நிலவில் தரையிறங்கி உலக நாடுகளுக்கே இந்தியா சவால்விட்டாலும், உள்ளூரில் அதை முன்வைத்து எழும் சர்ச்சைகள் கொஞ்சம் நஞ்மல்ல. நிலவின் ரகசியங்களை பிரக்யான் ரோவர் ஆராய்கிறதென்றால், இங்கே விஞ்ஞானிகளின் சாதி, மதம், குலம், கோத்திரம் என பூர்வீகத்தை சிலர் ஆராய்வதுதான் கொடுமை. அந்தவகையில், நான்கு முக்கிய சர்ச்சைகளுக்கு வித்திட்டுள்ளது சந்திரயான் - 3. கல்வி அரசியல் `அரசுப் பள்ளி மாணவர்களைவிட, தனியார் பள்ளியில் பயிலும் மாணவர்களே திறமைசாலிகள்' என்ற எண்ணம் சமூகத்தில் இருக்கிறது. இந்நிலையில், சந்திரயான் 1 திட்டத்தில் பங்கெடுத்த மயில்சாமி அண்ணாதுரை, சந்திரயான் 2 திட்டத்தில் இருந்த வனிதா முத்தையா, சந்திரயான் 3 திட்டத்தில் பணியாற்றிய வீரமுத்துவேல், மங்கள்யான் திட்டத்தில் பணிபுரிந்த சுப்பையா அருணன் ஆகியோர், அரசுப் பள்ளியில் தமிழ்வழியில் படித்தவர்களே என்ற தகவல் வெளியானது. இதை முன்வைத்து, `மாநில அரசின் கல்விக் கொள்கையே சிறப்பாக இருக்கும்போது, மத்திய அரசின் புதிய கல்விக்கொள்கை தேவையா?' என்ற கேள்வியை தி.மு.க.வினர் எழுப்பி வருகின்றனர்..இதுகுறித்து கல்வியாளர் பிரின்ஸ் கஜேந்திர பாபுவிடம் கேட்டபோது, “உலகம் முழுக்கவே தாய்மொழிக்கல்விதான் முதலிடத்தில் உள்ளது. அப்படி படித்தவர்களே இஸ்ரோ உள்ளிட்ட ஆராய்ச்சி நிறுவனங்களில் பணிபுரிகின்றனர். சாதனைகளையும் செய்து வருகின்றனர். அந்தச் சாதனைகள் வெளிவரும்போதுதான், அவர்கள் படித்த பள்ளி, படித்த பாடத்திட்டம் அனைத்தும் புகழ்பெறும். அப்படித்தான், இஸ்ரோ விஞ்ஞானிகளின் வெற்றியைத் தொடர்ந்து தற்போது அரசுப் பள்ளியின் புகழ் வெளிப்பட்டுள்ளது. தனியார் உள்ளே நுழைந்ததுமே, கல்வியும் வியாபாரமாகிவிட்டது. புதிய கல்விக்கொள்கை 2020, தாய்மொழி வழிக் கல்விக்கு ஐந்தாம் வகுப்பு வரை முக்கியத்துவம் தரப்படும் என்கிறது. ஆனால் எந்தவகையில் முக்கியத்துவம் தரப்படும் என்பது பற்றி தெளிவான குறிப்பு அதில் இல்லை. இது கல்வித்துறையை இன்னும் குழப்பமடையவே செய்யும்” என்றார்..ஓட்டு அரசியல் “சந்திரயான் 3 திட்டம் வெற்றி பெற்றதற்கு அந்தத் திட்டத்தின் தலைவர் வீரமுத்துவேல்தான் காரணம்” என இஸ்ரோ தலைவர் சோம்நாத் பாராட்டினார். இதையடுத்து, வீரமுத்துவேல் மீதும் அவரின் குடும்பத்தினர் மீதும் அரசியல் வெளிச்சம் படரத் தொடங்கிவிட்டது. “இந்தத் திட்டத்துக்கு அனுமதி கொடுத்து நிதி வழங்கியவர் பிரதமர் மோடிதான்” என்று பா.ஜ.க.வினர் பிரசாரம் செய்ய… காங்கிரஸ் கட்சியினரோ, “இஸ்ரோ தொடங்கக் காரணமாக இருந்த நேருவுக்குத்தான் அத்தனை கிரெடிட்டும்” என்று தங்கள் பங்குக்கு சொந்தம் கொண்டாடினார்கள். இதைத் தொடர்ந்து, வீரமுத்துவேலுவை போனில் வாழ்த்திய முதல்வர் ஸ்டாலின், அவரின் தந்தை பழனியிடமும் பேசினார். இதுபோதாதா… “வீரமுத்துவேலின் குடும்பமே தி.மு.க. பாரம்பரிய குடும்பம்தான். பகுத்தறிவு பகலவன்களே நிலவை அடைந்திருக்கிறார்கள்” என்று தி.மு.க-வினரும் சொந்தம் கொண்டாடத் தொடங்கிவிட்டார்கள்..