“வெட்கத்தைவிட்டு சொல்றேன், அதிகாரிகள் யாரும் என்னை மதிக்கறதில்லை. பொதுமக்கள் கொடுக்கும் கோரிக்கை மனுவோடு நானும் மனு கொடுத்தாதான் பரிசீலனையே பண்ணுவோம்னு சொல்றாங்க” - பரிதாபமாகக் கேட்கிறார், பவானிசாகர் தனித் தொகுதியின் எம்.எல்.ஏ! மாமன்னன் கதையை மிஞ்சுகிறது பண்ணாரியின் அவலம்.ஈரோடு மாவட்டம் பவானி சாகர் தனித்தொகுதியின் எம்.எல்.ஏ.வாக இருப்பவர் அ.தி.மு.க.வை சேர்ந்த பண்ணாரி. தனக்கும் அரசுத் துறைக்கும் இடையே நடக்கும் மோதலை பொதுமேடையிலேயே பேசி அதிர வைப்பவர். பல வழிகளில், ‘மாமன்னன்’படத்தை நினைவூட்டுகிறார்.பண்ணாரியிடம் பேசினோம். “பவானிசாகர் தொகுதி, பழங்குடி மற்றும் பட்டியலின மக்கள் அதிகம் இருக்கிற தொகுதி. நாகரிகம் இவ்ளோ வளர்ந்த பிறகும் இந்த தொகுதியில பல ஊர்களுக்கு ரோடு இல்லை, தாகம் தீர்க்க தண்ணியுமில்லை. இதெல்லாம் சரி செய்யோணும்னு சொல்லித்தான் ஒரு எம்.எல்.ஏ.வா என்னோட பணியை தொடங்கினேன்.ஆனா, பாருங்க அதிகாரிங்க ஒத்துழைப்பு சுத்தமா இல்லை. அட உயரதிகாரிகள்தான் நம்மளை இப்படிப் பார்க்குறாங்கண்ணா, கீழ்நிலை அதிகாரிகள் அதைவிட மோசமா என்னை நினைச்சுக்கிறாங்க. `பட்டியலினத்து ஆளுதானே'ன்னு பரிகாசமா பேசுறாங்க. நான் பரிந்துரை பண்ணிக் கொடுக்குற கோரிக்கைகள் மேலே நடவடிக்கையும் எடுக்கிறதில்லை, விசாரிக்கிறதுமில்லை, மக்களுக்கு அதை நிறைவேத்திக் கொடுக்குறதுமில்லை.‘கோரிக்கை மனு கொடுத்து இத்தனை நாளாகிப்போச்சே, மக்களுக்கு நல்லது ஒண்ணும் நடக்கலையே?’ன்னு கேட்டா, ‘மக்கள் கொடுக்குற மனுவுல உள்ள விஷயங்கள் சம்பந்தமா நீங்களும் ஒரு மனு சேர்த்துக் கொடுத்துடுங்க. விசாரிச்சுடலாம்’ன்னு பேசுறாங்க. இந்த நடைமுறை வேற எந்த ஊர்ல இருக்குதுன்னு தெரியலை.இவ்ளோ பெரிய தொகுதியில பல லட்சம் மக்கள் இருக்கிறாங்க. இவங்க பட்டா, ரோடு, தண்ணீர் பைப், பள்ளிக்கூடம்னு தினமும் ஆயிரக்கணக்குல மனுக்களை கொடுப்பாங்க. இந்த ஒவ்வொரு மனுவையும் விளக்கிச் சொல்லி, அதன் பேர்ல நடவடிக்கை எடுக்கச் சொல்லி தனி மனு கொடுக்கோணும்னா இது சாத்தியமா? இந்தளவுக்கு சொல்றாங்கன்னா என்னைய ஒரு எம்.எல்.ஏ.வாவே மதிக்கலைன்னுதானே அர்த்தம்?நானும் ஓப்பன் மேடையிலேயே ‘என்னைய யாரும் சார்.. சார்னு கூப்பிடோணும்னு அவசியமில்லை. என் பேரை சொல்லி, `ஏ பண்ணாரி'ன்னுகூட கூப்பிட்டுக்கோங்க, ஆனா, `மக்கள் கொடுக்குற மனுக்கள் மீது நடவடிக்கை எடுத்து நல்லது பண்ணிக் கொடுங்க’ன்னு சொல்லிப் பார்த்துட்டேன். ஆனால். ஒரு இன்ச் கூட நகர மாட்டேங்குது.ஆனால், எடுத்ததுக்கெல்லாம் பணம், பணம்னு பேயா அலையுறாங்க. அதுலேயும் இந்த வி.ஏ.