன் ரூ.50 ஆயிரத்தை எட்டிவிடுமோ என்ற அச்சத்தில் இருந்த தங்கம், சற்றே இரக்கம் காட்டி, இறக்கத்தில் இருக்கிறது.சரி, இப்போதாவது தங்கம் வாங்கலாமா என்றால், செய்கூலி, சேதாரம், ஜி.எஸ்.டி. என்று எல்லாமுமாகச் சேர்ந்து நாம் வீட்டுக்கு வந்து கணக்குப் பார்த்தால், சவரன் ரூ.50,000 என்ற அளவில்தான் இருக்கிறது.இதில் ‘சேதாரம்’ என்ற விஷயம் நீண்ட நாட்களாகவே பலருக்கும் ஏற்புடையதாகவே இல்லை. வெளிநாடுகளில் இருந்து இந்தியாவுக்கு வந்து நகை வாங்குபவர்கள், சேதாரத்தை எதிர்த்து பெருங்குரல் கொடுக்கின்றனர்.‘‘சேதாரமான தங்கத்தைத் திருப்பித் தா! அல்லது அதை பில்லிலிருந்து எடு!’’ என்று சவுண்ட் விட்டு, தங்கத்துக்கு மட்டும் காசு கொடுத்துச் செல்கின்றனர். அந்த நேரத்தில் யாராவது ஒன்றிரண்டு துணிச்சல்காரர்கள் பக்கத்தில் இருந்தால், அவர்களும் அந்தச் சலுகையைப் பெற்றுவிட முடியும்.‘சேதாரம்’ என்பதே நம்மைச் சுரண்டிப் பிழியும் செயல் என்பது பலருடைய கருத்து. ‘‘தங்கமே அநியாய விலை விற்கிறது. சிரமப்பட்டு அதை வாங்கும்போது, தண்டமாக கடைக்காரர்களுக்கு ஏன் தர வேண்டும் சேதாரத் தொகை?’’ என்று கொந்தளிக்கிறார்கள். அதற்கு முன், சேதாரம் பற்றிப் புரிந்து கொள்வோம்..நம் தாத்தா காலத்தில் பொற்கொல்லர்கள் மூலமே நகைகள் கைத்தொழிலாக செய்யப்பட்டு வந்தது. அப்போது, தங்கத்தை உருக்கும்போதும், கம்பியாக்கும்போதும், தகடாகத் தட்டும்போதும் சில மில்லி கிராம் தங்கம் சேதாரம் ஆகத்தான் செய்தது. அதற்காக கூடுதல் கிராம் தங்கத்தைக் கட்டணமாக வசூலித்தார்கள். அதாவது, 30 கிராமில் ‘கல் வைத்த நெக்லஸ்’ செய்யும்போது, நுணுக்கமான வேலைப்பாட்டின் காரணமாக ஒன்று முதல் இரண்டு கிராம் வரை சேதாரம் ஆவது இயல்பாக இருந்தது. 5 முதல் 7சதவிகிதம் அளவுக்கானது இது.ஆனால், இன்றைய நவீன தொழில்நுட்ப உலகில் அதற்கான வாய்ப்புகள் மிக மிகக் குறைவு. தயாரிப்பு நுட்பம் மாறிவிட்டது. ஆனால், சேதார வசூல் மட்டும் சேதாரமின்றி தொடர்ந்து கொண்டிருக்கிறது. இது நகைகளின் வடிவத்துக்கு ஏற்ப, 20 சதவிகிதம் வரை வசூலிக்கப்படுவது கொள்ளையோ கொள்ளை! ஒரு நகை பத்து கிராமில் செய்வதாக இருந்தால், அதற்கு மேல் இரண்டு கிராம் கூடுதலாக சேர்த்து, அதைக் கம்பியாக இழுத்து, தகடாக அடித்து, அதை வெட்டி, பற்றவைத்து, உருவான நகையை அராவி, உரிய வடிவத்திற்கு அதை உருவாக்கி, தேய்த்து பாலீஷ் செய்து இறுதி வடிவம் கொடுக்க வேண்டும். உருவான நகை பத்து கிராம் அளவு இருக்கும். கூடுதலாக சேர்த்த இரண்டு கிராம் தங்கமானது துண்டுக் கம்பிகளாக, வெட்டிய தகடுகளாக, அராவிய தூளாக (சன்னம் என்பார்கள்) இருக்கும். அதைத் திரும்ப உருக்கினால், இரண்டு கிராம் இருக்காது. அரை கிராம் அளவு குறையும்.