அந்தக் காலத்தில் கணவன் இறந்தால் உடன்கட்டை ஏறும் கொடூரப் பழக்கம் இருந்தது. அதைப் பல்வேறு புரட்சியால் ஒழித்துக்கட்டியவர் ராஜாராம் மோகன்ராய். ஆனால், அதைவிடக் கொடிய பழக்கமாய் நம் சமூகத்தில் வேரூன்றிக் கிடக்கிறது, கணவர் இறந்துபோனதும் மனைவியின் பூவையும் பொட்டையும் அழிப்பதும், வளையல்களை உடைப்பதும்...‘‘கணவனை இழந்த ஒரு பெண் எந்த மங்களகரமான நிகழ்ச்சிகளுக்கும் முன் நிற்கக்கூடாது. நல்ல காரியங்களுக்கு கிளம்பும்போது எதிரில் வரக்கூடாது. இப்படி ஒவ்வொரு நாளும் சமூகத்தால் மட்டுமல்ல, தங்கள் குடும்பத்தினாராலும் ஒதுக்கப்படுவதும் ஓரங்கட்டப்படுவதும் உடன்கட்டை ஏறுவதைவிட கொடுமையானது!’’ என்று கொதித்த ஒருவர், என்ன செய்தார் தெரியுமா?வேலூரைச் சேர்ந்தவர் ரமேஷ்குமார். இவருடைய தந்தை சுப்பிரமணியம் இறந்தபோது, தாய் ஷியாமளாவின் பூவையும் பொட்டையும் அழிக்கவோ வளையல்களை உடைக்கவோ ரமேஷ்குமார் ஒப்புக்கொள்ளவில்லை. இதற்கு அவருடைய உறவினர்கள் பலரும் எதிர்ப்புத் தெரிவித்துள்ளனர். இதைப் போலவே கணவரை இழந்த 23 பெண்களின் பூவும் பொட்டும் பறிக்கப்படாத வண்ணம் தடுத்து நிறுத்தியிருக்கிறார். அட எப்படி வந்தது ரமேஷ்குமாருக்கு இந்தத் துணிச்சல்? அவரிடமே கேட்டோம்...‘‘பெண் குழந்தை பிறந்தால் மகாலட்சுமி என்றும், எந்த மங்களகரமான செயலையும் பெண்கள்தான் தொட்டுத் துவங்க வேண்டும் என்றும் கல்யாண பந்தக்காலில் இருந்து, வீடுகட்ட அஸ்திவாரம் போட செங்கல் எடுத்துத் தருவது வரை முன்னிறுத்துகிறோம். இங்கிலீஷ்காரர்கள், ‘லேடிஸ் ஃபர்ஸ்ட்!’ என்கிறார்கள். அதே நாம், ஒரு பெண்ணின் கணவன் இறந்துபோனால் அவரை ‘அமங்கலி’ என்று ஒதுக்கிவைத்து, சுப காரியங்களில் தவிர்ப்பது எந்த விதத்தில் நியாயம்?1985ல் நடந்த கார் விபத்தினால் பலத்த காயமடைந்த என்னுடைய தந்தை மருத்துவமனையில் சிகிச்சையில் இருந்தபோது, ‘பூ, பொட்டு வைத்து, வளையல்கள் அணிந்து கணவன் வீட்டுக்குச் செல்லும் பெண், திருமண பந்தத்தால் அதற்கு அடையாளமாகக் கணவனால் தாலியையும் மெட்டியையும் அணிந்துகொள்கிறார். ஆனால், கணவர் இறந்துபோகும்போது அவர் அணிவித்த தாலியையும் மெட்டியையும் மட்டும்தானே அவர்கள் அகற்றவேண்டும்? எதற்காக குழந்தைப் பருவத்திலிருந்தே வைத்த பூவையும் பொட்டையும் வளையல்களையும் ஒரு பெண் இழக்கவேண்டும்?’ என்றார். பிறகு 9 ஆண்டுகள் ஆஸ்பத்திரிக்கும் வீட்டுக்கும் அவரை அழைத்துக்கொண்டு அலைந்தோம். 1995_ல் மிகவும் சீரியஸ் கண்டிஷனில் இருந்தார் அப்பா. என்னோடு சேர்த்து அப்பாவுக்கு இரண்டு மகன்கள், இரண்டு மகள்கள். இறக்கும் தருவாயில், என்னை அழைத்த அப்பா, ‘எனக்கு உன்மீது நம்பிக்கையிருக்கிறது. அதனால்தான் உன்னிடம் சொல்கிறேன். நான் இறந்துபோனதும் எக்காரணத்தைக் கொண்டும் யார் தடுத்தாலும், உன்னுடைய அம்மா ஷியாமளா எப்போதும்போல பூவோடும் பொட்டோடும் வளையல் அணிந்து மங்களகரமாக இருக்கவேண்டும். நான் அணிவித்த தாலி, மெட்டியை மட்டும்தான் அகற்றவேண்டும்!’ என்று தன்னுடைய இறுதி ஆசையை சொல்லிவிட்டு, என் மடிமீது உயிரைவிட்டார்..