ஓ, சர்வேயர் பண்ற லஞ்ச லாவண்யத்துக்கு அளவே இல்லை. கட்டட அனுமதிக்கு லட்சம் லட்சமா லஞ்சத்தை வாங்கி குவிக்கிறாங்க. இன்னும் சொல்றேன் கேளுங்க… சத்தியமங்கலம், பவானிசாகர் பகுதிகள்ல விவசாயம் விசாலமா நடக்குது. அரசாங்கம் விவசாயிகளுக்கு பலவகையான மானியங்கள், நஷ்ட ஈடுகள்னு தருது. ஆனால், முறைகேடான பயனாளிகளால திட்டத்தோட நோக்கமே போய்ச் சேர்றதில்லை. தகுதியில்லாத நபர்களை பயனாளியாக்கி, அதற்காக பெரிய கமிஷனை அதிகார்கள் எடுத்துக்குறாங்க. என் தொகுதியில மட்டும் இப்படி பல கோடி ரூபாய் பணம் முறைகேடா பயன்படுத்தப்பட்டிருக்குது.ஆனால், முதல்வர் என்னமோ ‘வேளாண்மைத்துறை சீரும் சிறப்புமா நடக்குது’ன்னு சொல்றார். நான் ஓப்பன் சவால் வைக்கிறேன், நேர்மையான அதிகாரிகள் மூலமாக முதல்வர் விசாரணைக்கு உத்தரவிட்டால், இந்த தொகுதியில் நடந்திருக்கும் பல கோடி ரூபாய் முறைகேடுகளை ஆதாரத்தோடு நிரூபிக்க தயாரா இருக்கிறேன்.காட்டுப் பகுதியில் வாழும் பழங்குடி மக்கள் விலங்குகள் தாக்கி இறந்தால் உரிய நிவாரணம் தர்றதில்லை. அப்படியே பணம் வந்தாலும் அதுவும்முறைகேடா சுருட்டப்படுது. அட.. வயதான ஏழைப் பெண்கள் கவர்மெண்டு கொடுக்கிற முதியோர் பென்சன் பணத்துல ஏதோ கால் வயிறு கஞ்சி குடிக்கிறாங்க. அதைக் கொடுக்கறதுக்குக்கூட பணத்தை கேட்டா எங்கே போவாங்க அந்த பாட்டிங்க?‘அரசு அதிகாரிகளே, ஊழியர்களே.. உங்களுக்கு கவர்மெண்டு சம்பளம் கொடுக்குதுல்ல அப்புறம் எதுக்கு மக்களோட ரத்தத்தை உறிஞ்சுறீங்க?’ அப்படின்னு வெளிப்படையாவே கூட்டத்துலேயே கேட்டுட்டேன். ஆனாலும் யாரும் திருந்தலை.இலவச பட்டா கேட்டு மக்கள் மனு கொடுத்திருக்காங்க. அதிகாரிகளிடம் சொன்னால், ‘நீங்களே இடமிருந்தால் பார்த்து சொல்லுங்க’னு சொல்றாங்க. அப்பவும் அசராம அலைஞ்சு திரிஞ்சு பல ஏக்கர் அரசு நிலத்தை கண்டுபிடிச்சும் கொடுத்துட்டேன். அதுக்குப் பிறகும் ‘இவன் என்ன சொல்றது?’ன்னு என்னை அலட்சியம் செய்றாங்க.ஈரோடு மாவட்ட கலெக்டரோட கவனத்துக்குக் கொண்டு போனால் அவர் காது கொடுத்து கேட்கிறார். ஆனால், என்னோட கோரிக்கைகளை இந்தத் தொகுதி அதிகாரிகளுக்குதான் அனுப்பி வைக்கிறார். அதிகாரிகளோ, கமிஷனே குறின்னு இருக்கிறாங்க” எனக் குமுறித் தீர்த்தார்.எம்.எல்.ஏ. பண்ணாரியின் புகார்கள் பற்றி ஈரோடு மாவட்ட அமைச்சர் முத்துசாமியிடம் கேட்டபோது, “நாட்டுக்கே சமூக நீதி கற்றுக் கொடுத்த பெரியாரின் மண் ஈரோடு. பெரியார் வழி நடக்கும் ஆட்சி இது. இந்த ஆட்சியில் எம்.எல்.ஏ.வை சாதியரீதியில் அரசு அதிகாரிகள் அலட்சியம் செய்வதாகச் சொல்வது ஏற்புடையதாக இல்லை. அப்படி யாரும் செய்வது கிடையாது. இருந்தாலும் இதுகுறித்து விசாரிக்க உத்தரவிடப்படும். அதேநேரம், எதிர்க்கட்சி எம்.எல்.ஏ. பொத்தாம் பொதுவாக குற்றச்சாட்டுக்களை வீசக்கூடாது” என்றார்.என்ன நடக்குதுன்னு விசாரிங்க சார்! - எஸ்.ஷக்தி