மேஷம்இந்தக் காலகட்டத்தில் சுக்கிரனால் குடும்பத்தில் மகிழ்ச்சி அதிகரிக்கும். செவ்வாயால் பொருளாதார வளம் இருக்கும். சூரியனால் ஏற்பட்ட அவப்பெயர், அலைச்சல், சோர்வு முதலியன 14&ம் தேதிக்குப் பிறகு இருக்காது. வேலைக்குச் செல்லும் பெண்களுக்குப் பதவி உயர்வு கிடைக்கும். பெண் காவலர்கள் சிறப்பான முன்னேற்றம் காண்பர். வியாபாரம் செய்யும் பெண்களுக்கு காரிய அனுகூலம் ஏற்படும். பயணத்தின்போது கூடுதல் கவனம் தேவை.வழிபாடு: வியாழனன்று தட்சிணாமூர்த்திக்கு அர்ச்சனை செய்யலாம். ரிஷபம்சுக்கிரனால் பொருளாதார வளம் இருக்கும். மதிப்பு, மரியாதை கூடும். கேதுவால் குடும்பத்தில் மகிழ்ச்சி நிலவும். எடுத்த காரியம் வெற்றியடையும். பணப்புழக்கம் அதிகரிக்கும். புதிய சொத்து வாங்குவதற்கான காலம் கனிந்துவரும். உத்தியோகத்தில் உள்ளவர்களின் கோரிக்கைகள் நிறைவேறும். சுயதொழில் நடத்தும் பெண்களுக்கு சூரியனால் 14-ம் தேதிவரை பொருள் விரயம் ஏற்படும். சுக்கிரன், கேதுவால் தொழிலில் நல்ல லாபம் இருக்கும். உடல் நலம் மேம்படும்.வழிபாடு: சனியன்று சனிபகவானுக்கு அர்ச்சனை செய்யுங்கள். மிதுனம்குரு, சுக்கிரன், ராகு, புதனால் குடும்பத்தில் மகிழ்ச்சி நிலவும். பொருளாதார வளம் மேம்படும். பொன், பொருள் கிடைக்கும். சகோதரிகளால் பண உதவி கிடைக்கும். வேலைக்குச் செல்லும் பெண்களுக்குப் புதிய பதவி தேடிவரும். அரசு ஊழியர்கள் தங்கள் கோரிக்கைகளை 14-ம் தேதிக்குள் கேட்டு பெற்றுக்கொள்ளவும். சுயதொழில் செய்யும் பெண்களுக்கு லாபம் அதிகரிக்கும். சிலருக்கு வெளியூர் பயணங்கள் ஏற்படலாம். உடல் நலம் சிறப்படையும்.வழிபாடு: செவ்வாயன்று காளி மற்றும் முருகனுக்கு அர்ச்சனை செய்யுங்கள். கடகம்இந்தக் காலகட்டத்தில் சூரியனும் புதனும் அனுகூலமாக இருப்பார்கள். சகோதரிகள் மிகவும் உறுதுணையாக இருப்பர். குரு, தம்முடைய 5-ம் இடத்துப் பார்வையால் குடும்பத்தில் குதூகலத்தைக் கொடுப்பார். திருமணம் போன்ற சுப நிகழ்ச்சிகள் நடைபெறும். உத்தியோகத்தில் இருக்கும் பெண்கள் சிறப்பான நிலையில் இருப்பர். சுயதொழில் செய்யும் பெண்களுக்கு அரசின் சலுகைகள் கிடைக்கும். உடல் ஆரோக்கியம் மேம்படும்.வழிபாடு: செவ்வாயன்று முருகனை வழிபட்டு, சிவப்பு ஆடையை தானம் செய்யலாம். சிம்மம்வரும் 13-ம் தேதி செவ்வாய் சாதகமற்ற இடத்திற்குச் செல்கிறார். ஆனால், சூரியன் 15-ம் தேதி சாதகமான இடத்திற்கு வந்து நற்பலனைக் கொடுப்பார். தவிர, குரு, சுக்கிரன், கேதுவின் நன்மைகள் தொடரும். புனித ஸ்தலங்களுக்குச் சென்று வருவீர்கள். உத்தியோகத்தில் உள்ளவர்களுக்குப் புதியப் பதவி கிடைக்கும். பூ வியாபாரம் செய்யும் பெண்கள் நல்ல வருமானத்தைப் பெறுவர். புதன் சாதகமற்ற இடத்தில் இருப்பதால் சிலர் கெட்ட சகவாசத்துக்கு உள்ளாகலாம். உடல்நலம் மேம்படும்.வழிபாடு: புதனன்று குலதெய்வத்தை வணங்கி, பாசிப்பயறு தானம் செய்யலாம். . கன்னிஇந்தக் காலகட்டத்தில் புதன், சனிபகவானின் நன்மைகள் தொடரும். தவிர, செவ்வாய் 13-ம் தேதி சாதகமான இடத்துக்கு வருகிறார். உங்கள் முயற்சிகளில் வெற்றி கிடைக்கும். பிள்ளைகளால் மகிழ்ச்சியும் பெருமையும் கிடைக்கும். வேலைக்குச் செல்லும் பெண்கள் நற்பலன் கிடைக்கப் பெறுவர். வியாபாரம் செய்பவர்கள் அதிக லாபத்தைப் பெறுவர். அரசு வகையில் இருந்து வந்த அனுகூலமற்ற போக்கு 14-ம் தேதிக்குப் பிறகு மறையும். உடல் ஆரோக்கியம் மேம்படும்.