சில நகைக் கடைகளில் வாடிக்கை யாளர்களைவிட அதிக அளவில் ஊழியர்கள் இருப்பதும்,யூனிஃபார்ம் உடையணிந்த அழகு மங்கையர் திருமண வீடுபோல வந்தாரை உபசரிப்பதும், அதில் அகமகிழ்ந்து நகை வாங்கும்போதே, சபாரி உடை மனிதர் நமக்கான கழிவை சிறப்புப் பேனா கொண்டு தீட்டித் தருவதும் மகிழ்ச்சியான அனுபவங்கள். ஆனால், அத்தனையும் நமது பணம்தான். நாம் ‘வேஸ்ட்’ செய்து அவர்களுக்கு அளிக்கும் பணத்தைத்தான் அவர்கள் ‘வேஸ்டேஜ்’ என்ற பெயரில் வசூலிக்கிறார்கள். நகைக்கடையின் ஒவ்வொரு புதிய கிளையின் உருவாக்கத்துக்குப் பின்னாலும் ஆதாரமாக இருக்கிறது இந்தச் ‘சேதாரம்’!பூரி மாவு போலத்தான் தங்கமும்!.பொற்கொல்லர் ஒருவரிடம் இதுபற்றிக் கேட்டபோது அவர் சொன்னார்:‘‘ஆண்டு தோறும் பட்டறையைச் சுத்தம் செய்வோம். அப்போது துண்டுகளாகவும் துகள்களாவும் தங்கம் சேகரமாகும். அவற்றைச் சுத்தப்படுத்தி உருக்கி எடுத்தால், பல கிராம் அளவுக்கு தங்கம் தேறும். தங்கத்தின் சேதாரம் காற்றில் கலந்து அருகிலேயேதான் சேகரமாகும். பெரிய நிறுவனங்களுக்கு அவற்றை எப்படிச் சேமிக்க வேண்டும் என்பது தெரியும். எனவே அவர்கள் கூறும் அளவுக்கெல்லாம் தங்கம் வீணாவதில்லை. வாங்கும்போது தெரிந்தே ஏமாறுகிற ஒரே பொருள் தங்கம்தான்.சில மாவட்டங்களில், பொற்கொல்லர் வீடுகளுக்கு அருகிலுள்ள சாக்கடையின் மண்ணைச் சிலர் முறம் கொண்டு சலித்து எடுப்பதும், அதில் ஒட்டிக் கொண்டிருக்கும் தங்கத் துகள்களைச் சேகரிப்பதையும் நம்மில் பலர் பார்த்திருக்கக்கூடும். அவை சேதாரத் துகள்கள்தான்.மரச் சிற்பம் செய்யும்போது, மரத் துகள்கள் வீணாகும். அவற்றை மீண்டும் மறு சுழற்சியில் சிற்பத்துக்குப் பயன்படுத்த முடியாது. சட்டை தைக்கும்போது வெட்டப்படும் துணியில் சில துண்டுகள் வீணாவது இயல்பு. அதை மீண்டும் புதிய சட்டை செய்யப் பயன்படுத்த முடியாது.ஆனால், தங்கத்தில் ஏற்படும் சேதாரம் அப்படியானது அல்ல... அது உலோகமாக இருப்பதால், மீண்டும் அதைப் பயன்படுத்த முடியும். பூரி தயாரிக்கும்போது வட்ட வடிவத்துக்கு வெளியே நின்று வீணாகும் பிசையப்பட்ட கோதுமை மாவு, அடுத்த பூரிக்கான மாவாக இணைத்துக் கொள்ளப்படுவது போல, தங்கமும் வீணாவதில்லை!’’ என்றார்.