Snegiti
15. வங்கி விவரங்களே வருக : வங்கிப் பரிவர்த்தனைகளின் பின்னணியை முழுமையாக அறிய உதவும் தொடர்!
‘‘ஓரளவு கிழிந்த ரூபாய் நோட்டுகளை வாடிக்கை யாளர்களிடமிருந்து பெறும் வங்கிகள் அவற்றை ரிசர்வ் வங்கிக்கு அனுப்பிவிடும். மிகவும் அழுக்கடைந்த அல்லது பாதிக்கு மேல் எரிந்து போன ரூபாய் நோட்டுகளை வணிக வங்கிக் கிளைகளில் ஏற்றுக்கொள்ள மாட்டார்கள். நேரடியாக ரிசர்வ் வங்கிக்குச் சென்று அதை மாற்றிக்கொள்ள முடியுமா என்று பார்க்கவேண்டும். இதுபோன்ற ரூபாய் நோட்டுகள் மீண்டும் புழக்கத்துக்கு வரக்கூடாது. எனவே ரிசர்வ் வங்கி முன்னர் அவற்றை பிரமாண்ட சிம்னிகளில் போட்டு எரித்து வந்தது. இப்போதெல்லாம் துகளாக்கும் கருவிகளின் (Shredding Machines) மூலம் இந்த நோட்டுகள் சிதைக்கப்படுகின்றன.’’