இனிய சிநேகிதிகளுக்கு வணக்கம்!நல்லா இருக்கீங்களா? ஒரு பத்து பதினஞ்சு வருஷத்துக்கு முன்னாடி அமெரிக்காவில் வாழ்ந்த எழுத்தாளர் கீதா பென்னட், அமெரிக்க கலாசாரம் பத்தி எழுதும்போது, ஒரு விஷயத்தைக் குறிப்பிட்டாங்க.‘பொன் ஒன்று கண்டேன்!’ அப்படின்னு சிவாஜியும் பாலாஜியும் பாடுற பாடலைப் பார்த்துட்டு, ‘அவர்கள் ஓரினச் சேர்க்கையாளர்களா?’ன்னு தன்னோட மகன் கேட்டதாக எழுதியிருந்தாங்க. அதைப் படிச்சப்போ, அமெரிக்க கலாசாரத்தின் மீது ஒரு சின்ன அசூயை எழுந்தது. பள்ளி மாணவன் ஒருவன் இது பத்தியெல்லாம் பேசும் அளவுக்கு அமெரிக்க சமுதாயம் இருக்கேனு தோணிச்சு.அதே சமயம், ஒரு ரெண்டு மூணு வருஷத்துக்கு முன்னாடி ஒரு தமிழ்க் குடும்பம், ‘ஆணுக்கும் ஆணுக்கும்’ ரொம்ப மகிழ்ச்சியா அமெரிக்காவில் கல்யாணம் செஞ்சு வெச்சாங்க. அப்போ சின்னதா மனசில் சொரேர்னு ஒரு கத்தி பாஞ்சா மாதிரி இருந்தது.ஆனா, கடந்த ஜூன் 25ஆம் தேதி ‘ஓரினச் சேர்க்கையாளர்கள் பெருமை நடைப் பயணம்’ (LGBTQ pride walk) சென்னையில் நடந்தது. அதுக்கு வரவேற்பும் இருந்தது.அந்த நிகழ்வு பற்றிய வீடியோக்களில், ‘‘எங்க படுக்கை அறைக்குள்ள நீங்க ஏன் எட்டிப் பார்க்கறீங்க?’’, ‘‘எங்களை ‘ஆண்’, ‘பெண்’ அப்படினு நீங்க சொல்லக் கூடாது. பொதுவா ‘அவங்க’, ‘இவங்க’னு சொல்லுங்க. நான் வெளியே ஆணாத் தெரிஞ்சாலும் பெண்ணாய் நடந்து கொள்ளக்கூடும். அதனால உங்களுக்கு என்ன நஷ்டம்?’’ மாதிரியான கேள்விகளை அவங்க எழுப்பினப்போ, அதை ஏற்க முடியாமல், கீழே பலர் அவங்களைத் திட்டி கமென்ட்களைப் பகிர்ந்திருந்தாங்க.எங்கோ அமெரிக்காவில் நடக்கும்போது முகம் திருப்பிப் போக முடிஞ்ச என்னால், இப்பவும் அப்படி இருக்க முடியலை. பகிரங்கமா ஒரு கூட்டம், ‘‘நாங்க இப்படித்தான்’’னு சொல்லி நடக்கறாங்க. ‘‘அவங்களை நாங்க ஆதரிக்கறோம்!’’னு கூடவே பிரபலங்கள் உள்பட பலரும் குரல் எழுப்பறாங்க.என்னதான் நடக்குது இங்க? யார் இவங்க? LGBTQ அப்படின்னா என்ன?Lesbian, Gay, Bisexual, Transgender ஆகிய வார்த்தைகளின் முதல் எழுத்துகள்தான். அதாவது, ஓரினச் சேர்க்கையாளர்கள் மற்றும் திருநங்கைகள் / திருநம்பிகள்.குறிப்பிட்ட வயசு வரும்போது எல்லா ஜீவராசிகளுக்கும் எதிர்பாலினத்தின் மீது ஈர்ப்பு வருவது இயற்கை. அது, உலகில் ஜனனம் விடுபடாமல் நடக்க அவசியமும்கூட! ஆனா, சிலர் ஒரே பாலினத்தின் மீது ஈர்க்கப்படுவது ஏன்?பிறப்பிலேயே குரோமோசோம் மாற்றத்தின் குளறுபடி காரணமா ஆண் உடலில் பெண் தன்மையும் பெண் உடலில் ஆண் தன்மையுமா இரண்டும் கெட்டானாய் பிறக்கும் திருநங்கை, திருநம்பிகளை நாம புரிஞ்சுக்க முடியும். அது அவங்க தப்பில்லை. படைப்பின் பிழை! ஆனா, இந்த ஓரினச் சேர்க்கையாளர்கள்?‘‘அவங்கள்ல பெரும்பாலானோர் ஹார்மோன் குளறுபடி காரணமா இப்படி நடந்துக்கறாங்க. சிலர், நட்பு மாதிரி சூழல் ஏற்படுத்தும் பாதிப்பில் இப்படி மாறிப் போறாங்க!’’