`குலத் தாழ்ச்சி உயர்ச்சி சொல்லல் பாவம்' என மாணவர்களுக்கு வகுப்பெடுக்க வேண்டிய ஆசிரியர்களிடம், `உன் குலமென்ன?' எனக் கேட்கும் அதிகாரியால் கொந்தளிக்கிறது, தேனி. கூடவே, வசூல் புகார்களும் அணிவகுக்க, விசாரணை வளையத்தில் சிக்கியிருக்கிறார், அந்த அதிகாரி.தேனி, திண்டுக்கல், மதுரை ஆகிய மாவட்டங்களில் 295 அரசு கள்ளர் பள்ளிகளும் 50 மாணவ, மாணவியர் விடுதிகளும் இயங்கி வருகின்றன. கள்ளர் சீரமைப்பு துறையின்கீழ் நடத்தப்படும் இந்தப் பள்ளிகளில் பொதுக் கலந்தாய்வு இல்லாமல் ஐம்பதுக்கும் மேற்பட்ட ஆசிரியர்களை பணியிட மாற்றம் செய்து உத்தரவிட்டுள்ளார், இணை இயக்குநர் , பொன்குமார்.இதுதவிர, ஆசிரியர்களிடையே சாதிப் பாகுபாடு பார்ப்பது, எதிர்த்துக் கேட்டால் சஸ்பெண்ட் என மனஉளைச்சலை ஏற்படுத்துவதாகக் கூறி போராட்டத்திலும் இறங்கியுள்ளனர், ஆசிரியர்கள்.“பொன் குமார் எங்கே பணி புரிந்தாலும் அங்கு ஏதாவது ஒரு பிரச்னையை ஏற்படுத்தி, தனக்கு வேண்டாதவர்களுக்கு மெமோ கொடுப்பது, சஸ்பெண்ட் செய்வது என்று கெத்து காட்டுவார். 2016-ம் ஆண்டு கள்ளர் சீரமைப்புத் துறைக்குப் பதவி உயர்வில் அவர் வந்தபோதே, சங்க மாவட்டச் செயலாளராக இருந்த என்மீதும் நிர்வாகிகள் உட்பட மேலும் பதினைந்து பேர் மீதும் காரணமே இல்லாமல் சஸ்பெண்ட் நடவடிக்கை எடுத்தார்..பழிவாங்கும் நோக்கிலான அந்தச் செயலை எதிர்த்துப் போராடி வெற்றி பெற்றோம். அவர், பணிமாற்றம் செய்யப்பட்டார். இப்போது மீண்டும் இதே இடத்துக்கு வந்துள்ள பொன் குமார், மீண்டும் பழிவாங்கும் நடவடிக்கைகளை மேற்கொண்டு, ஆசிரியர்களின் நிம்மதியைக் கெடுத்துவருகிறார்'' என்கிறார், தமிழ்நாடு ஆரம்ப பள்ளி ஆசிரியர் சங்க கூட்டணியின் கள்ளர் பள்ளி தேனி, திண்டுக்கல், மதுரை மாவட்ட தலைவர் தீனன்.தொடர்ந்து பேசுகையில், `` இணை இயக்குநர் குறித்து துறை அதிகாரிகளிடம் புகார் தெரிவித்தோம். அவர்கள் எச்சரித்த பிறகும் திருந்துவதாகத் தெரியவில்லை. அதோடு, முறைகேடான சில காரியங்களையும் செய்துவருகிறார்” என்றவர், பொன் குமாரின் செயல்களைப் பட்டியலிட்டார். “ஆசிரியர்கள் இல்லாத நேரத்தில் அவர்களின் ரெக்கார்டுகளை எடுத்து ஆய்வு செய்வது. அதைவைத்து வீண்பழி சுமத்துவது, மிரட்டுவது என்று பிரச்னை செய்கிறார். அதோடு, பொதுக்கலந்தாய்வு நடத்தாமல், தலைக்கு 3 முதல் 5 லட்சம் வரை வாங்கிக்கொண்டு, கிட்டத்தட்ட 50 பேருக்கு இடமாற்றம் அளித்திருக்கிறார். நாங்கள் விளக்கம் கேட்கச் சென்றால், ‘உங்களிடம் பேச எனக்கு விருப்பமில்லை’ என்று தவிர்க்கிறார்.