தங்கத்தின் சேதாரம் மீண்டும் தங்கமாக தானே மாறுகிறது. அதை ஏன் சேதாரம் என்று விழுக்காடு போட்டு பணம் வாங்குகிறார்கள்? இப்படி ஒரு கேள்வி பலருக்கும் தோன்றினாலும், யாரும் எதிர்த்துக் கேள்வி கேட்பதுமில்லை. கேட்க வேண்டும் என்று தோன்றுவதுமில்லை. எல்லா இடத்திலும் நடக்கும் இந்தப் பகல் கொள்ளைக்கு மக்கள் தங்களைப் பலி கொடுத்துப் பல மாமாங்கம் ஆகிறது!சேதாரம் ஏதும் தர வேண்டியதில்லை!‘‘நகை வாங்கும்போது, சேதாரம் ஏதும் தர வேண்டியதே இல்லை. அது கடைக்காரர்களின் லாப விகிதமே!’’ என்று ஒரு பேட்டியில் வெளிப்படையாகச் சொல்லியிருக்கிறார், தமிழகமெங்கும் கிளை பரப்பியிருக்கும் பிரபல நகைக்கடை அதிபர் ஒருவர்..‘‘இன்றைக்கு சில்லறை வர்த்தகத்தில் இருக்கிற சில பெரிய நிறுவனங்கள்கூட, சொந்தமாக தங்கத்தை வாங்கித் தயாரிப்பவர்கள் இல்லை. வெளிச் சந்தையில் நகைகளை வாங்கி விற்பவர்கள்தான். இதனால், அவர்களின் செலவுகள் அதிகமாகி விடுகின்றன. பெரிய கடைக்கான முதலீடு, ஊழியர்கள் சம்பளம், வரவேற்பு செலவினங்கள், இலவசங்கள்... இவற்றையெல்லாம் கையிலிருந்தா போடுவார்கள்? வாடிக்கையாளர்களிடம் தான் வசூலிக்கின்றனர்!எவ்வளவு பெரிய நகை செய்தாலும், அதில் சேதாரம் என்பது 1,000 கிராமுக்கு ஒரு கிராம் என்ற அளவில்தான் இருக்கும். காரணம், தங்கம் வீணாவதே இல்லை. வீட்டில் சமைக்கும் சாதம் மீந்தாலே, மறுநாளைக்கு நீராகாரமாக மாற்றும் கலாசாரம் கொண்ட நாடு இது. அப்படியிருக்க, தங்கம் காற்றில் பறந்தால் விட்டுவிடுவார்களா?’’ என்று கேள்வி எழுப்பிய அவர்,‘‘செய்கூலி என்பது நியாயமாக நடக்கும் செலவினம். அதுவும் அதிகபட்சம் 5 சதவிகிதம் மட்டுமே இருக்கும் என்பது என் கணிப்பு!’’ என்றும் கூறியிருக்கிறார்.இறக்குமதி வரியை மத்திய அரசு உயர்த்தியபோது, பெரும் கொந்தளிப்புடன் களமிறங்கி, கடையடைப்பு செய்து போராட்டத்தில் இறங்கினார்கள் நகைகடைக்காரர்கள். இத்தனைக்கும் லாபத்தில் ஒரு பகுதியை விட்டுத்தர வேண்டி இருந்தபோதே அந்த நிலை. அது மெள்ள வாடிக்கையாளர் தலையில்தான் விடிந்திருக்கும் என்பது வேறு விஷயம். செய்கூலி, சேதாரத்தில்தான் கடையின் பிரகாசமே இருக்கிறது என்பதால் அவர்கள் எப்போதும் அதைக் குறைத்துக்கொள்ளப் போவதில்லை.அரசாங்கம், நகைக்குத் தரச் சான்றுகள் அளிப்பதைக் கட்டாயப்படுத்தியது போல், சேதாரக் கட்டுப்பாட்டையும் கொண்டு வந்தால் மட்டுமே இந்தப் பகல் கொள்ளை கட்டுக்குள் வரும் என்பதே நிஜம்! வாடிக்கையாளரை வரவைக்கும் டெக்னிக்!