-லதானந்த்கர்நாடகா மாநிலம் கோலாரில் தங்க வயல்கள் இருக்கும் சிறப்போடு இன்னொரு சிறப்பும் சேர்ந்திருக்கிறது. என்.காயத்ரி என்கிற 25 வயது இளம்பெண், கர்நாடகா மாநிலத்தில் சிவில் நீதிபதியாகத் தேர்வாகியிருப்பதுதான் அது!சாதனைகள் நிகழ்த்த வறுமையும் தாம் சார்ந்த சமூகப் பின்னணியும் தடைகளாக இருந்தால், அவற்றை உடைத்துவிட்டு முன்னேறலாம் என்பதற்கு இந்த இளம்பெண் ஓர் எடுத்துக்காட்டு!.இந்த நீதிபதி பதவிக்கு விண்ணப்பிக்கக் குறைந்தபட்ச வயது 21. உச்ச வரம்பு 35 வருடங்கள். விண்ணப்பிக்கும் நபர், சட்டப் படிப்பில் பட்டம் பெற்றிருக்க வேண்டும்.பெங்களூருவில் இருக்கும் ‘விதான் சௌதா’ கட்டடத்துக்கு எதிரில் அமைந்திருக்கிறது கர்நாடகா உயர் நீதிமன்றம். இணையத்தின் வழியே நடைபெற்ற நேரடித் தேர்வில் காயத்ரி கலந்துகொண்டுள்ளார். தேர்வு முடிவுகள் வெளியானபோது, தான் தேர்வு செய்யப்பட்டிருப்பதை அறிந்தார். தற்போது நீதிபதி நாற்காலியில் அமர்ந்திருக்கிறார்..கோலார் மாவட்டம், பங்காருப் பேட்டையை அடுத்த ‘யலபுர்க்கி’ பகுதியைச் சேர்ந்த நாராயணசாமி - வெங்கடலக்ஷ்மி தம்பதியரின் ஒரே மகளான காயத்ரி, இந்தத் தேர்வில் கலந்துகொண்டிருக்கிறார்.பெற்றோர் இருவரும் கூலித் தொழிலாளிகள். மிகவும் சிரமப்பட்டே தங்கள் மகளைப் படிக்கவைத் திருக்கின்றனர். தாங்கள் அனு பவிக்கும் சிரமங்களை தங்களுடைய மகளும் அனுபவிக்கக்கூடாது என்பதில் காயத்ரியின் பெற்றோர் உறுதியாக இருந்தனர். அவர்களின் விருப்பத்தை பழுதின்றி நிறைவேற்றிக் காட்டியிருக்கிறார் காயத்ரி.இவர், தம்முடைய பள்ளிப் படிப்பை பங்காருப்பேட்டைக்கு அருகில் உள்ள காரஹள்ளியில் இருக்கும் அரசு ஆரம்பப் பள்ளியிலும், பின்னர் உயர்நிலைப் பள்ளியிலும் முடித்தார். கோலார் மகளிர் கல்லூரியில் பி.காம்., பட்டம் பெற்றார். கோலார் தங்க வயலில் இயங்கும் கெங்கல் அனுமந்தரையா சட்டக் கல்லூரியில் சட்டப்படிப்பை 2021ஆம் ஆண்டு முடித்தார். பல்கலைக்கழக அளவில் நான்காவது இடமும் பெற்றார்..முதலில் இவர் சிவராம் சுப்ரமணியம் என்ற மூத்த வழக்கறிஞரிடம் ஜூனியராகப் பணியாற்றியிருக்கிறார். காயத்ரியின் திறமைகளை ஊன்றிக் கவனித்த அவர், சிவில் நீதிபதிக்கான தேர்வெழுத ஆலோசனைகள் வழங்கியதோடு, தேவையான புத்தகங்களையும் கொடுத்து உற்சாகப்படுத்தியுள்ளார்.முதல் முறை சிவில் நீதிபதிகளுக்கான தேர்வை எழுதிய காயத்ரி, அதில் வெற்றிபெறவில்லை. ஆனால், அதற்காக அவர் மனம் தளரவில்லை. மறுமுறை எழுதினார்; தேர்வும் ஆனார்!.மிக ஏழ்மையான குடும்பச் சூழலில் வளர்ந்த, பட்டியலின சமூகத்தைச் சேர்ந்த இவர், மிக இளம் வயதிலேயே நீதிபதிப் பதவிக்கு வந்திருப்பதை உறவினர்களும் நண்பர்களும் சட்டத் துறையினரும் கொண்டாடுகின்றனர்.பல தரப்பினரும் காயத்ரிக்குப் பாராட்டுகளைத் தெரிவித்து வருகின்றனர். ‘இவருடைய கடின உழைப்புக்குக் கிடைத்த பரிசு இது!’ எனப் போற்றுகின்றனர். காயத்ரியின் வெற்றி பலருக்கும்... குறிப்பாக, இளம்பெண்களுக்கு முன்மாதிரியாக அமைந்திருக்கிறது!கொண்ட லட்சியத்தில் உறுதியோடு இருந்து, அதற்காகக் கடினமாக உழைத்தால் சாதனைகள் நிகழ்த்தலாம் என்பதற்கு காயத்ரி, நடமாடும் உதாரணமாக விளங்குகிறார். நல்ல தீர்ப்புகள் வழங்கி, நாடுபோற்றும் நீதிமானாக அவர் விளங்க நாமும் வாழ்த்துவோம்!