மேலும், திண்டுக்கல் மாவட்டத்தில் 36 பள்ளிகள் ஒற்றை ஆசிரியர் பள்ளியாக உள்ளன. இதில் இருக்கும் ஆசிரியருக்கு டிரான்ஸ்பர் கொடுத்து, பக்கத்திலிருக்கும் பள்ளியின் ஆசிரியரை மாற்றுப் பணியாக பார்க்கச் சொல்கிறார். இதனால், இரு பள்ளிகளின் மாணவர்களும் பாதிக்கப்படுகின்றனர்.அரசு கள்ளர் பள்ளியிலுள்ள பட்டதாரி, முதுநிலை பட்டதாரி ஆசிரியர்கள் பள்ளிக்கல்வித் துறைக்கு மாறுவதற்கு என்.ஓ.சி கொடுக்க வேண்டும். இதற்கு தலா 8 லட்ச ரூபாயை வசூலித்துள்ளார். நாங்கள் கொடுத்த புகாரின்பேரில் தற்போது விசாரணைக்கு உத்தரவிட்டுள்ளனர்” என்றார்..இதையடுத்து, கீரிபட்டி அரசு கள்ளர் உயர்நிலைப் பள்ளி தலைமை ஆசிரியர் ரேவதி நம்மிடம், “ பொதுமக்கள் பங்களிப்பில் ஹைடெக்காக செயல்படும் எங்கள் பள்ளிக்கு ஆய்வு என்ற பெயரில் பொன் குமார் வந்தார். அப்போது, `அதை எடு, இதைக் கொண்டு வா' என்றெல்லாம் மரியாதையில்லாமல் பேசினார். அவமானமாக இருந்தாலும் பொறுத்துக்கொண்டேன்.அதன்பிறகு ஒருநாள், இணை இயக்குநரை சந்திக்க வருமாறு பொறுப்பு கல்வி அலுவலர் ஜவஹர் சொன்னார். நானும் இணை இயக்குநர் அலுவலகத்துக்குச் சென்றேன். அங்கு, அவர் முன் இருந்த இருக்கையில் அமர்ந்தேன்.உடனே, `நீயெல்லாம் ஒரு ஆளு…உன் குலமென்ன? உனக்கு ஹெச்.எம். பதவி ஒரு கேடு' என்றெல்லாம் திட்டத் தொடங்கிவிட்டார். நான் திகைத்துப் போய் அமர்ந்திருக்க, அருகில் இருந்த அலுவலர், ‘சார் முன்னாடி பயமே இல்லாம உட்கார்ந்திருக்கீங்களே’ என்றார். அப்போதுதான், பட்டியல் இனத்தைச் சேர்ந்த நான், அவர் முன் அமர்ந்ததைப் பொறுக்க முடியாமல் அப்படி நடந்துகொண்டார் என்பதை உணரமுடிந்தது..உடனே, எழுந்து நின்று மன்னிப்பு கேட்டேன். அதற்கும், `மன்னிப்பு எப்படிக் கேட்கணும்னு தெரியாதா? குனிஞ்சு பணிவா கேளு' எனக் கேட்டதோடு. 17 பி மெமோ கொடுத்தார். இதனால், அழுதுகொண்டு வெளியே வந்த எனக்கு, என் கணவர்தான் ஆறுதல் சொன்னார். அந்த அவமானம் தாங்காமல் மூன்று முறை தற்கொலைக்கு முயன்றுள்ளேன். ஆனாலும் மன அழுத்தத்தில் இருந்து விடுபட முடியவில்லை. இதுகுறித்து அமைச்சர், செயலர், இயக்குநர் என புகார் கொடுத்துள்ளேன்” என்றார், கண்கள் கலங்க.ஆசிரியர்களின் குற்றச்சாட்டுகள் குறித்து பொன் குமாரிடம் கேட்டபோது, “நீங்க யாருன்னே தெரியாது. அப்புறம் எப்படி இதையெல்லாம் பேச முடியும்?” என்றபடியே இணைப்பைத் துண்டித்தார். கள்ளர் சீரமைப்பு துறையின் அலுவலர்களிடம் பேசியபோது, “பொது கலந்தாய்வு இல்லாமல் டிரான்ஸ்பர் போட்டது தவறு. இதுதொடர்பாக, விசாரணைக்கு வருமாறு துறையின் செயலாளர் பொன் குமாரை விசாரணைக்கு அழைத்துள்ளார். என்ன நடக்கும் என்று தெரியவில்லை” என்கின்றனர்.- பொ.அறிவழகன்