இப்போதெல்லாம் இளம்பெண்கள் மட்டுமல்லாமல் நடுத்தர வயது பெண்களும்கூட இருசக்கர வாகனங்கள் ஓட்டுவதில் ஆர்வம் காட்டுகிறார்கள். புதிதாக ‘டிரைவிங் லைசென்ஸ்’ வாங்கியுள்ளவர்கள், டூ வீலர் உபயோகிப்பது குறித்த சில விவரங்களைத் தெரிந்து கொள்வது அவசியம். இங்கே தரப்பட்டுள்ள வழிகாட்டல்களை பின்பற்றி, உங்கள் சாலை பயணத்தை இனிமையாக்குங்கள்!1. சிலர் வண்டியின் ஸ்டாண்டை எடுத்துவிட்டு அதற்குப் பிறகு ஸ்டீரிங் லாக்கைத் திறப்பார்கள். இது தவறு. ஸ்டீரிங் லாக்கைத் திறந்த பிறகு வண்டி ஸ்டாண்டை நீக்குவதே பாதுகாப்பானது. வண்டிக்கும் நல்லது.2. ஒரு இடத்தில் கொஞ்ச நேரம்தான் வண்டியை நிறுத்தப் போகிறீர்கள் என்றால் சைடு ஸ்டாண்டைப் போடலாம். ஆனால், அதிக நேரம் நிறுத்தும்போதும், அதிக வண்டிகள் உள்ள பகுதியில் நிறுத்தும்போதும் நடு ஸ்டாண்டை (Center stand) போடுவதுதான் புத்திசாலித்தனம்.3. பொதுவாக டூ வீலர்களில் Power mode, Economy mode என்று இரு வகைகள் உண்டு. அதிவேகமாக ஓட்டும்போது வாகனம் ‘பவர் மோடு’க்குத் தானாக மாறிவிடும். இப்படிமாறும்போது எரிபொருள் அதிகம் செலவாகும். 4. பொதுவாக ஹெல்மெட் அணியாத பெண்களை போக்குவரத்து போலீசார் பிடிப்பதில்லை என்ற அனுமானத்தில் ஹெல்மெட்டை தவிர்க்க வேண்டாம். அது உங்கள் தலைக்கான பாதுகாப்பு. வண்டியின் பின்புறம் உங்கள் குழந்தையை அழைத்துச் செல்லும்போது அவர்களுக்கான ஹெல்மெட்டை அணிவித்து அழைத்துச் செல்லுங்கள். விலை மலிவான தரமில்லாத ஹெல்மெட்களை பயன்படுத்த வேண்டாம்..5. பிரேக் போடும்போது முன் சக்கர பிரேக், பின் சக்கர பிரேக் ஆகிய இரண்டையும் மிருதுவாக அழுத்துவது நல்லது. பிரேக்கை அழுத்தும்போது கிளட்ச்சையும் சேர்த்து அழுத்தாதீர்கள்.6. சிலர் மிக அழுத்தமாக ஹேண்டில் பாரைப் பிடித்துக்கொள்வார்கள். இயல்பான விதத்தில் பிடித்துக்கொண்டால் போதுமானது. இல்லையேல், தசைகளுக்கும் நரம்புகளுக்கும் அதிகப்படியான அழுத்தம் உண்டாகும்.7. பின்புறம் யாரையாவது ஏற்றிச் செல்லும்போது ஓட்டும் லாகவம் உங்களுக்குப் பிடிபடும் வரை மெதுவாகவே வண்டியை ஓட்டுங்கள்.8. காலை வேளைகளில் வண்டி எளிதில் கிளம்பாதபோது ‘சோக்’ போட்டு கிளப்புங்கள். சோக்குக்கான ஸ்விட்ச்சை, வண்டி கிளம்பியவுடன், உட்புறம் தள்ளிவிட வேண்டும். நல்ல வேளையாக இப்போது சில டூ வீலர்களில் Ôதானியங்கி சோக்குகள்’ வந்துவிட்டன!9. டூ வீலர்கள் அதிக எடைகளை சுமக்க ஏற்றவை அல்ல. பேலன்ஸ் தவறிவிட வாய்ப்பு உண்டு.10. டூ வீலரில் அதிகபட்சம் எவ்வளவு எடை ஏற்றலாம் என்பதை, வண்டியை வாங்கும்போது தரப்பட்ட கையேட்டில் பாருங்கள். அதில் குறிப்பிட்டுள்ள அதிகபட்ச