21.9.2023நட்பு : 23பகிர்வு : 9பொதுவாவே, வயசில் சின்னவங்கள பெரியவங்ககிட்ட வணங்கி, வாழ்த்தை வாங்கிக்கச் சொல்வாங்க. நிறைஞ்ச மனசோட அவங்க வாழ்த்தும் சொல் பலிக்கும்!அப்படித்தான் நம்ம முண்டாசு கவிஞனும்,வானையளப்போம் கடல் மீனையளப்போம்சந்திர மண்டலத்தியல் கண்டு தெளிவோம்னு பாடினான்.அந்தத் தீர்க்கதரிசி சொல் பலிச்சுடுச்சு! ‘கனவு மெய்ப்பட வேண்டும்!’னு அவன் பராசக்தியிடம் கேட்டதாலோ என்னவோ அவன் கண்ட கனவு எல்லாம் ஒவ்வொண்ணா நம் கண் முன்னே சாதனையா விரிஞ்சிக்கிட்டிருக்கு!நம்ம ‘சந்திரயான் - 3’ சந்திர மண்டலத்தில் கண்டுபிடிக்கும் விஷயங்கள், உலக நாடுகளே பார்த்து வியக்கும் அளவு இருக்கு!!திக்திக்னு மனசு படபடக்க, ‘சந்திரயான் & 3’ நிலவில் கால்பதித்த அந்த அற்புத நொடிகளை நீங்களும் கண்குளிர பார்த்தீங்கதானே?இந்தச் சாதனை லேசில் நமக்குக் கிடைச்சுடல. நேரு அவர்களின் கீழ், 1962ல National Committee for Space Research (INCOSPAR) அப்படின்னு ஒரு ஆர்கனைசேஷன் துவக்கப்பட்டது. அதுதான் ஆகஸ்ட் 15, 1969ல Indian Space Research Organisation (ISRO) ஆக மாறியது!.விக்ரம் சாராபாய் அவர்கள்தான் இதுக்கு வித்திட்ட மூத்த விஞ்ஞானி.சிவி ராமன், ஹோமி பாபா, அப்துல் கலாம் போன்ற பல சாதனை விஞ்ஞானிகள் தங்கள் பங்களிப்பை இதன் வளர்ச்சிக்கு ரொம்பவே சிறப்பாக் கொடுத்திருக்காங்க!ஆனா, இஸ்ரோவோ விஞ்ஞானிகளோ கடந்து வந்த பாதை மலர் பாதை இல்ல. கல்லும் முள்ளும் நிறைந்த மிகக் கடினமான பாதை. விஞ்ஞானி நம்பி நாராயணன் சொல்வது போல் நாட்டின் நிலைமை காரணமாக அரசு அதிக பணம் ஒதுக்க முடியாமல் இருந்தது. சைக்கிளிலும் மாட்டு வண்டியிலும் ராக்கெட்டின் பகுதிகளை வைத்து எடுத்துட்டுப் போயிருக்காங்க.‘வறுமையில் வாடும் உங்களுக்கு எதுக்கு இந்த ஆராய்ச்சி எல்லாம்?’னு மேலை நாடுகள் கேலி கூட செஞ்சிருக்காங்க. மேலை நாடுகளின் பத்திரிகையில் மேலைநாட்டு விஞ்ஞானிகள் ராக்கெட் பற்றி விவாதித்துக் கொண்டிருக்க, வாசலில் மாட்டை கையில் பிடித்துக் கொண்டு ஒரு பால்காரர் போல் இந்தியா உள்ளே நுழைய அனுமதி கேட்பது போல் கேலிச்சித்திரம் தீட்டியிருந்தாங்க. இன்னைக்கு மாட்டுக்காரர் (இந்தியா) உள்ளே ராக்கெட் விஞ்ஞானம் செய்து கொண்டிருக்க, வெளியே மேலை நாடுகள் இவர் அறிவுரைக்காக காத்திருப்பது போல் பதிலடி கொடுத்து கார்ட்டூன் தீட்டப்பட்டுள்ளது. அந்த நிலைக்கு நம் நாட்டை உச்சாணிக்கொம்பில் உயர்த்தி வச்சிருக்கு ‘இஸ்ரோ’!.