- ஜி.எஸ்.எஸ்.IFSC என்றால் என்ன?வங்கியின் மூலம் பணப்பரிமாற்றம் செய்யும்போது IFSC என்ற விவரத்தைக் கேட்கிறார்களே... அது என்ன?- சுலோச்சனா நாகராஜ், ஓசூர்..‘‘Indian Financial System Code என்பதன் சுருக்கம்தான் இது. 11 இலக்க சங்கேதச் சொல்லான இதில், எழுத்து, எண் ஆகிய இரண்டும் கலந்திருக்கும். அதைக் கொண்டு எந்த வங்கிக் கிளையில் அந்தப் பரிவர்த்தனை நடக்கிறது என்பதை அறிந்துகொள்ளலாம்.இப்படி ஒவ்வொரு கிளைக்குமான IFSCஐத் தீர்மானிப்பது ரிசர்வ் வங்கிதான். இதன் காரணமாக NEFT, RTGS or IMPS ஆகிய எந்த வகையில் பணப் பரிமாற்றம் செய்வதும் எளிதாகவும் துல்லியமாகவும் நடைபெறுகிறது..இதன் முதல் நான்கு இலக்கங்கள் வங்கியின் பெயரைக் குறிக்கின்றன. SBIN, HDFC, CNRB என்பது போலிருக்கும் இந்த இலக்கங்களைப் பார்த்தாலே, அது எந்த வங்கி என்பது புரிந்து விடும். ஐந்தாவது இலக்கம் எப்போதுமே ‘பூஜ்ஜியம்’ என்பதாக இருக்கும். மீதமிருக்கும் ஆறு இலக்கங்களும் அந்தக் குறிப்பிட்ட கிளைக்கான தனித்துவமான எண்ணைக் குறிக்கும்.’’.வங்கி லாக்கரில் நகை வைக்கிறோம். அது திருடு போய்விட்டால், நஷ்ட ஈடு தருவார்களா?- வண்ணை கணேசன், சென்னை-110.‘‘நீங்கள் லாக்கரில் என்ன வைக்கிறீர்கள் என்பதே வங்கிக்குத் தெரியாதபோது ‘நஷ்ட ஈடு’ எப்படித் தருவார்கள்? லாக்கரை வங்கி உங்களுக்குக் குத்தகைக்கு விடுகிறது, அவ்வளவுதான். என்றாலும், வங்கியில் பாதுகாப்பாக இருக்கும் என்று நம்பித்தான் அந்த லாக்கர்களை பயன்படுத்துகிறோம். இதனால் சில புதிய விதிகள் அமல்படுத்தப்பட்டு இருக்கின்றன. தீ விபத்து, திருட்டு போன்ற காரணங்களினாலும் வங்கியின் கவனக்குறைவால் லாக்கரிலுள்ள உங்கள் பொருள்களை இழந்துவிட்டால், நீங்கள் லாக்கருக்கான ஆண்டு வாடகை எவ்வளவு கொடுக்கிறீர்களோ அதைப் போல 100 மடங்கு நஷ்ட ஈட்டுத் தொகையை வங்கி உங்களுக்குக் கொடுக்க வேண்டும். மற்றபடி உள்ளே இருந்த பொருள்களின் மதிப்பு எதுவும் கவனத்தில் எடுத்துக்கொள்ளப்படாது. (சொல்லப்போனால் லாக்கரில் வைக்கப்படும் சில ஆவணங்கள் விலை மதிப்பற்றவையாகவும் இருக்கக்கூடும்).’’.வங்கி குறித்த புகாரை ஆம்புட்ஸ்மேனுக்கு அனுப்பலாம் என்றீர்களே... இந்த ‘ஆம்புட்ஸ்மேன்’ என்பவர் யார்? அவரும் அதே வங்கியைச் சேர்ந்தவரா?- கமலா ஸ்ரீதர், திருவாடானை.‘‘கவலைப்பட வேண்டாம். அதே வங்கியைச் சேர்ந்தவராக இருக்க மாட்டார். ரிசர்வ் வங்கியால் இவர் நியமிக்கப்படுகிறார். ஒரு வங்கிக்கு ஒன்றுக்கு அதிக எண்ணிக்கையிலும் இவர்கள் நியமிக்கப்படலாம். சட்டம், நிதி, வங்கியியல், பொது நிர்வாகம் போன்ற பல பிரிவுகளிலும் சிறந்து விளங்குபவர்களாக ‘ஆம்புட்ஸ்மேன்’ இருக்க வேண்டும். அதிகபட்சம் 3 வருடங்கள் வரை ஒருவரை ஆம்புட்ஸ்மேனாக நியமிக்க முடியும். அதன்பிறகு அதிகபட்சம் 2 வருடங்கள் இதை நீட்டிக்கலாம். வயது 65_ஐ தாண்டியிருக்கக் கூடாது. முழு நேரமாக இந்தப் பணியை ஏற்றுக்கொள்ள வேண்டும்.’’ .வங்கியில் சேமிப்புக் கணக்கு வட்டி விகிதத்தை மாதத்திற்கு எவ்வாறு கணக்கிடுவது?- வசந்தா மாரிமுத்து, சிட்லபாக்கம்.‘‘ஏப்ரல் 1, 2010க்கு முன்பாக வங்கிகள் ஒவ்வொரு மாதமும் 10ஆம் தேதி மற்றும் கடைசி நாளுக்கு இடையில் ஒரு கணக்கிலுள்ள குறைந்தபட்ச இருப்புக்கான வட்டியை கணக்கிட்டுக் கொடுத்து வந்தன. அதற்குப் பிறகு ஒழுங்குமுறை ஆணையத்தின் உத்தரவின் பேரில் ‘தினசரி வட்டி’ என்கிற அடிப்படையில் கணக்கிடப்படுகின்றன..வட்டி = தினசரி இருப்பு x ஆண்டுக்கான வட்டி விகிதம் x நாட்களின் எண்ணிக்கை / 365ஒருவர் 10,000 ரூபாயை 20 நாட்களுக்குத் தன்னுடைய கணக்கில் வைத்திருந்து 5,000 ரூபாயை 10 நாட்களுக்கு வைத்திருந்தால், (சேமிப்புக் கணக்குக்கான வட்டி விகிதம் 4% என்று வைத்துக்கொண்டால்),1) 10,000 x 4/100 x 20/3652) 5,000 x 4/100 x 10/365மேற்படி இரண்டின் கூட்டுத் தொகைதான் அந்த மாதத்துக்கான அந்த சேமிப்புக் கணக்கின் வட்டி!ஒவ்வொரு நாளின் இறுதியிலும் என்ன தொகை உங்கள் கணக்கில் இருக்கிறதோ அந்தத் தொகைதான் கணக்கில் எடுத்துக்கொள்ளப்படும். இப்படிக் கணக்கிடப்படும் வட்டியை பல வங்கிகள் மூன்று மாதங்களுக்கு ஒரு முறை அந்த சேமிப்புக் கணக்கில் சேர்க்கின்றன. சில வங்கிகள் மாதம் ஒரு முறை இந்த வட்டியை அளிக்கின்றன.’’.மூப்பின் காரணமாக நோய்வாய்ப்பட்டு வங்கிக்குச் செல்ல முடியாதவர்கள், தங்கள் பென்ஷன் தொகையை எப்படிப் பெறலாம்?- எஸ்.சுப்பிரமணியன், சூரமங்கலம்.‘‘பென்ஷன் பெறும் சிலரால் காசோலையில் கையெழுத்து போடக்கூட முடியாத நிலை ஏற்படலாம். நேரடியாக வங்கிக்கு வரவும் அவர்களால் முடியாமல் போகலாம். மூப்பு மற்றும் நோய் காரணமாக இந்த நிலை தோன்றலாம்.ஏ.டி.எம்., கார்டு உதவிக்கு வரும். மிக நம்பகமானவர்களிடம் அதைக் கொடுத்து, கணக்கிலிருந்து பணத்தைப் பெற முடியும். ஆனால், கடவுச் சொல்லையும் அவர்களிடம் கூறவேண்டியிருக்கும். அத்தனை நம்பகமானவர்கள் யாரும் இல்லை என்றால் என்ன செய்வது?கைநாட்டு (அல்லது வலது கால் கட்டை விரல் பதிவு) போன்றவை அப்போது பெறப்படும். வங்கியைச் சேர்ந்த இருவர், சம்பந்தப்பட்டவரின் வீட்டிற்கே வந்து அதைப் பெற்றுக்கொள்ளலாம். அவர்கள் அதற்கு சாட்சிக் கையெழுத்தும் போட வேண்டும். அவர்களில் ஒருவர், பொறுப்புள்ள வங்கி அதிகாரியாக இருக்க வேண்டும்.’’ (விவரம் இன்னும் வரும்) சிநேகிதிகளே... வங்கித் தொடர்பான உங்கள் கேள்விகளையும் எழுதி அனுப்பலாம்!