நட்பு : 23பகிர்வு : 8நல்லா இருக்கீங்களா?செப்டம்பர் 5 - ஆசிரியர் தினம். இந்த இதழ்ல உயரதிகாரிகள் சிலர், தாங்கள் இந்தளவு உயர காரணமான தங்களோட ஆசிரியர்களை நெகிழ்ச்சியோட நினைவுகூர்ந்து இருக்காங்க. சில ஆசிரியர்கள் ‘நல்லாசிரியர் விருது’ வாங்கின அனுபவத்தை பகிர்ந்திருக்காங்க.நாமும் நம்மோட ஆசிரிய பெருமக்களை நினைவுகூர்ந்து பெருமைப்பட வேண்டிய தருணம் இது!ஆனா, தமிழகத்தில் பள்ளி மாணவர்கள் இடையே நடக்கும் கொடூர தாக்குதல்கள், கொலைகள், தற்கொலைகள் மனசுக்கு ரொம்பவே வருத்தம் தருது..ஆசிரியரோ அம்மா அப்பாவோ, ‘படி... செல்போனை நோண்டாதே!’னு ஏதாவது சொல்லிட்டா போச்சு. உடனே தற்கொலைதான். மனித உயிர் என்ன அவ்வளவு மலிவா போச்சா?+2, நீட் மாதிரி தேர்வு சமயங்களில் தற்கொலைகள் சர்வ சாதாரணமா நடக்குது.படிப்பு ரொம்ப முக்கியதான். நல்லா படிச்சா, வாழ்வில் சுலபமா உயரலாம். அதே சமயம், படிப்பில் தோற்றுப் போயிட்டா வாழ்வே அஸ்தமிச்சுடுமா? நீட் தேர்வுல பாஸ் செஞ்சு டாக்டர் ஆகாலன்னா என்ன, வேற படிப்பே இல்லையா?பள்ளி தேர்வில் தோற்கலாம். ஆனா, வாழ்க்கை வைக்கும் தேர்வில் ஜெயித்துக் காட்டுவதுதான் உண்மையான வெற்றி. வாழ்க்கை நமக்கு வைக்கும் பரீட்சையில் தோற்கும் கோழை செயல்தான் தற்கொலை. இதை மாணவர்களுக்கு சொல்லிக் கொடுக்க நாம தவறிடறோம்.பள்ளி மாணவர்களின் தற்கொலை ஒருவித மன வலியை கொடுக்குதுன்னா, கொலைகள் / கொலை முயற்சிகள் வேறுவிதமா நம்மை நடுநடுங்க வைக்குது. .சில மாதங்களுக்கு முன்னே, தன்னோட குந்தைக்கு போட்டியா முதல் ரேங்க் வாங்கும் இன்னொரு குழந்தையை ஜூஸில் விஷம் கலந்து கொல்லப் பார்த்தாங்க ஒரு அம்மா. முதல் ரேங்க் வாங்குவதும் மதிப்பெண்ணும் அந்த அளவு முக்கியமா?ஜாதி வெறி காரணமா மூணு சிறுவர்கள் சக மாணவனை அரிவாளால் வெட்டிக் கொல்ல முயன்ற நாங்குநேரி சம்பவம் சமீபத்துல எல்லோரையும் பதைபதைக்க வெச்சுது. 13 வயசில் ஜாதிக்காக சக மாணவனை அரிவாளால் வெட்டத் துணியும் அளவு ரத்தத்தில் ஜாதி வெறி கலக்க முடியுமா?ஒரு தாய்க்கு தன்னோட 4 மகன்களுக்கு இடையே பேதம் இருக்குமா? அப்படித்தானே கடவுளுக்கும் நாம் எல்லோரும் குழந்தைகள். கடவுள் நம்மிடையே பேதம் பார்ப்பாரா? பிறகு, ‘நீ தாழ்த்தி, நான் உசத்தி!’ என்ற பேதம் எங்கிருந்து வருது? இதை நம்ம குழந்தைகளுக்கு நாம சொல்லித் தர்றதில்லை. ஏன்? நம்மில் பலருக்கும் அந்தப் புரிதல் இல்லையே!இன்னொரு பக்கம் ஒரு செய்தி... பொதுமக்கள் கோடிக்கணக்கான பணம் முதலீடு செஞ்சு, சென்னை சாலிகிராமத்தில் வாங்கின புதிய அடுக்குமாடி வீடுகள், சில வருஷங்களிலேயே பொலபொலன்னு சீலிங் உதிர்ந்து விழுது. ‘வாழத் தகுதி இல்லாத இடம்’னு சொல்லி, அந்த 17 மாடிகளை கொண்ட அப்பார்ட்மென்ட்டில் மீதி வீடுகளை விற்கத் தடை உத்தரவுப் போட்டிருக்கு நீதிமன்றம்..