ஒரு கடையில் வாங்கிய நகையை இன்னொரு கடையில் மாற்றித் தர மாட்டார்கள். கவனித்திருக்கிறீர்களா? இது வாடிக்கையாளரை மீண்டும் மீண்டும் தங்களை நோக்கியே வர வைக்கும் ஒரு டெக்னிக்! இன்னொன்று, தாங்கள் விற்ற நகையைப் பயன்படுத்தித் திருப்பித் தரும்போது, அழுக்கு, கற்கள் எடுப்பு என்று அங்கும் ஒரு வேஸ்டேஜ் வைப்பார்கள் நகைக் கடைக்காரர்கள். வாங்கிய நகையை அடிக்கடி மாற்றுவது, முன்ஜென்மத்தில் கடைக்காரர்களுக்குப் பட்ட கடனுக்கு கைமாறான செயல். தண்டம் அழ வேண்டும் என்ற நேர்த்திக் கடன். மவுசு குறையாத துபாய் தங்கம்!துபாய்த் தங்கத்துக்கு எப்போதுமே நம்மிடம் ஓர் ஈர்ப்பு உண்டு! காரணம், துபாயில் நகை வாங்கினால், நகை என்ன எடையோ அதற்கு மட்டும்தான் விலை. கூலியோ சேதாரமோ தனியாக வசூலிக்கப்படமாட்டாது. வட இந்தியாவிலும் சேதாரம்’ என்ற வார்த்தை கிடையாது. ஆனால், தரம் உயர்த்துதல், கூடுதல் மதிப்பு என்ற பெயரில் அங்கே வசூல் வேட்டை நடக்கிறது. தங்கத்திலும் வந்துவிட்டது போலி!சீனாவில் போலித் தங்கம் உருவாக்கம் என்ற செய்தி அண்மையில் வெளியாகி, திகிலூட்டுகிறது. தங்கம் போன்ற திரவத்தை உருவாக்கி, அதைச் செம்பு, இரும்பு போன்ற உலோகக் கலவைகளில் முக்கி எடுத்தால், தங்கம் போலவே மின்னுகிறது அந்த நகை! உருக்கிப் பார்த்தாலும் தங்கத்தின் தரம் இருப்பதால், இந்தப் புதிய கலவையைத் தரம் காண்பது சிரமம் என்கிறது அத்தகவல். எல்லாவற்றிலும் போலிகளை அறிமுகப்படுத்தும் சீனாவின் இந்தப் புதிய அடாவடி பெரும் தலைவலியாக மாறப்போகிறது என்கிறது பொருளாதார வட்டாரம். கே.டி.எம். நகைகளுக்கு தடை ஏன்?முன்பெல்லாம் நகை செய்பவர்கள் நகையைப் பற்றவைக்க தங்கம், வெள்ளி, செம்பு கலந்த பொடியைப் பயன்படுத்துவார்கள். இது நகையோடு கலந்துவிடும்போது, நகையின் தரம் குறைந்துவிடும். ஆனால், கே.டி.எம். (K.D.M.) வந்த பிறகு அந்தப் பிரச்னை இல்லை. பற்றவைக்கும்போது ஏற்படும் வெப்பத்தில் அது தீய்ந்து போய்விடும். சுத்தமான தங்கம் மட்டும் நகையில் இருக்கும். கே.டி.எம். தங்கம் பிரபலமாக இருந்தாலும், இது ஆரோக்கியத்திற்கு ஆபத்தானது, புற்றுநோயை உண்டாக்கலாம் என்று நிரூபிக்கப்பட்டதால், அது புழக்கத்தில் இருந்து அகற்றப்பட்டது. பிற மேம்பட்ட உலோகக் கலவைகளால் தற்போது நகைகள் உருவாக்கப்படுகின்றன. நகைகள் பளபளக்கணுமா?உங்கள் நகை டல்லடிக்கிறதா? நாட்டு மருந்துக் கடையில் விற்கும் பூந்திக் கொட்டையை வாங்கி, வெந்நீரில் ஊறவையுங்கள். அந்த நீரை பயன்படுத்தி, நகையை பிரஷ் போட்டு மென்மையாக தேய்த்துக் கழுவினால், டல்லடித்த நகையும் டாலடிக்கும்! - எஸ்.பி.அண்ணாமலை