எடையைத் தாண்டி ஏற்ற வேண்டாம்.11. நீங்கள் பொதுவாக பகலில் மட்டுமே டூ வீலர் ஓட்டுபவராக இருக்கலாம் என்றாலும்கூட, வண்டியிலுள்ள பிரேக் லைட் உள்பட எல்லா விளக்குகளும் எரியும் நிலையில் உள்ளனவா என்பதை உறுதி செய்து கொள்ளுங்கள். ஏதோ அவசரத்துக்கு இரவிலும் நீங்கள் அந்த வண்டியை ஓட்ட நேரலாம். அல்லது உங்களுக்குத் தெரிந்தவர்களுக்கு இரவில் அந்த வண்டியை ஓட்டுவதற்கு அளிக்கும்படி நேரலாம்.12. வண்டியின் முன் முனையில் உட்கார்ந்து கொள்வதைவிட கொஞ்சம் வசதியாக பின்னால் தள்ளி அமர்ந்து, வாகனத்தை இயக்குவது சாலச் சிறந்தது.13. திருப்பங்கள் வரும்போது வண்டியோடு உடலையும் அதற்கு ஏற்றாற்போல் கொஞ்சம் வளைத்துக் கொண்டால், இயல்பாகத் திரும்ப முடியும். திருப்பங்களில் பிரேக் போடுவதைத் தவிர்க்க முயற்சி செய்யுங்கள். அப்போது வேகத்தைக் குறைத்துக்கொள்ளுங்கள்..14. திரும்பும்போது, திரும்பவிருக்கும் திசையை நோக்கி கையைக் காட்டுவதை விட ‘இண்டிகேட்டர்’ (Indicator) பயன்படுத்துவது நல்லது. வெளிச்சம் குறைவானபோது சாலைகளில் நீங்கள் கையை காட்டுவது மற்றவருக்குத் தெரியாமல் போகலாம்.15. சில சமயம் வண்டி ஓட்டுபவர் வலதுபுறம் திரும்புவதாக கைகாட்ட, வண்டியின் பின்னால் உட்கார்ந்திருப்பவர் இடதுபுறம் திரும்புவதாக கைகாட்டிக் கொண்டிருக்கலாம். இதன் காரணமாகவும் விபத்து நிகழலாம். கவனம் தேவை.16. வண்டி வாங்கியதும், அது சுமார் 500 கிலோ மீட்டர் ஓடும் வரை அதிக வேகத்தில் செலுத்த வேண்டாம். இந்தக் காலகட்டத்தில் முடிந்தவரை நல்ல சாலைகளையே தேர்ந்தெடுங்கள். வண்டியின் புதிய பாகங்கள் ஒன்றிணைந்து செயல்பட தங்களை அட்ஜஸ்ட் செய்து கொள்ளும் காலமிது.17. டூ வீலரை பயன்படுத்தும்போது துப்பட்டா, புடவை நுனி போன்றவற்றில் கவனம் தேவை. அவை வண்டிச் சக்கரத்தில் சுத்திக்கொள்ள வாய்ப்பு அளிக்காதீர்கள்.18. வண்டி ஓட்டும்போது டயர் பஞ்சரானால், வண்டியின் வேகத்தைக் குறைக்கும்போது வலது கையை நன்கு உயர்த்தி, பின்புறம் வரும் வாகனங்களுக்கு உங்கள் வண்டி நிற்கப்போவதை உணர்த்துங்கள்.19. பின்னால் உட்காருபவர் ஒரு பக்கமாக உட்கார்ந்து கொள்ளாமல் இருபுறமும் கால்களை போட்டபடி அமர்ந்தால் பேலன்ஸ் செய்து ஓட்டுவது எளிதாக இருக்கும்.20. சாலையில் செல்லும்போது எதிர்பாராமல் பாதியில் வண்டி நின்றுவிட்டால், அந்தச் சாலையின் ஓரமாக வண்டியை தள்ளிச் சென்று ஸ்டாண்ட் போட்டு பாதுகாப்பாக நிறுத்துங்கள். பிறகு வண்டியைக் கிளப்ப முயற்சி செய்யுங்கள். முடியாவிட்டால், மெக்கானிக்கை அழையுங்கள்.21. பெட்ரோலுக்காக வரிசையில் நின்று தங்கள் வண்டிகளில் அதை