அன்புவேலாயுதம்‘‘உலகில் முடியாதது எதுவுமில்லை. தன்னம்பிக்கையோடு பயிற்சி செய்தால் எதையும் சாதிக்கலாம்!’’ என்கிறார்கள், அடுத்தடுத்து பல்வேறு உலக சாதனைகள் புரிந்து வரும் ஆசிரியர் தம்பதி. மிக அதிகளவில் உலக சாதனை படைத்த பெருமையும் குடும்பமாக உலக சாதனை படைத்த பெருமையும் இவர்களுக்கு உண்டு!திருவள்ளூர் மாவட்டம், திருத்தணி ஒன்றியம் பெரிய கடம்பூர் ஊராட்சி ஒன்றிய துவக்கப்பள்ளியில் ஆசிரியராக பணியாற்றுகிறார் கோகுல்ராஜ். இவருடைய மனைவி புவனா, திருவாலங்காடு ஒன்றியம், கோடிவள்ளியிலுள்ள துவக்கப்பள்ளியில் இடைநிலை ஆசிரியை பணியில் உள்ளார். ‘ஆசிரியர் பணிக்கு நடுவிலும் எப்படி இவ்வளவு உலக சாதனைகள் இவர்களால் படைக்க முடிந்தது?’ என்பதை அறியும் நோக்கில் அவர்களை சந்தித்தோம்.எப்படி வந்தது இந்த உலக சாதனை யோசனை?‘‘சிலர் எங்களிடம் கேட்பார்கள்.... ‘நீங்கள் செய்வது உலக சாதனையா? அல்லது ஏற்கெனவே செய்த உலக சாதனையை நீங்கள் முறியடிக்கிறீர்களா?’ என்று. நாங்கள் செய்வதுதான் உலக சாதனை! காரணம், நாங்கள் இன்னொருவர் செய்த எந்தச் சாதனையையும் முறியடிக்கவில்லை. ‘100 புதிய உலக சாதனைகளை உருவாக்குவதே எமது முதல் இலக்கு!’ என்று களத்தில் இறங்கிய நாங்கள், அதை முறியடித்து, 150 சாதனைகளை கடந்து போய்க் கொண்டிருக்கிறோம். நாங்கள் செய்வது அனைத்துமே புதுப்புது சாதனைகள்! சொல்லப்போனால்... அதுவே உலக சாதனைப்பட்டியலில் முதல் சாதனை! வேறு யாராவது வேண்டு மானால் அதை முறியடிக்கலாம். ஆனால், அப்படி முறியடிக்க அவர்கள் நூற்றாண்டு காத்திருக்க வேண்டும்.உதாரணமாக, பலகுரல் சாதனையை பலர் செய்திருக்கலாம். நான் செய்த சாதனை 2011ஆம் ஆண்டு 11ஆம் மாதம் 11ஆம் தேதி 11 மணிநேரம் 11 நிமிடங்கள் 11 நொடிகள் தொடர்ந்து பேசி சாதனை நிகழ்த்தினேன். அதில் வெறும் சிரிப்பு மட்டுமல்லாது, சமூக சிந்தனைகள் நிறைந்திருந்தது. அதேபோல் 2014ஆம் ஆண்டு 2014 அடி நீளமுள்ள தாளில் 2014 சித்த மருத்துவக் குறிப்புகளை சுமார் 50 மணிநேரம் 14 நிமிடங்கள் தொடர்ந்து எழுதி சாதனை படைத்தேன். 1000 நிமிடங்கள் 1000 தலைப்புகளில் தொடர்ந்து பேசியது, அதேபோல் மேடை பழக்கமில்லாத, மைக்கில் பேசாத 20 பேரை வைத்து 24 மணி நேரம் இரண்டு மணி நேரத்திற்கு ஒரு தலைப்பு வீதம் 12 தலைப்புகளில் ‘விவாத மேடை’ நடத்தினேன்..செல்போன் வந்த புதிதில் சாதாரண செல்போனைக் கொண்டு 1330 திருக்குறள்களை, 13 சிம் கார்டுகளைப் பயன்படுத்தி 1330 பேருக்கு, 5 மணி நேரத்தில் சென்னை வள்ளுவர்கோட்டத்தில் அமர்ந்து, திருக்குறள்களை குறுந்தகவல் மூலம் அனுப்பியது அடுத்த சாதனை.12-12-2012 அன்று 12 மணி நேரம், 12 நிமிடங்கள், 12 நொடிகள் தொடர்ந்து தமிழ்க்கவிதைகள் வாசித்தது; ஒரே நிமிடத்தில் 24 குரல்களில் மிமிக்ரி செய்து, திருக்குறள் விழிப்பு உணர்வு சாதனை என புதுப்புது சிந்தனைகளில் சாதனை படைத்துள்ளேன். ‘விவேகானந்தர் தேடிய 100 கனவு இளைஞர்களில் ஒருவர்!’ என்கிற விருதுக்கு பத்தாயிரத்திற்கும் மேற்பட்ட போட்டியாளர்களில் நானும் ஒருவனாக தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளேன்..என்னுடைய மனைவி புவனா, விவேகானந்தரின் 150_வது ஜெயந்தி அன்று அவரின் 150 கொள்கைகளை 150 பேரை வைத்து 150 நிமிடங்கள் தொடர்ந்து உறுதிமொழி ஏற்பு செய்தது ஒரு சாதனை. இதில் ஒரு விநோதம்... விவேகானந்தர் பிறந்தநாளான ஜனவரி 12ஆம் தேதியில் பிறந்தவர் என்னுடைய மனைவி புவனா. விவேகானந்தர் தாயார் பெயரும் புவனாதான்!சகோதரி நிவேதிதாவின் 150-வது பிறந்த நாளையொட்டி 150 சிறந்த பெண்மணிகளுள் ஒருவராக தேர்ந்தெடுக்கப்பட்டு விவேகானந்தர் மடத்தில் விருது பெற்றவர். தவிர, தொடர்ந்து 12 மணி நேரம் கேரம் விளையாடியது; 24 மணி நேரம் தொடர்ந்து கைவினைப்பொருள்கள் செய்தது; 21 நிமிடங்களில் 366 ஹைக்கூ கவிதைகள் வாசித்தது; 2018ல் கிறிஸ்துமஸ் தினத்தையொட்டி 2018 ஐஸ் குச்சிகளில் கிறிஸ்துமஸ் தாத்தா உருவங்கள் வரைந்தது என 5 உலக சாதனைகள் புரிந்துள்ளார்.’’.-உங்கள் மகனும் மகளும் என்ன சாதனை செய்துள்ளார்கள்?‘‘எங்கள் மகன் பிரியன்ராஜ், 92 பாரம்பரிய காளைகளின் பெயர்களை 54 வினாடிகளில் கூறியது; ஒரு மணிநேரத்தில் 877 ஸ்மைலி படங்களை வரைந்தது; தொடர்ந்து 75 நிமிடங்கள் முதுகுக்குப் பின்னால் வணக்கம் செய்தது; எடைக்கு எடை காமராஜர் புத்தகங்களை பொதுமக்களுக்கு வழங்கியது; காமராஜரின் 116-வது பிறந்தநாளையொட்டி அவரின் புகழ்பாடும் 116 கவிதைகளை, 116 முறை மௌனமாக பாடியது; 20 குரல்களில் மிமிக்ரி செய்து, நெகிழி ஒழிப்பு விழிப்பு உணர்வூட்டியது; 108 புத்தகங்களின் பெயர்களை ஒரே நிமிடத்தில் கூறியது; ஏக பாதாசனத்தில் நின்று திருக்குறளின் 133 அதிகாரங்களை கூறியது உள்பட 14 சாதனைகளைப் படைத்துள்ளார்.எங்கள் மகள் ஆஷிகா, கௌரவர்கள் 100 பேரின் பெயர்களை 45 நொடிகளில் சொல்லி சாதனை படைத்திருக்கிறார். ஒன்றிலிருந்து ஆயிரம் வரை 15 நிமிடங்களில் ஆங்கிலத்திலும் தமிழிலும் ஒன், இரண்டு, த்ரீ, நான்கு... என ஒப்புவித்தது; 21 நிமிடத்தில் 1000 முறை நாக்கினால் மூக்கைத் தொட்டது; பெண் குழந்தைகளுக்கான பாலியல் வன்முறைகளுக்கு எதிராக விழிப்பு உணர்வூட்ட 1000 ரப்பர்களில் 1000 விழிப்பு உணர்வு படங்களை வரைந்து, அந்த ரப்பர்களை பெண்ணின் உருவமாக அடுக்கி சாதனை புரிந்தது என பட்டியல் நீள்கிறது!’’.சுவாரஸ்யமான சாதனை ஏதும் இருக்கிறதா? நீங்கள் படைத்த சாதனைகளுக்குக் கிடைத்த அங்கீகாரம் பற்றி...