வழிபாடு: ராகுவுக்கு அர்ச்சனை செய்யவும். நாக தேவதையை வணங்கவும். துலாம்குருவும் சுக்கிரனும் அனுகூலமாக நின்று பல்வேறு நன்மைகள் தருவார்கள். சகோதரிகளால் நற்சுகம் கிடைக்கும். திருமணமாகாமல் இருக்கும் பெண்களுக்கு திருமணம் கைகூடும். அதுவும் நல்ல வரனாக அமையும். வேலைக்குச் செல்லும் பெண்கள் சீரான நிலையில் இருப்பர். நகை வியாபாரம் செய்பவர்கள் அதிக லாபத்தைப் பெறுவர். அலைச்சல், சோர்வு, வயிறு தொடர்பான உபாதைகள் சரியாகும்.வழிபாடு: சனிக்கிழமைகளில் சனீஸ்வரனை வணங்கி, ஊனமுற்றவர்களுக்கு உதவுங்கள். விருச்சிகம்இந்தக் காலகட்டத்தில் எடுத்த காரியம் வெற்றியடையும். சகோதரர்கள் மிகவும் ஆதரவுடன் இருப்பர். சூரியனால் 14-ம் தேதி வரை நல்ல பணப்புழக்கமும் வளமும் கிடைக்கும். வேலைக்குச் செல்லும் பெண்கள் பதவி உயர்வு காண்பர். உங்கள் செல்வாக்கு அதிகரிக்கும். வியாபாரம் செய்யும் பெண்கள் நல்ல வருமானத்தைப் பெறுவர். உஷ்ணம், பித்தம், மயக்கம், சளி உள்ளிட்ட உபாதைகள் 12-ம் தேதிக்குப் பிறகு பூரணமாகக் குணமடையும்.வழிபாடு: செவ்வாயன்று முருகன் கோயிலுக்குச் சென்று அர்ச்சனை செய்யுங்கள். தனுசுகுரு, கேது, சனி ஆகியோரின் நன்மைகள் தொடரும். தவிர, சூரியன் 15-ம் தேதி சாதகமான இடத்துக்கு வருகிறார். அக்கம்பக்கத்தினர் அனுசரணையுடன் இருப்பர். வேலைக்குச் செல்லும் பெண்கள் பதவி உயர்வு காண்பர். கேதுவால் உங்கள் திறமைக்குத் தகுந்த அங்கீகாரம் கிடைக்கும். வியாபாரம் செய்பவர்கள் அதிக லாபத்தைப் பெறுவர். 12-ம் தேதிக்குப் பிறகு உஷ்ணம், பித்தம், மயக்கம், சளி உள்ளிட்ட உபாதைகள் வரலாம்.வழிபாடு: புதனன்று குலதெய்வத்தை வணங்கி, ஏழைகளுக்குப் பாசிப்பயறு தானம் செய்யுங்கள். மகரம்இந்தக் காலகட்டத்தில் புதனின் பலத்தால் குடும்பத்தில் மகிழ்ச்சி அதிகரிக்கும். பொருள் சேரும். கணவன்&-மனைவி இடையே அன்பு, பாசம் மேலோங்கும். ஆபரணங்கள் வாங்கலாம். உத்தியோகத்தில் இருக்கும் பெண்களுக்கு பதவி உயர்வும் மேலதிகாரிகளின் ஆதரவும் கிடைக்கும். வேலைப்பளு குறையும். வியாபாரம் செய்யும் பெண்களுக்கு இருந்த இடர்பாடுகள் மறையும். 12-ம் தேதிக்குப் பிறகு அலைச்சல் ஏற்படலாம்.வழிபாடு: தினமும் காலையில் சூரியனை வணங்கி, கோதுமை தானம் செய்யலாம். கும்பம்சூரியன் 15-ம் தேதி சாதகமற்ற இடத்துக்குச் செல்கிறார். 13-ம் தேதி செவ்வாய் சாதகமான இடத்துக்கு வருகிறார். தவிர, சுக்கிரன், ராகுவின் நன்மைகள் தொடரும். பெரியோரின் ஆதரவும் ஆலோசனையும் கிடைக்கும். சிநேகிதிகள் உதவிகரமாக இருப்பர். வேலைக்குச் செல்லும் பெண்களுக்குப் பதவி உயர்வு கிடைக்கும். கோயில் சார்ந்த தொழில்கள் சிறக்கும். குழந்தைகளின் உடல் ஆரோக்கியம் மேம்படும்.வழிபாடு: கேதுவுக்கு அர்ச்சனை செய்யுங்கள். துர்க்கை வழிபாடு நடத்துங்கள். மீனம்குரு, சுக்கிரனால் துணிச்சல் பிறக்கும். மதிப்பு, மரியாதை அதிகரிக்கும். உறவினர்களிடம் சுமுக நிலை ஏற்படும். சூரியனால் 14-ம் தேதிக்குப் பிறகு உற்சாகம் பிறக்கும். உத்தியோகத்தில் இருக்கும் பெண்கள் நல்ல வளத்தைக் காணலாம். சுயதொழில் செய்யும் பெண்களுக்கு லாபம் சிறக்கும். தீயோரின் தொல்லையிலிருந்து சிலர் விடுபடுவர். புதன் சாதகமற்ற இடத்தில் இருப்பதால், சிலர் வீண் மனஉளைச்சலுக்கு ஆளாக நேரலாம்.வழிபாடு: புதனன்று குலதெய்வத்தை வழிபட்டு, பசுவுக்கு பசுந்தழைப் போடுங்கள்.