-ஷானு - பாலாஅமைச்சர் ராஜகண்ணப்பனுக்கும் சர்ச்சைக்கும் அவ்வளவு பொருத்தம்போல. பட்டியலின அதிகாரியை இழிவாக பேசியதாக இலாகா மாறுதலுக்கு ஆளான அவர் மீது, சொந்த சமூகத்தினரே குற்றச்சாட்டுகளை அடுக்குவதுதான் ஹைலைட். திருச்சி யாதவர் மாநாட்டை முறியடிக்க ராஜகண்ணப்பன் நடத்திய ராஜதந்திரங்கள்தான் சமூக வலைதளங்களின் ஹாட் டாபிக்..``என்னதான் பிரச்னை?" என யாதவ சமூக நிர்வாகிகள் சிலரிடம் கேட்டோம். ``தமிழ்நாடு யாதவ மகாசபை, `இந்தியன் வங்கி' கோபாலகிருஷ்ணனால் அறியப்பட்டு, ராஜ கண்ணப்பனால் வெகுவாக பிரபலம் அடைந்தது. அண்மையில் நடந்த மகாசபையின் தேர்தலில் நாசே ராமச்சந்திரன் தலைவர் ஆனார். `யாதவ சமூகம் என்றாலே அதன் ஒரே அடையாளம் தான் மட்டும்தான்' என்று எப்போதும் நினைப்பவர் ராஜகண்ணப்பன்.சமீபகாலமாக சங்கத்தில் தனக்கு முக்கியத்துவம் குறைவதாக ஆதங்கப்பட்ட ராஜ கண்ணப்பன், முக்கியமான அமைச்சர் ஒருவரிடம் கூறி, சங்கத்தை முடக்குவதற்கான முயற்சிகளை மேற்கொண்டு வந்தார். நெருக்கடிகள் அதிகமாகவே சங்கத்தின் பிரதிநிதிகள் ராஜகண்ணப்பனை போய்ப் பார்த்தார்கள்.அவரோ, 'எனக்கும் இதற்கும் எந்த சம்பந்தமும் இல்லை' என்று கூற, அடுத்து பெரியகருப்பனை போய்ப் பார்த்தார்கள். பெரியகருப்பனோ, அவர்களை வைத்துக்கொண்டே அந்த அமைச்சருக்குப் போன் போட்டுப் பேசினார். 'அண்ணே ஒருத்தர் முடக்க சொல்றார்... இன்னொருத்தர் வேண்டாம்னு சொல்றீங்க. நடுவுல நான் மாட்டிகிட்டு முழிக்கிறேன்' என்று கூறியதை நிர்வாகிகளும் கேட்டுக் கொண்டனர். ஆனாலும் இதைப் பெரிதுபடுத்தவில்லை..அந்த அமைச்சரின் அறிவுறுத்தலின்படி, யாதவ மகாசபையின் கணக்கு வழக்குகள் சரிபார்க்கப்பட்டன. 'பதிவேடுகள், ஆண்டறிக்கை எல்லாம் சரியாக இருக்கின்றன. இதில் நடவடிக்கை எடுப்பதற்கு ஏதுமில்லை' என்று அதிகாரிகள் கூறிவிட்டனர்.இந்தத் தகவலை ராஜகண்ணப்பனிடம் தெரிவித்த அந்த அமைச்சர், 'இதுக்குமேல என்னால் எதுவும் செய்ய முடியாது. என்னுடைய தொகுதியிலும் யாதவ சமுதாய மக்கள் நிறைய பேர் இருக்கிறார்கள். அவர்களின் ஆதரவு எனக்குத் தேவை' என்று கூறிவிட்டு ஒதுங்கிக் கொண்டார்.இந்தநிலையில், மகாசபையின் மாநாட்டுப் பணிகள் விறுவிறுப்பாக நடந்து வந்தன. மாநாட்டை முடக்க ராஜ கண்ணப்பன் மேற்கொண்ட முயற்சிகள் அனைத்தும் சமூக வலைதளங்களில் வைரலானது. மாநாட்டுக்காக எந்த உதவியையும் ராஜகண்ணப்பன் செய்யவில்லை. சங்கத்தினரும் அவரின் படத்தையும் பெயரையும் தவிர்த்துவிடடு வேலைகளைச் செய்தனர். திருச்சி சிறுகனூரில் மாநாடு நடத்துவதற்கான இடத்தை வாங்கிக் கொடுத்து உதவிகளைச் செய்தார், அமைச்சர் நேரு.