பில்டர்களோ, ‘அந்த இடத்தில் குளோரின் அதிகம். அதனால்தான் இப்படி!’ன்னு சப்பைக் கட்டு கட்டுறாங்க. அப்படியே குளோரின் அதிகம். பாதிப்பு வரும் என்றால் அதை அந்தக் கட்டடம் கட்டிய இன்ஜினியர் அல்லவா பரிசோதித்து சரிசெய்திருக்க வேண்டும்? இப்படி ஒரு கட்டடம் கட்டிய அந்த இன்ஜினியர் யார்? அவர் படிப்பின் தராதரம் என்ன? சில வருடங்களுக்கு முன்பாக சென்னை மவுலிவாக்கத்தில் 11 மாடி கட்டடம் திடீர்னு இடிஞ்சி தரைமட்டமானதுடன், பலரையும் காவு வாங்கிய சம்பவம், அவ்வளவு எளிதில் யாருக்கும் மறந்திருக்காது.புற்றீசல் போல் கிளம்பும் பொறியியல் கல்லூரிகள் தரமானவையா? அவற்றில் இருந்து பட்டம் பெற்று வெளியே வரும் மாணவர்கள் திறன் வாய்ந்தவர்களாக இருப்பார்கள் என்று எப்படி நம்ப முடியும்?சரி, மருத்துவக் கல்லூரிகளின் கதி என்ன? பல கல்லூரிகளில் போதிய நோயாளிகள் இல்லை. பள்ளி எஸ்கர்ஷன் போல் வார இறுதியில் பக்கத்து கிராமத்திற்கு பஸ்ஸில் அழைத்துப் போய், நோயாளிகளைத் தேடி பயிற்சிக் கொடுக்கிறார்கள். ஓரிரு அறைகள், நான்கைந்து படுக்கைகள் வைத்து மருத்துவக் கல்லூரி என்று கணக்குக் காட்டுகிறார்கள்..10 - 12 வருடங்களுக்கு முன்பாக எங்கள் வீட்டிற்கு வந்திருந்த ஒரு அம்மா, அவருடைய மகளை மருத்துவக் கல்லூரியில் சேர்த்திருப்பதாக சொன்னார்.‘‘ஃபீஸ் அதிகம் கட்டி நல்ல மருத்துவக் கல்லூரியில் சேர்க்க முடியலை. இங்க ஃபீஸ் கம்மி.’’‘‘சரி, நல்லா சொல்லித் தர்றாங்களா?’’ என்றேன்.‘‘எங்க, ஆபரேஷனெல்லாம் ஒண்ணும் பிராக்டிகல் கிடையாது. சி.டி., கொடுத்துடறாங்க. அவ்வளவுதான். பார்த்து புரிஞ்சுக்கணுமாம்.’’.எனக்கு பகீரென்றது. அந்தக் கல்லூரியில் இருந்து வெளிவரும் மருத்துவர்களிடம் போனால் நம் கதி என்ன? அப்படியாவது லட்சங்களில் பணத்தைக் கொட்டி அரைகுறையாகவாவது டாக்டருக்குப் படிக்கணுமா?தரமற்ற கல்வி நிறுவனங்கள் தரமற்ற நிபுணர்களையே சமுதாயத்திற்கு வழங்குவார்கள்.இன்றைய தேவை:* தரமான கல்வி நிறுவனங்கள்.* எல்லோருக்கும் தரமான கல்வி.* மாணவர்கள் தங்கள் விருப்பத்திற்கு ஏற்ப பாடத்தை தேர்வு செய்து படிக்கும் சுதந்திரம் / சூழல்.* படிப்பு வராத மாணவர்களுக்கு அவர்கள் திறமை அறிந்து கொடுக்கும் முறையான பயிற்சி.தேவையற்றவை:* மதிப்பெண் மட்டுமே முக்கியம் என்ற நோக்கு.* கல்வி நிறுவனங்களில் ஜாதி பேதம்.* படிப்பில் மருத்துவம் போன்ற சில துறைகளுக்கு மட்டும் கொடுக்கும் அதீத மதிப்பு.இதையெல்லாம் இப்பவே சிந்திச்சு செயல்படுத்தலன்னா, நாளைய சமுதாயம் சீர் கெட்டுப் போகும்! வருத்தத்துடன்...உங்கள் சிநேகிதி,ராஜசியாமளா