Snegiti
கொஞ்சம் உங்களோடு
கூட்டுக்குடும்பம் இல்லை. மகனும் மகளும் தத்தம் குடும்பத்துடன் வெவ்வேறு இடங்களில் செட்டில் ஆகிவிடுகிறார்கள். வயதான தம்பதியரோ, தமக்குப் பின் தம்முடைய இணையை யார் பார்த்துக்கொள்வார்கள் என்ற கேள்விக்குறியாகிப் போன வாழ்வை வாழ்கிறார்கள். இணை போன பிறகு மகன் குடும்பத்தில் வேண்டாத விருந்தினராக வாழ்வை ஓட்டும் நிர்ப்பந்தம். மாமனாரைக்கூட சகித்துக்கொள்ளும் மருமகளால், மாமியாரைச் சமாளிக்க முடிவதில்லை.
இந்தச் சூழலை ரம்மியமாக்க முடியாதா?