அப்பா இறந்து அனைத்து சடங்குகளும் நடந்தது. கடைசி நாள் இரவு எங்கள் உறவினர்கள் அனைவரையும் வைத்துக்கொண்டு, அப்பாவின் ஆசையைச் சொன்னேன். அதற்கு பலரும் எதிர்ப்புத் தெரிவித்தனர். சிலர் ஆமோதித்தனர். ஆனால், நான் எடுத்த கொள்கை முடிவில் உறுதியாக இருந்தேன். அம்மாவின் தாலியையும் மெட்டியையும் மட்டுமே அகற்ற ஒப்புக்கொண்டேன். அதன்பிறகு கடைசிவரை என்னுடைய தாயை தெய்வமாக நினைத்து, தினமும் அவரிடம் ஆசி வாங்கிக்கொண்டு, என் எதிரில் வரச்சொல்லி பார்த்துவிட்டுத்தான் ஒவ்வொரு நாளும் வெளியே புறப்படுவேன்.என் மனைவி சாவித்திரி. எங்களுக்கு மூன்று மகள்கள். எல்லோரும் சௌகரியமாக இருக்கிறார்கள். நானும் எந்தக் குறையுமில்லாமல் செல்வச் செழிப்போடு வாழ்கிறேன். என் தாய் கடந்த கோவிட் சமயத்தில் காலமானார். எங்கள் வீட்டின் ஒரு பகுதியில் என்னுடைய தாயின் வெண்கலச்சிலையை நிறுவி, சுற்றிலும் பசுமையானசெடிகள், பின்னணியில் பாறைகளில் அருவி கொட்டும்படி அமைத்திருக்கிறேன். பிற்காலத்தில் இந்த வீடு எப்படிப் பாகம் பிரிக்கப்பட்டாலும், இந்தச் சிலையுள்ள பகுதியை இடிக்கவோ அகற்றவோ யாருக்கும் உரிமையில்லை என்று உயில் எழுதி வைத்திருக்கிறேன். இன்றும் ஒவ்வொரு நாளும் நான் வெளியே புறப்படும்போது என்னுடைய தாயின் சிலையை வணங்கிவிட்டுத்தான் செல்கிறேன்!’’ என்ற ரமேஷ்குமார், அடுத்து சொன்னதுதான் ஆச்சரியமான விஷயம்!‘‘கணவர் இறந்தால் பூவும் பொட்டும் எடுக்கும் நிகழ்வை என்னுடைய தாய்க்குத் தடுத்து நிறுத்தியதைப்போல, சமூகத்திலும் ஏற்படுத்தவேண்டும் என்று எண்ணி களமிறங்கினேன். எங்கள் சமூகத்தில் சில முக்கியப் பொறுப்புகளை நான் வகிப்பதால், இந்தக் கருத்தை வலியுறுத்தினேன். பெரும் எதிர்ப்பு வந்தது. பிறகு எங்கள் சமூகத்துப் பெண்கள் நடத்திய மாதர் சங்கத்தில் பேசினேன். ஏதிர்ப்பும் ஆதரவும் கலந்து வந்தது. கொஞ்சம் கொஞ்சமாய் சம்மதிக்க வைத்தேன். உறவினர்கள் ஒப்புக்கொண்ட நிலையில், கணவனை இழந்த சில பெண்களே அதற்கு ஒப்புக்கொள்ளவில்லை என்பது வேதனை.நெருங்கிய உறவினர்கள், நண்பர்கள் வீட்டு துக்க நிகழ்வில் நான் கலந்து கொண்டபோது, பதினோறாம் நாள் காரியத்திற்கு இரண்டு நாட்கள் முன்னதாக அவர்கள் வீட்டிற்குப் போய் அனைவரிடமும் பேசி சம்மதிக்க வைத்தேன். இதுவரை 23 பெண்களின் பூவையும் பொட்டையும் அழிக்கவிடாதவாறு காத்திருக்கிறேன். வயது மூப்பு, வேலைப்பளுவினால் என்னால் அந்த அறப்பணியைத் தொடர முடியவில்லை. இருந்தாலும், இன்னும் இரண்டு பெண்களுக்காவது செய்து, 25 பேருக்கு செய்த மங்கள பாக்கியம் எனக்குக் கிடைக்கவேண்டுமென முயற்சித்துக் கொண்டிருக்கிறேன்’’ என்றார் ரமேஷ்குமார்..-அன்புவேலாயுதம்.மங்களகரமாக ஒரு கிராமம்!திருவண்ணாமலை மாவட்டம் செய்யாறு பகுதியில் இருக்கிறது ‘சுமங்கலி’ என்கிற மங்களகரமான பெயர் கொண்ட கிராமம். முன்பு செய்யாறு தாலுகாவிலிருந்த இந்தக் கிராமம், தற்போது புதிதாக உருவான வெம்பாக்கம் தாலுகாவில் இருக்கிறது. ‘‘இந்தப் பகுதி மொத்தமே வயற்காடுகளாக இருந்தபோது செய்யாற்றைச் சுற்றி பல்வேறு கிராமங்கள் உருவாகின. அப்போது மங்களகரமாகத் துவங்கப்பட்ட முதல் கிராமம் இது!’’ என்கிறார்கள் மூத்த குடிமக்கள் சிலர்.