Snegiti
சிறப்புச் சிறுகதை : நிஜங்களின் நிழல்!
குத்துக்காலிட்டு அமர்ந்திருந்த பேச்சியம்மா எழுந்து கைகளைப் புடவைத் தலைப்பிலேயே துடைத்துக்கொண்டு வந்தாள். மகளிடமிருந்த உருண்டை வடிவத்தை வாங்கிப் பார்த்தாள், மழமழவென்றிருந்தது. வாசனை மூக்கைத் தூக்கியது. குளிப்பதற்கு உபயோகப்படுத்தும் சோப்பு என்பது புரிந்துபோயிற்று. நீளமான அந்த அட்டைப் பெட்டியையும் வாங்கிப் பார்த்தாள். மேலும் இரண்டு சோப்புகள் அதனுள் இருந்தன.