பெயரிலேயே காந்தி இருப்பதால்தானோ என்னவோ, மகாத்மா காந்தி தேசிய ஊரக வேலை உறுதியளிப்புத் திட்டத்தில் ரூபாய்களை சுருட்டுவது ஊருக்கு ஊர் இயல்பாக அரங்கேறுகிறது. அதிலும், 'மோசடியில் இது புது ரகம்' என கதிகலங்க வைக்கிறது, கடலூர்.கடலூர் மாவட்டம் குப்பநத்தம் ஊராட்சி மன்றத் தலைவராக இருப்பவர், தனலட்சுமி. `இவரின் வாரிசுகளால் நூறுநாள் வேலைவாய்ப்புத் திட்டத்தில் நடக்கும் குளறுபடிகள் ஏராளம்' என்கின்றனர், இப்பகுதி மக்கள்..குப்பநத்தம் புதுக்காலனியை சேர்ந்த சுபிதாவிடம் பேசினோம், ”நூறு நாள் வேலைத்திட்ட பணியாளராக கடந்த நாலு வருஷமா தனலட்சுமியின் மகன் பிரபுதான் இருக்கிறார். மாசத்துல முதல் வாரம் மட்டும் எல்லாருக்கும் வேலை கொடுப்பார். அடுத்த மூணு வாரத்துக்கு எந்த வேலையையும் கொடுக்க மாட்டார். ஆனா, ஏதோ ஏதோ காரணத்தைச் சொல்லி கையெழுத்தை மட்டும் வாங்கிக்குவார்.ஒரு வாரம் வேலை செஞ்சதுக்கு மட்டும் ஆயிரத்து ஐநூறு ரூபாய்ல ஐநூறை கமிஷனா எடுத்துட்டு மீதி பணத்தைத் தருவார். மீதி மூணு வாரம் நாங்க எல்லாம் வேலை செஞ்சதாக கணக்கை எழுதி அந்த மூணு வார பணத்தையும் அவரே எடுத்துக்குவார். இப்படிக் கொள்ளையடித்த பணமே நாலு லட்சத்தைத் தாண்டும். இதுநாள் வரைக்கும் நூறுநாள் வேலைத்திட்ட அட்டையை எங்கள் கண்ணுல காட்டியதே இல்லை..தனலட்சுமிக்கு ஓட்டுப்போட சொன்னது எங்க புதுக்காலனியை சேர்ந்த கோயில் தர்மகர்த்தா வீரபாண்டியன்தான். அதனால அவர்கிட்ட போய் பேசினோம். ஆனா, அவரையே அடியாள்களை வச்சு பிரபு அடிச்சுட்டார். அதைக் கண்டிச்சு சாலைமறியல் போராட்டம் செஞ்சோம். இதை பத்திரிகைகாரங்களுக்கு வெளிப்படையா சொல்றதால எங்களோட உயிருக்கும் ஆபத்து இருக்குது. அதனால காவல்துறைதான் உரிய நடவடிக்கை எடுத்து எங்க மக்களைக் காப்பாத்தணும்” என்றார் அச்சத்துடன்.குப்பநத்தம் புதுக்காலனியை சேர்ந்த வீரபாண்டியனோ, ``ஒண்ணும் சொல்றதுக்கில்லை. ஊராட்சி மன்றத் தலைவரோட குடும்பமும் நாங்களும் உறவுக்காரங்க. இப்போ பணத்துக்காக மக்களை ஏமாத்தறத தட்டிக் கேட்கப் போனது தப்பா போயிருச்சு. உழைச்ச மக்களுக்கு காசு போய் சேர்ந்தா போதும்" என்றார் விரக்தியுடன்..``ஏன் இப்படி?" என பிரபுவிடம் கேட்டோம். ``ஏரி வெட்டும் கான்ட்ராக்டர், ரோடு போடும் கான்ட்ராக்டர்கள்கிட்ட எல்லாம் வீரபாண்டியன் கோயில் கட்டறதுக்காக பணம் கேட்டார். அவர் கேட்ட இரண்டு லட்ச ரூபாயை கொடுக்கலை. இதனால கான்ட்ராக்டர்களும் வேலை செய்யலை. இதைப் பத்தி பி.டி.ஓ.க்கள் கடிதம் அனுப்பியிருக்காங்க. இதையெல்லாம் மறைக்கவே, நூறு நாள் வேலைத்திட்டத்தில் பணமோசடி என பொய்யான புகார்களைச் சொல்றாங்க. நாங்க மனசாட்சிப்படி நடந்துகொள்கிறோம்” என்றார்..விருத்தாசலம் போலீஸ் டி.எஸ்.பி ஆரோக்கியராஜிடம் பேசியபோது, ``குப்பநத்தம் மக்கள் கொடுத்த புகாரை வட்டார வளர்ச்சி அலுவலருக்கு அனுப்பி வைத்திருக்கிறேன். `நூறு நாள் வேலைத்திட்ட பணியில் பயனாளிகளின் பணத்தை மோசடி செய்தது உண்மையா?' என்று விசாரித்து அறிக்கை தருமாறு கேட்டிருக்கிறோம்” என்றார்.ஆய்வு நடத்தி அல்லல்களைத் தீர்க்க வேண்டியது அரசின் கடமை.- கோவிந்த ராஜு