-வாசுகி லட்சுமணன்பொதுவாக நம் நாட்டில் ஆராய்ச்சி செய்வதற்கு போதிய ஊக்கம் கிடைப்பதில்லை என்ற குற்றச்சாட்டு உண்டு. ஆனால், இப்போது உயர் கல்வி மாணவர்களின் ஆராய்ச்சி திறனை மேம்படுத்தவும் ஊக்கமளிக்கவும் மத்திய அரசு அற்புதமான திட்டம் ஒன்றை கொண்டு வந்துள்ளது!.இதன்படி, கல்வி அமைச்சகத்தின் இன்னோவேஷன் செல், அகில இந்திய தொழில்நுட்ப கல்வி கவுன்சில் (AICTE), உள்துறை அமைச்சகத்தின் காவல் ஆராய்ச்சி மற்றும் மேம்பாட்டு பணியகம் (BPR & D) மற்றும் இந்திய சைபர் கிரைம் ஒருங்கிணைப்பு மையம் ஆகியவை இணைந்து புதிய கண்டுபிடிப்புகளுக்கான போட்டிகளை ஆண்டு தோறும் நடத்துகின்றன.நாட்டின் பாதுகாப்பு விஷயங்களிலுள்ள சிக்கல்களை எதிர்கொள்ளும் வகையில் தொழில்நுட்பக் கண்டுபிடிப்புகளை ஊக்குவிக்க இப்போட்டிகள் நடத்தப்படுகின்றன. இந்த ஆண்டு ‘KAVACH-2023’ போட்டியில், 20 பாதுகாப்பு அச்சுறுத்தல் பிரச்னைகள் பட்டியலிடப்பட்டு, அவற்றுக்கான கண்டுபிடிப்புகளுக்கு ரொக்கப் பரிசும் அறிவிக்கப்பட்டிருந்தது..நாடு முழுவதுமுள்ள கல்வி நிறுவனங்களிலிருந்து தேர்ந்தெடுக்கப்பட்ட இளைஞர்கள், பட்டியலிடப்பட்டிருந்த பிரச்னைகளுக்கு தங்களின் தொழில்நுட்பத் தீர்வுகளை வழங்கினார்கள். மூன்று சுற்றுகளாக போட்டி நடைபெற்றது. இறுதி செய்யப்பட்ட சிறந்த கண்டுபிடிப்புகளுக்கு உரிய மாணவர்கள் நவிமும்பையில் 36 மணி நேரம் தொடர்ந்து நடைபெற்ற ஹாக்கத்தானில் பங்கேற்று, அங்கே கூடியிருந்த வல்லுனர்களுக்கு தங்கள் கண்டுபிடிப்புகளுக்கான செயல்முறை விளக்கம் அளித்து, அவர்களின் சந்தேகங்களுக்குத் தகுந்த பதிலளிக்க வேண்டும்.இவ்வளவு சவால்கள் நிறைந்த இந்தப் போட்டியில் திருவள்ளூர் மாவட்டம் பூவிருந்தவல்லி ‘பனிமலர் பொறியியல் கல்லூரி’ மாணவர்களின் கண்டுபிடிப்பான ‘கவாச் 360’ என்ற மொபைல் App, ‘Advanced ANPR & FRS’ தீர்வுக்கான முதல் பரிசான ஒரு லட்ச ரூபாயைத் தட்டிச் சென்றது.போட்டியில் வெற்றிபெற்ற எலக்ட்ரிக்கல் மற்றும் எலக்ட்ரானிக் பொறியியல் துறை மாணவர்கள் ஆர்.எஸ்.ஆஷிக் தனுஷ், சி.கிளாட்வின் பிரின்ஸ், ஆர்.ஹர்ஷினி, ஜே.டி. யோலின் ரெனிஷா, ஜி.ஹாஹினி மற்றும் கணினி அறிவியல் துறை மாணவர் ஆர்.சூரஜ் ஆகியோருக்கு வழிகாட்டியவர்கள் முனைவர் எஸ்.செல்வி, முனைவர் எஸ்.தீபா, முனைவர் பி.ஜி.சதீஷ்.இதுபோல் அறிவியல் சார்ந்த பல போட்டிகள் நடத்தப்பட்டு, நம் மாணவர்கள் பல பரிசுகளை அள்ள வேண்டும்!