‘‘உலகிலேயே சிறிய அழைப்பிதழை நாங்கள் உருவாக்கி சாதனை செய்ய, சாதனைச் சான்றிதழ் வழங்கும் அதிகாரிகள், நண்பர்களுக்கு அழைப்பிதழ் கொடுத்து அழைத்திருந்தோம். நிகழ்ச்சிக்கு வந்தவர்களுக்கு அதன் பின்னர்தான் தெரியும்... நாங்கள் கொடுத்த அழைப்பிதழே அந்தச் சாதனைக்குரிய சிறிய அழைப்பிதழ்தான் என்று! உலகிலேயே மிகச்சிறிய கையெழுத்துப் பிரதியை, பறக்கும் விமானத்தில் வெளியிட்டோம். அதனால் ‘ஜெட்லி ரிகார்ட்ஸ் குழுமம்’ எங்களுக்கு, பறக்கும் விமானத்தில் அதற்கான சான்றிதழை அளித்தது. நாங்கள் புரிந்த சாதனைகளுக்காக மத்திய அரசு ராஷ்ட்ரிய புரஷ்கார் விருதும், தமிழக அரசு அண்ணா விருதும் அளித்து சிறப்பித்துள்ளது. லிம்கா ரிகார்ட்ஸ், ஏஷியன் ரிகார்ட்ஸ், மிராக்கிள் மற்றும் கின்னஸ் ரிகார்ட்ஸ் உள்பட பல்வேறு சாதனைப் புத்தகங்களிலும் எங்களுடைய சாதனைகள் இடம்பெற்றுள்ளன.’’.குடும்பத்துடன் நீங்கள் செய்த சாதனை ஏதாவது உண்டா?‘‘ஓசோன் தினத்தில் ஒரு கோடி பேர் எடுத்த உறுதிமொழியில் பங்கேற்றது; 1000 பேர் எடுத்த 100 சதவிகித ஓட்டு விழிப்பு உணர்வில் பங்கேற்றது; 1000 பேர் பங்கேற்ற நெகிழி எதிர்ப்புக்காக துணிப்பை நடனத்தில் பங்கேற்றது; ஒரு நிமிடத்தில் 10 குறள்கள் சொல்லும் 500க்கும் மேற்பட்டோரில் ஒருவராக பங்கேற்றது; அதிக நபர்கள் முதுகிற்குப் பின்னால் வணக்கம் சொல்லும் உலக சாதனைகளில் பங்கேற்றுள்ளோம். பத்துக்கும் மேற்பட்ட உலக சாதனை புத்தகங்கள் எங்களுக்கு, ‘உலக சாதனை படைத்த குடும்பம்!’ என்ற கிடைப்பதற்கரிய சான்றிதழ் வழங்கி கௌரவித்துள்ளது.’’.தற்கொலை தடுப்பில் முனைப்பு காட்டுகிறார்கள்!ஒவ்வொரு ஆண்டும் பள்ளி இறுதித் தேர்வு முடிவுகள் மற்றும் நீட் தேர்வு முடிவுகள் வெளியாவதற்கு முன்பாக பல்வேறு கிராமங்களுக்குப் பயணிக்கிறார்கள் இந்தத் தம்பதி. அங்கிருக்கும் தாய்மார்களை ஒன்று திரட்டி, அவர்களின் குழந்தைகளுக்கு தற்கொலை எண்ணம் ஏற்படாமலிருக்க விழிப்பு உணர்வுக் கூட்டம் நடத்தி, தன்னம்பிக்கையூட்டி வருகிறார்கள்..11 நாட்களும் 11 மணிநேரமும்!திருவள்ளூர் மாவட்டத்தில் நடைபெற்ற முதல் புத்தகத் திருவிழாவில் 15 நிமிடங்கள் அரங்கத்தில் அமர்ந்து வாசித்தால், ஒரு புத்தகம் பரிசு என அறிவித்து, 1111 நபர்களை 15 நிமிடங்கள் வாசிக்க வைத்துள்ளனர். அப்படி வாசித்தவர்களுக்கு தம்முடைய சொந்த செலவில் புத்தகங்கள் வழங்கி அசத்தியுள்ளனர் இந்த கின்னஸ் தம்பதி. தவிர,11 நாட்கள் நடைபெற்ற இந்தப் புத்தகத் திருவிழாவில் 11 நாட்களும் குடும்பத்தோடு தினசரி 11 மணி நேரம் பங்கேற்று, மாவட்ட ஆட்சியரின் பாராட்டை ஒவ்வொரு நாளும் இவர்கள் பெற்றுள்ளார்கள்!