நிரப்பிக் கொள்பவர்களில் சிலர், டயரில் காற்று அடித்துக்கொள்வதற்காக வேறு ஒரு வரிசையில் நிற்க பிரியப்படாமல் சென்று விடுவதுண்டு. உரிய காற்றழுத்தம் உங்கள் டயர்களில் இருந்தால்தான் நல்லது. அளவுக்கு அதிகமான காற்றழுத்தம் இருந்தால் சக்கரத்துக்குப் போதிய பிடிமானம் இருக்காது. குறைவான காற்றழுத்தம் என்றால் பெட்ரோல் இழப்பு ஏற்படும்..22. பெட்ரோல் பங்க்கில் பெட்ரோல் போடுவதற்காக வண்டியை நிறுத்தும் சமயம் ஒருபோதும் செல்போனை பயன்படுத்தாதீர்கள். இது மிகவும் ஆபத்தான விஷயம்.23. சாலைகளில் செல்லும்போது எந்த ‘லேனில்’ (Lane) சென்று கொண்டிருக்கிறீர்களோ அதிலேயே தொடர்ந்து செல்லுங்கள். பின்புறத்தில் அருகாமையில் எந்த வண்டியும் வரவில்லை என்பதை உறுதிசெய்து கொண்ட பிறகே வேறு லேனுக்கு நீங்கள் மாறலாம்.24. போக்குவரத்துக்கான அடையாளக் குறியீடுகளை தெளிவாகப் புரிந்துகொள்ளுங்கள். அப்போதுதான் அருகில் பள்ளிக்கூடம், ஒரு வழிப்பாதை, ஹார்ன் ஒலி எழுப்பக்கூடாது என்று பலவிதமான எச்சரிக்கைகளை முறையாக பின்பற்ற முடியும்.25. எங்காவது கிளம்பும்போது கொஞ்ச நேரம் முன்னதாகவே வண்டியில் கிளம்புங்கள். இதனால் பதற்றமின்றி உங்களால் சீராக வண்டியை ஓட்டிச் செல்ல முடியும்.26. மழைக்காலங்களில் தண்ணீர் தேங்கியுள்ள இடங்களில் மிக மெதுவாகவே செல்லுங்கள். மேடான பகுதி மீது வண்டியை ஏற்றிச் செல்வதைவிட பள்ளத்தில் அது இறங்கும்போது வண்டிக்கும் உங்களுக்கும் பாதிப்பு அதிகமாக இருக்க வாய்ப்புகள் அதிகம். எனவே கூடுதல் கவனம் தேவை.27. முன்னால் செல்லும் வண்டிக்கு மிக அருகே உங்கள் வண்டியைச் செலுத்த வேண்டாம். முன் வண்டி வேகமாக பிரேக் போட்டால் உங்களால் சமாளித்துக் கொள்வது கஷ்டமாக இருக்கும். அப்படி நீங்களும் வேகமாக பிரேக் போட்டால்கூட உங்களுக்குப் பின்னால் வரும் வண்டி உங்கள் வண்டியில் இடிப்பதற்கு வாய்ப்பு உண்டு.28. செல்போனில் பேசிக்கொண்டு வண்டி ஓட்டுவது பெரும் முட்டாள்தனம். இது சட்டமீறல் என்பதோடு, உங்கள் உயிருக்கேகூட ஆபத்தாகலாம்.29. வண்டியை அவ்வப்போது சர்வீஸுக்கு விடுங்கள். பணத்தை மிச்சம் பிடிக்கிறேன் என்று சர்வீஸுக்கு அனுப்பாமலேயே இருந்தால் பெரியளவில் பாகங்கள் பழுதுபட்டு மிக அதிக செலவுக்கு வழிவகுக்கும். முக்கியமாக, வண்டியிலுள்ள இன்ஜின் ஆயிலை உரிய கால இடைவெளியில் மறக்காமல் மாற்றுங்கள். 30. மாதக்கணக்கில் வெளியூருக்குப் போகிறீர்கள் என்றால், நம்பகமானவர்களிடம் உங்கள் டூ வீலரின் சாவியைக் கொடுத்து, வாரத்துக்கு ஒரு முறையாவது அதன் இன்ஜினை சில நிமிடங்களுக்கு ஸ்டார்ட் செய்து வைக்கும்படி அறிவுறுத்துங்கள்.படம்: கே.கஸ்தூரி - அருண் சரண்யா