இந்த உயரம் தொட, இஸ்ரோ எத்தனை கஷ்டப்பட்டு வர வேண்டி இருந்தது தெரியுமா?50களிலேயே விண்வெளி ஆராய்ச்சியில் ரஷ்யா பல சாதனைகள் செய்துக்கிட்டு இருந்தது. அவங்க உதவியோட மெல்ல இந்தியாவும் விண்வெளி ஆராய்ச்சியில் ஈடுபட துவங்கியது. ஆனா, இந்தியாவின் ஆராய்ச்சிகளுக்கு ரஷ்யாவின் உதவியையும் தடுத்து, அமெரிக்கா முட்டுக்கட்டை போட்ட சம்பவங்களும் உண்டு. கார்கில் போர் சமயம் Global Positioning System (GPS) எனும் டெக்னாலஜியை நமக்கு வழங்கி உதவ அமெரிக்கா மறுத்தது. அதன் விளைவாகத்தான் இஸ்ரோ நமக்கு என்று தனியாக சேட்டிலைட் நேவிகேஷன் சிஸ்டத்தை துவங்கியது.இப்படிப் பல மேலை நாடுகளின் நிராகரிப்பையும் விமர்சனங்களையும் ஏளனங்களையும் புறந்தள்ளி, பொருட்படுத்தாமல் இஸ்ரோ தன்னை செதுக்குவதில் முனைப்புக் காட்டி வந்தது. நன்கு படித்த திறமைசாலிகளை வேலைக்கு எடுத்துக் கொண்டது. இலக்கை நிர்ணயித்து, அதனை நோக்கி அல்லும் பகலும் பயணித்தது.நேரு துவங்கி இந்திரா காந்தி, வாஜ்பாய், நரேந்திர மோடின்னு பல பிரதமர்கள் இஸ்ரோ விஞ்ஞானிகளை பெரிதும் ஆதரிச்சாங்க. ஆனாலும், நாட்டின் பொருளாதார நெருக்கடி காரணமாக மேலை நாடுகள் போல நம்மால இயங்க முடியயல. இருந்தும், இஸ்ரோ தளர்ந்து போயிடல. குறைந்த பட்ஜெட்டிலேயே பல திட்டங்களை தீட்டி வெற்றி கண்டனர். சமீபத்திய சாதனையான ‘சந்திரயான் - 3’ கூட மிகக் குறைந்த பட்ஜெட்டில் சாதிக்கப்பட்டதுதான்!.‘சந்திரயான் - 2’ நிர்ணயித்தபடி சாஃப்ட் லேண்டிங் செய்ய முடியாமல் சந்திரனில் மோதி செயலிழந்தது. ஆர்பிட்டர் மட்டும் சந்திரனை சுற்றி வந்தது. இது பாதி வெற்றியாக மட்டுமே கருதப்பட்டது. திட்டம் முழு வெற்றி பெறாவிட்டாலும், உடனே இஸ்ரோ தோல்வியை கண்டு மனம் துவளவில்லை. ‘சந்திரயான் - 3’ திட்டத்தையும் துவங்கிவிட்டது.இஸ்ரோவின் வெற்றி நமக்குச் சொல்லும் பாடங்கள் நிறைய உண்டு. நாம் அவற்றை கடைப்பிடித்தால், வாழ்க்கையில் நிச்சயம் முன்னேறலாம்! முயற்சி செய்யும்போது பலர் கிண்டல், கேலி செய்வார்கள். அவற்றை பொருட்படுத்தாமல் நாம் நம் இலக்கை நோக்கி மட்டுமே கவனம் செலுத்த வேண்டும்.பெரிய இலக்குகளையும் சாதனைகளையும் முன்னேற்பாடும் புத்திசாலித்தனமும் கொண்டு சின்ன பட்ஜெட்டிலேயே முடிக்க முடியும். குழுவாக செயல்படும்போது தனிமனித பெருமை பேசாமல் எல்லோருக்கும் உரிய அரவணைப்பும் பாராட்டும் வழங்க வேண்டும். அப்படிச் செய்யும்போது செயல் வெற்றி பெறும்! தோல்வி என்பது முடிவல்ல அதிலிருந்து பெறப்படும் பாடங்கள் வெற்றிக்கான படிக்கட்டுகள்!ஆணுக்கு நிகராக பெண்களாலும் எல்லா விஷயங்களையும் சாதிக்க முடியும்! நம் அரிய செயல்களால் நம் நாட்டுக்கு நம்மால் பெருமை தேடித் தர முடியும்! ஜெய் ஹிந்த்! பெருமையுடன்...உங்கள் சிநேகிதி,ராஜசியாமளா