இதுகுறித்துப் பேசும் பா.ஜ.கவின் மாநிலச் செயலாளர் எஸ்.ஜி.சூர்யா, “இறை அருளால் சந்திரயான் 3 திட்டம் வெற்றி பெற்றதாக விஞ்ஞானி வீரமுத்துவேல் ஒரு பேட்டியில் குறிப்பிட்டுள்ளார். அதோடு, இந்தத் திட்டம் வெற்றிபெற வேண்டும் என பல கோயில்களுக்குச் சென்று வேண்டியதாகவும் அவர் குறிப்பிட்டுள்ளார். வீரமுத்துவேலை ஏற்கும் அவர்கள், அவரின் ஆன்மிகத்தை ஏற்பார்களா? அவரின் தந்தை தி.மு.க.வைச் சேர்ந்தவர் என்பதைவைத்து இவரும் தி.மு.ககாரர் என்று சொல்வது அரசியல் அநாகரிகம். `அப்படித்தான் உரிமை எடுத்து கொண்டாடுவோம்' என்று தி.மு.க.வினர் அடம்பிடித்தால், நாங்குநேரியில் சாதி சண்டை போட்ட மாணவர்களும் தி.மு.க.வைச் சேர்ந்தவர்கள்தான் என்பதை ஏற்றுக் கொள்வார்களா?” என்றார் கொதிப்புடன். சாதி அரசியல் இதைவிடக் கொடுமை, சந்திரனின் வட்டத்தைத் தொட்ட, இஸ்ரோ விஞ்ஞானிகளை சாதி வட்டத்துக்குள் அடைக்க ஒரு பெரும் போராட்டமே நடந்து வருவதுதான். மயில்சாமி அண்ணாதுரை தொடங்கி வீரமுத்துவேல் வரையில், `அவர்களின் சாதி என்ன?' என்று தேடுவதையே முழுநேர வேலையாக மாற்றிக்கொண்டு செயல்பட்டு வருகின்றன, சில கும்பல்கள். இந்த விவகாரம் தொடர்பாக தமிழ்ப் பேரரசுக் கட்சியின் தலைவர் கெளதமன் கூறும்போது, ``காலம்காலமாக இங்கே சாதி இருக்கத்தான் செய்கிறது. தற்போதைய ஆட்சியை ‘சமூக நீதி ஆட்சி’, ‘திராவிட மாடல்’ ஆட்சி என்று பேசினாலும் இப்போதும் சாதி இருக்கிறது. தமிழக விஞ்ஞானிகள் வெற்றி பெற்றிருப்பது அனைவருக்குமே பெருமையான விஷயம்தான். அதேசமயம், அவர்கள் எந்தத் தமிழ்க் குடியைச் சேர்ந்தவர்கள் என்று தெரிந்துக்கொள்வதில் எந்தத் தவறும் இல்லை. பிற சமூகத்தை இழிவுபடுத்துவதுதான் தவறு. சொந்தக் குடி பற்றிய பெருமிதம் கொள்வதை தவறாகக் கருத முடியாது" என்றார்..மத அரசியல் அடுத்து, விக்ரம் லேண்டர் நிலவில் வெற்றிகரமாக தரையிறங்கிய இடத்தை `சிவசக்தி பாயிண்ட்' என அழைக்கப்பட உள்ளதாக பிரதமர் மோடி அறிவித்தார். அதையடுத்து, ‘விஞ்ஞானத்திலும் இந்து மதத்தை புகுத்த முயற்சிக்கிறது பா.ஜ.க.’ என எதிர்ப்பு குரல்கள் கிளம்பியுள்ளன. இதுகுறித்து பேசும் திராவிடர் கழக வழக்கறிஞர் அருள்மொழி, , “அறிவியல் மதத்துக்கு அப்பாற்பட்டது. சந்திரயான் 3 வெற்றி என்பது நம் நாட்டின் அனைத்து மத, இன மக்களுக்கும் பொதுவானது. எனவே, அந்த இடத்துக்கு விஞ்ஞானபூர்வமாகவோ அல்லது பொதுப்பெயரோ வைப்பதுதான் சரி. ஆனால், சிவசக்தி என்று பெயர் வைத்துள்ளார், மோடி. அப்படியென்றால் சிவன் தலையில் நிலா உள்ளது என்கிறார்களா? பகுத்தறிவுவாதிகள் இந்தக் கேள்வியைக் கேட்டால் உடனே மத உணர்வைப் புண்படுத்திவிட்டதாகச் சொல்வார்கள். மதத்துக்கு சம்பந்தமில்லாத இடங்களில் இவர்கள் ஏன் மதத்தைப் புகுத்த வேண்டும்? இதன்பின்னால், சனாதன சம்ஸ்கிருதத்தை புகுத்தும் மிகப்பெரிய விஷயம் ஒளிந்துள்ளது”என்றார். சந்திரனை தொட்டது யார்… ஆம்ஸ்ட்ராங்கா… அடி, ஆம்ஸ்ட்ராங்கா… அடி நீதானே… யார் எப்படியோ போகட்டும், நாம் ரொமான்ஸ் மூடுக்கு போவோம்! - அபிநவ்