- அரவிந்த்‘அண்ணன் எப்போ கிளம்புவாரு, திண்ணை எப்போ காலியாகும்?’ என்று காத்திருந்ததுபோல் செந்தில் பாலாஜி இடத்தைப் பிடிக்க, கரூர் உடன்பிறப்புகள் ஆடும் ஆட்டத்தைப் பார்த்து எதிர்க்கட்சியினரே சற்று மிரண்டுபோயிருக்கிறார்கள்! .கரூர் மாநகராட்சி தி.மு.க கவுன்சிலரான சக்திவேலுக்கும், அ.தி.மு.க கவுன்சிலர் சுரேஷ் என்பவருக்கும் நடந்த மோதலே இதற்கு சாட்சி. இதுகுறித்து நம்மிடம் பேசினார் கவுன்சிலர் சுரேஷ். “மாநகராட்சி மன்றக் கூட்டத்துல, நரிக்கட்டியூர் பகுதியில முள்ளுச் செடிகளை அகற்றினதாச் சொன்னார், கரூர் மாநகராட்சி கவுன்சிலர், சுரேஷ். அதுக்குப் பயன்படுத்தின ஜே.சி.பி.க்கு வாடகை செலவு ஒரு லட்சம்னு செலவுக்கணக்கு வாசிச்சாரு. அது என்னோட வார்டுல வர்ற பகுதி. அதனால நான் எழுந்து, ‘என்னோட வார்டுல எந்த இடத்துலயும் முள்செடிகளை அகற்றினதா தெரியலையே... எங்கே அகற்றினீங்கன்னு சொல்ல முடியுமா?’ன்னு கேட்டேன்.உடனே தி.மு.க. உறுப்பினர்கள் எல்லாம் எழுந்து, ‘கேள்வி எல்லாம் கேட்கக் கூடாது உட்காரு!’ன்னு ஒருமையில கத்தினாங்க. ‘செய்யாத வேலையைச் செய்ததாச் சொல்லி ஒரு லட்சம் பில் போட்டிருக்கறது நியாயமா?’ன்னு கேட்டேன். அவ்வளவுதான்... மண்டலத் தலைவரும், கரூர் மாவட்ட தி.மு.க. இளைஞரணி செயலாளருமான சக்திவேல், ஆவேசமா எழுந்து, கெட்டவார்த்தைகளால திட்டிகிட்டே மைக்கை எடுத்துகிட்டு என்னைத் தாக்கறதுக்காகப் பாய்ஞ்சார். தி.மு.க. மத்திய நகரச் செயலாளர் கனகராஜும், மேற்கு நகரச் செயலாளர் கோல்டு ஸ்பாட் ராஜாவும் சக்திவேலைத் தடுத்து, என்னைக் காப்பாத்தினாங்க..எங்கே பணி நடந்துச்சுன்னு விளக்கம் கேட்டது தப்பா? இதுவரைக்கும் தமிழகத்துல பல மாநகராட்சிகள்ல அடிதடி ரகளையெல்லாம் நடந்திருக்கு. கரூர் மட்டும் எப்பவுமே அமைதியா இருக்கும். ஆனா இப்போ சக்திவேல் என்னை அடிக்கப் பாய்ஞ்ச சம்பவம் கரூர் முழுக்க பரபரப்பாகி இருக்கு.இந்த சம்பவத்துக்கு அப்புறம், சக்திவேலைப் பார்க்கற அதிகாரிகள், தி.மு.க.வினர் எல்லாரும் குனிஞ்சு வணக்கம் வைக்கிறாங்களாம். செந்தில் பாலாஜி இல்லாத கரூர்ல யார் கோலோச்சறதுங்கற உள்கட்சி கட்டா குஸ்தியில ஜெயிக்கறதுக்காக, என் மேலே இப்படிப் பாய்ஞ்சு தன்னோட கெத்தைக் காட்டியிருக்கார் சக்திவேல்!” என்றார்..இதுபற்றி சக்திவேலுவிடம் கேட்டோம். “அது ஏதோ ஒரு வேகத்துல நடந்து முடிஞ்ச பிரச்னை. அதைப்பற்றி கிளற வேண்டாம். செந்தில் பாலாஜி இடத்தைப் பிடிக்க நான் முயற்சி பண்ணலை. அவர் மீண்டும் வருவார், தூள் கிளப்புவார்” என்றார்.இதுபற்றி கரூர் தி.மு.க நகர பொறுப்பாளர் நம்மிடம், “ செந்தில் பாலாஜி இல்லாததால், கரூரில் அதிகாரம் செலுத்த அராஜகத்துடன் கூடிய பப்ளிசிட்டியை எதிர்பார்க்கிறார்கள். அதைத்தான் இப்போது சக்திவேல் செய்துகொண்டிருக்கிறார்” என்றார்.தலை இல்லா இடத்தில் ஆடும் வால்களை தலைமை உடனே நறுக்க வேண்டும்!