ஆனாலும், கண்ணப்பன் தரப்பினர், 'நாசே ராமச்சந்திரன் அருந்ததியர் சமூகம், அவரின் மனைவி கிறிஸ்துவர்' எனக் கிளப்பிவிட்டனர். இது ஒரு பெரிய பிரச்னையாக மாற, ராஜ கண்ணப்பனுக்கு ராமச்சந்திரன் கடிதம் ஒன்றை எழுதினார். அதில், ' இந்த சங்கத்தை முடக்க முயற்சிக்கிறார்கள். இந்தப் பொறுப்பு எனக்கு சுமையே தவிர சுகம் அல்ல. எனக்கு நிறைய வேலைகள் இருக்கின்றன. நீங்கள் மாநாட்டுக்கு வர வேண்டும். மாநாடு முடிந்ததும் என்னுடைய தலைவர் பதவியை ராஜினாமா செய்கிறேன்' என்று குறிப்பிட்டிருந்தார். அதை கண்ணப்பனுக்கும் அனுப்பி வைத்தார்..இதற்கிடையே செப்டம்பர் 2ம் தேதி மாநாடு நடக்கவிருந்த நிலையில் ஆகஸ்ட் 31ம் தேதியன்று ’இந்த சங்கம் பதிவு பெற்ற சங்கமே அல்ல, இந்த அமைப்பின் தலைவர், சங்கத்தின் உறுப்பினரே கிடையாது. எனவே, யாதவ மக்கள் இம்மாநாட்டுக்கு எதிரான மனநிலையில் இருக்கிறார்கள். அதையும் மீறி மாநாட்டை நடத்தினால் சட்டம்-ஒழுங்கு பிரச்சனை ஏற்படும்' என காவல்துறையில் புகார் கொடுக்கப்பட்டது. நீதிமன்றம் மூலமாக தடை வாங்கும் முயற்சிகளும் நடந்தன. `மாநாடு நடப்பதற்கு இரு தினங்கள் இருக்கும்போதா தடை கேட்பார்கள்?’ எனக் கேட்டு, தடை பிறப்பிக்க நீதிமன்றம் மறுத்துவிட்டது.இதையடுத்து, ‘மாநாட்டுக்கு போகக்கூடாது. மீறினால் விளைவுகளை சந்திப்பீர்கள்’ என்று மாவட்ட நிர்வாகிகளை எச்சரித்துள்ளனர். அதையும் மீறி மாநாட்டுக்கு கூட்டம் வந்தது. அதேநேரம், `பெரிய கருப்பன் மட்டும் மாநாட்டில் பங்கேற்றால், யாதவர்களின் ஒரே தலைவர் அவர்தான் என்கிற இமேஜ் வந்துவிடுமே?' என்று பதறிய ராஜகண்ணப்பன், தி.மு.க தலைமையிடம் மாநாடு பற்றி சில தகவல்களைக் கூறியிருக்கிறார்.இதன் காரணமாக, கடைசி நேரத்தில் பெரிய கருப்பனையும் 'மாநாட்டுக்கு போக வேண்டாம்' என்று கூறிவிட்டு, உள்ளூர் அமைச்சர் என்கிற முறையில் நேருவை கலந்து கொள்ள வைத்தது, தி.மு.க” என்றனர் விரிவாக..மாநாடு சர்ச்சைகள் குறித்து, அமைச்சர் ராஜ கண்ணப்பனிடம் பேச முயன்றோம். அவர் சார்பாக நம்மிடம் பேசிய அவரின் உதவியாளர், "மாநாட்டுக்கும் எங்களுக்கும் எந்தத் தொடர்பும் இல்லை. இதுதொடர்பாக, அமைச்சரிடம் பேசுவதற்கு எதுவும் இல்லை. 25 லட்சம் பேரை வைத்து கூட்டம் நடத்தியவர், ராஜ கண்ணப்பன். அவருக்கென்று ஒரு இமேஜ் இருக்கிறது. அமைச்சர் ஒருவரிடம் பேசி, அவர் எந்த இடையூறும் கொடுக்கவில்லை. ராஜகண்ணப்பன் இல்லாமல் இந்த சமுதாயத்தைப் பற்றி வெளியே தெரியுமா? யாதவ மக்கள் அவருக்காகத்தான் ஓட்டு போடுவார்கள். இன்றைக்கு கூட்டம் நடத்துபவர்கள், நாளைக்கு ஓட்டு கேட்க போவார்களா என்ன?" என்றார், கொதிப்புடன்.மாநாடுகளில்தான் அரசியல் என்றால், இங்கே மாநாட்டை வைத்து அரசியல்.