Reporter
புதுக்கட்சி தொடங்குவாரா பன்னீர்?! கலாய்த்த நத்தம்... கலங்காத வைத்தி
`எவ்வளவு இழப்புகள் வந்தாலும் பன்னீர்செல்வத்தை அ.தி.மு.கவில் சேர்க்கக்கூடாது’ என்பதில் எடப்பாடி உறுதியாக இருக்கிறார். `2024 நாடாளுமன்றத் தேர்தலில் தனது பலம் என்ன என்பதை காட்டிவிட்டு, அதன் பிறகு வேண்டுமானால், பன்னீரை கட்சியில் சேர்த்துக்கொள்வது குறித்து யோசிக்கலாம்' என்பதுதான் எடப்பாடி ஆதரவு நிர்வாகிகளின் நோக்கம்.