அ.தி.மு.க.வில் ஆயிரத்தெட்டு பிரச்னைகள். தினம் தினம் ஒருவரையொருவர் திட்டி அறிக்கை விட்டு வருகிறார்கள். இந்த நிலையில் ஒண்ணுமண்ணா பழகி கட்சியை கட்டுக்கோப்பா நடத்திவந்த நாமக்கல் அ.தி.மு.க. நண்பர்களுக்கு இடையில், வீடு தேடிச் சென்று அடிதடி.நடந்த விவகாரம் குறித்து ரத்தத்தின் ரத்தங்களிடம் கேட்டதும், ‘‘நகரச் செயலாளர் பாஸ்கரும் மாவட்ட கவுன்சிலர் மயில்சுந்தரமும் ஆரம்பத்திலிருந்தே நண்பர்கள். ரெண்டு தடவை நாமக்கல் எம்.எல்.ஏ.வாக இருந்த பாஸ்கர் மூன்றாவது தடவையாக எம்.எல்.ஏ.வாக ஆசைப்பட்டு 25 கோடி ரூபாய்க்கு பக்கமாக செலவு செஞ்சாரு. ஆனா, துரதிர்ஷ்டவசமாக தி.மு.க. ராமலிங்கத்துகிட்ட தோத்துட்டாரு. இதுல பாஸ்கருக்கு ரொம்பவே வருத்தம். பணம் டெலிவரி செஞ்ச விஷயத்தில சில இடங்களுக்கு பணம் போகலைன்னு பாஸ்கருக்கு புகார்.மயில்சுந்தரத்துகிட்ட கேட்டப்ப, ‘நான் லோக்கல் ஆளுங்களுக்கு கொடுத்திட்டேன். அவங்க என்ன செஞ்சாங்கனு தெரியல’னு சொன்னதுல மனஸ்தாபம். இந்த நிலையில் பாஸ்கர் வீட்டுல போன வருஷம் லஞ்ச ஒழிப்புத் துறை ரெய்டு நடத்தி, பாஸ்கர் மேலயும், மனைவி உமா மேலயும் வழக்குப் பதிவு செஞ்சிட்டாங்க. பிறகு லஞ்ச ஒழிப்புத் துறை பிடித்த சொத்துக்களின் மதிப்பிடல் செஞ்சாங்க. இந்த ரெய்டில பிடிக்கப்பட்ட சொத்துக்கள் பத்தி துல்லிய தகவல் லஞ்ச ஒழிப்புத் துறை கையில எப்படி சிக்கிச்சுனு பாஸ்கருக்கு சந்தேகம்.வர்ற நாடளுமன்றத் தேர்தல்ல ஸ்ரீதேவி மோகன் என்கிற முக்கிய புள்ளிய அ.தி.மு.க. வேட்பாளரா ஆக்க மயில்சுந்தரம் சில வேலைகள் செஞ்சிக்கிட்டு இருக்காரு. இது பாஸ்கருக்கு பிடிக்கல. பாஸ்கர் கூட இருந்தவங்களும் மயில்சுந்தரத்துக்கு எம்.எல்.ஏ. பதவி மேல ஆசை வந்திருச்சுன்னு போட்டுக் கொடுத்தாங்க. அதனால மயில்சுந்தரத்தைத் தவிர்க்க ஆரம்பிச்சாரு பாஸ்கர். அடுத்து, போட்டோ போடக் கூடாது, மயில்சுந்தரத்தைப் பார்க்கக்கூடாதுனு கட்சிக்காரங்களுக்கு கட்டளை போட்டாரு. இதனால நட்பில விரிசல் அதிமாச்சு.இந்த நேரத்தில், ‘மயிலு தி.மு.க.வோட டை- அப்’ல இருக்கிறதா தங்கமணி காதுல போடுங்கன்னு சிலர்கிட்ட பாஸ்கர் சொன்னத கேள்விப்பட்டு மயில்சுந்தரம் பொங்கிட்டாரு. அதுக்குப் பிறகுதான், ‘ஏன்? இப்படி செய்றீங்கனு பாஸ்கர் வீட்டுக்கே போய் சண்டை போட்டு அடிதடியாகியிருக்கு. நண்பர்களா இருந்தவங்க இப்போ விரோதியா நிற்குறாங்க...’’ என்றனர். ‘வீட்டுக்குப் போய் சண்டை போட்டீங்களாமே..?’ மயில்சுந்தரத்திடமே கேட்டோம். ‘‘ஹண்ட்ரட் பர்சன்ட் தவறான தகவல். அ.தி.மு.க. நிர்வாகி ஒருத்தருதான் இப்படி தகவல் பரப்பிக்கிட்டு இருந்தாரு. தி.மு.க.வோட எந்த கூட்டும் இல்லை. சண்டை அளவுக்கு பிரச்னை இல்லை. சங்கடம் இருக்கு. சமீபமா புதிதா வந்த நட்புகள், பாஸ்கரை தவறா வழிநடத்தறாங்க. அவரு சிந்திக்கணும்’’ என்றார்.பாஸ்கரிடம் பேசினோம். ‘‘உண்மை இல்லங்க. நட்பிலதான் இருக்கோம். சங்கடம், சண்டை வந்தாலும் மறுபடியும் பேசிக்குவோம். இதெல்லாம் காலங்காலம நடக்கிறதுதான். நீங்க சொன்ன தகவல் எதுவுமே உண்மையில்ல. தேர்தல் முடிஞ்சி ரொம்ப நாள் ஆச்சிங்க’’ என்றார். கட்சியில இருக்கிற பஞ்சாயத்து போதாதாப்பா.. - கே.பழனிவேல்