னு என்னோட டாக்டர் மருமகன் சொன்னார்.2018 முதல் நம் நாட்டில் ஓரினச் சேர்க்கை சட்டப்படி குற்றம் இல்லை. அதே சமயம் ஓரினச் சேர்க்கையாளர்கள் திருமணம் இன்னும் பல மாநிலங்களில் சட்டப்படி அனுமதிக்கப்படலை. மருத்துவ, சட்ட உலகங்கள் இன்னும் இது விஷயமா பல புரிதல்களை, மாற்றங்களை செஞ்சுக்கிட்டு வருது!நம் நாட்டில் ‘நாரதஸ்மிரிதி’, ‘சுஸ்ருத சம்ஹிதி’ போன்ற புராதன நூல்களில், ‘‘ஓரினச் சேர்க்கை என்பது மாற்ற முடியாதது. இவர்கள் எதிர்பாலினத்தவரை மணம் முடிக்காமல் இருப்பது உத்தமம்!’’னு சொல்லப்படிருக்கு. கஜுராஹோ மாதிரி சிற்பங்களில் இப்படிப்பட்டவற்றையும் பார்க்க முடியும். நம் முன்னோர் இதையெல்லாம் சகஜமாக ஏற்றுக் கொண்டவர்கள்னு சிலர் சொல்றாங்க.‘‘எப்படிச் சொன்னாலும், இதையெல்லாம் என்னால ஏத்துக்க முடியாது. எங்கோ ஏதோ நடந்தா, நமக்கென்ன?’’னு நம்மில் பலருக்குத் தோணலாம். ஆனா, பூனை கண்னை மூடிக்கிட்டா பூலோகம் இருண்டு போயிடாது. நாளை இந்தப் பிரச்னை நம் வீட்டுக் கதவையும் தட்டலாம். அப்படி நடக்கும் சூழலில், நாம் கட்டாயப்படுத்தி நம்ம மகனையோ மகளையோ இயற்கைனு எதிர்பாலினத்துடன் திருமணம் முடிச்சு வெச்சா, அதன் விளைவுகள் ரொம்பவே மோசமா இருக்கும்கிறதுதான் நிதர்சனம்.இதுக்கு என்னோட சிநேகிதி ஒருத்தியின் கல்யாணமே உதாரணம்! இருபத்தஞ்சு வருஷங்களுக்கு முன்னாடி இப்படிப்பட்ட விஷயங்கள் நம்ம ஊரில் உண்டுனு பல சாமானியர்களும் உணராத காலம் அது. என் சிநேகிதிக்கு திருமணத்துக்கு வரன் பார்த்தாங்க. பையனைப் பத்தி விசாரிச்சாங்க. எல்லோரும் நல்ல பையன்னுதான் சொன்னாங்க. கல்யாணமும் முடிஞ்சுது. ஆனா, பையன் தன்னோட புது மனைவி பக்கமே திரும்பலை. ஆறு மாசம் இப்படியே போச்சு. அப்புறம்தான் தெரிஞ்சுது, அவன் ஓரினச் சேர்க்கையாளன்னு! அவனால் ஒரு பெண்ணோடு வாழ முடியாது. வீட்டில் சொல்ல பயந்து, என்னோட சிநேகிதியை கல்யாணம் செஞ்சு, அவ வாழ்க்கையையும் பாழாக்கியிருக்கான். கோர்ட்டில் இதைச் சொல்லி, விவாகரத்து வாங்கினாங்க.இந்த நிகழ்வையெல்லாம் பார்க்கும்போது, இன்னிக்கு வெளிப்படையா, ‘‘நாங்க இப்படித்தான்’’னு சிலர் சொல்லிடறது பரவாயில்லைனுதான் தோணுது. மகனோ மகளோ இப்படி இருந்தா, அதைப் பெற்றோர் ஏத்துக்கிட்டு, அவங்க விருப்பப்படி வாழ அனுமதிப்பதுதான் நல்லதுன்னு தோணுது. இல்லாட்டா, என்னோட சிநேகிதி வாழ்க்கை மாதிரி இதில் சம்பந்தப்படாத ஒருத்தரோட வாழ்க்கையும் அநாவசியமா பலியாகும்.அதே சமயம், நமக்குத்தான் இப்படி அங்கீகாரம் இருக்கேனு, ஓரினச் சேர்க்கையாளர்கள் இதில் விருப்பமில்லாதவர்களை வலுக்கட்டாயமா இழுத்துவிட்டு, அவங்க வாழ்வைக் கேள்விக்குறியா ஆக்கவும் கூடாது. வெளிநாட்டில் ‘தன்னைத்தானே திருமணம் செய்து கொள்வது’ மாதிரியான முட்டாள்தனங்களும் நடக்குது. இதெல்லாம் தவிர்க்கப்படணும். உலகில் ஆக்கபூர்வமாய் செய்ய பல விஷயங்கள் இருக்கு. மற்ற உயிரினத்திற்கு தீங்கு செய்யாமல் வாழ வேண்டிய கடமையும் இளைய சமூகத்துக்கு இருக்கு. அவங்களை புரிஞ்சுக்கிட்டு நல்வழிப்படுத்த வேண்டிய கடமையும் நமக்கு இருக்கு! அன்புடன்...உங்கள் சிநேகிதி,ராஜசியாமளா