`தடி எடுத்தவன் எல்லாம் தண்டல்காரன்' என்ற கதையாக, செந்தில் பாலாஜி இல்லாத கோவையில் உடன்பிறப்புகளின் ஆட்டம் அத்துமீறிச் செல்வதால், அதற்குக் கடிவாளம் போட மீண்டும் நம்பர் விளையாட்டை அறிவாலயம் கையில் எடுத்திருப்பதால் கதிகலங்கிப் போயுள்ளது, கோவை தி.மு.க.விஷயம் இதுதான்... கொங்கு மண்டலத்தில் தி.மு.க. கொஞ்சம் வீக்காக இருக்கிறது என்பது பொதுவான விமர்சனம். அதிலும், அதன் தலைநகரான கோவை மாவட்டத்தில் கடந்த சட்டசபைத் தேர்தலில் தி.மு.க கூட்டணியே வாஷ் அவுட் ஆனது. இதனால் சில பரிசோதனை முயற்சிகளுக்குப் பின் அமைச்சர் செந்தில் பாலாஜியை பொறுப்பு அமைச்சராக நியமித்தார், ஸ்டாலின். செந்தில் பாலாஜியின் சில செயல்பாடுகளால் கோவை மாவட்டத்தில் தி.மு.க. தம் கட்டி எழுந்து நின்றதாக ஒரு தோற்றம் உருவானது.`இந்த எழுச்சி உண்மையா அல்லது மாயையா?' என்ற உண்மை வெளிவருவதற்குள் செந்தில் பாலாஜியை புழல் சிறைக்கு பார்சல் செய்தது, அமலாக்கத்துறை. இதனால், டேக் ஆஃப் ஆன விமானம் சட்டென லேண்ட் ஆனதுபோல மாறியது, கோவை தி.மு.க. நிலவரம். நாடாளுமன்ற தேர்தல் நெருங்கும் நிலையில் கட்சியின் நிலையை சீர்செய்யும் வகையில் மாவட்ட செயலாளர்களின் எண்ணிக்கையை மூன்றில் இருந்து ஐந்தாக மாற்ற தலைமை முடிவெடுத்துள்ளதாக உடன்பிறப்புகள் மத்தியில் பேச்சு நிலவுகிறது.`இதில், யாருக்கெல்லாம் மாவட்ட செயலாளர் வாய்ப்பு... யாருக்கெல்லாம் கல்தா?' என்பதுதான் உடன்பிறப்புகள் மத்தியில் ஹாட் டாபிக்காக வலம் வருகிறது..`என்ன நடக்கிறது?'' என கோவை மாவட்ட தி.மு.க. துணைச் செயலாளர்கள் இருவரிடம் பேசினோம். “அமைச்சர் செந்தில்பாலாஜி மீது ஆயிரம் விமர்சனங்கள் இருக்கலாம். ஆனால், கோவையில கட்சியை நல்ல நிலைமைக்குக் கொண்டு வந்தார். கோவை மாநகராட்சி தேர்தலிலும் ஈரோடு கிழக்கு இடைத்தேர்தலிலும் தி.மு.க. கூட்டணியை ஜெயிக்க வைச்சார்.தவிர, நாடாளுமன்ற தேர்தலில் அ.தி.மு.க-பா.ஜ.க. கூட்டணியை கோவையில கதறவிடறதுக்கும் பல டெக்னிக்குகளை வச்சிருந்தார். அதுக்குள்ளே அவரை டார்கெட் பண்ணி முடக்கிட்டாங்க. இப்ப அவர் இல்லாததால கோவை மாவட்ட தி.மு.க.வும் முடங்கிக் கிடக்குது. ஏற்கனவே கோவையை மூன்று மாவட்டங்களா பிரிச்சு அதை மூன்று பேர் கையில கொடுத்து வெச்சிருக்குது தலைமை.இந்த மூன்று பேர்ல முன்னாள் எம்.எல்.ஏ. கார்த்திக் மட்டும்தான் அனுபவரீதியான அரசியல்வாதி. இதர மாவட்ட செயலாளர்களான முருகேஷும் ரவியும் செந்தில் பாலாஜியால் நியமிக்கப்பட்டு, அவரின் கண்ணசைவில் இயங்கி வந்தவங்க. இப்ப செந்தில் பாலாஜி இல்லாததால அவங்களால கட்சியை கண்ட்ரோல் பண்ண முடியலை. போதுமான வளர்ச்சியையும் காட்ட முடியலை. அவங்க இருக்கும் ரெண்டு மாவட்டங்களிலும் அ.தி.மு.க. எகிறியடிக்க ஆரம்பிச்சிடுச்சு. தி.மு.க நிர்வாகிகள் பலரும் அ.தி.மு.க.வுடன் அண்ட் கோ போட்டுகிட்டு குவாரியில இருந்து பல பிசினஸ்களை செஞ்சுட்டு வர்றாங்க.மாவட்ட செயலாளராக இருக்கும் கார்த்தியின் தலையும், தலைமையை விமர்சிக்கிற ஒரு ஆடியோ விவகாரத்தில் உருட்டப்பட்டது. அவர், அதுக்கு எதிராக போலீஸ்ல புகார் கொடுத்துட்டு உட்கார்ந்திருக்கார். இதுக்கு இடையில கோவை மேயர் கல்பனா மேலே அவங்க எதிர்த்த வீட்டு பொண்ணு புகார் கொடுக்க, மேயரோ அதை மறுத்துட்டு உட்கார்ந்திருக்காங்க. இப்படி எங்கே திரும்பினாலும் நிர்வாகிகளை சுற்றி ஏகப்பட்ட பிரச்னைகள்.இதேநிலையில போனால், நாடாளுமன்ற தேர்தலில் கட்சி கவுந்துடும்னு சொல்லித்தான் இப்ப நிர்வாக வசதிக்காக பத்து சட்டசபை தொகுதிகள் கொண்ட கோவை மாவட்டத்தை கட்சிரீதியாக ஐந்து மாவட்டங்களாக பிரிக்க இருக்காங்க. ஒரு நபருக்கு இரண்டு சட்டசபைகள்னு ஐந்து பொறுப்பாளர்களை உருவாக்கப் போறாங்க..`இந்த ஐந்து பேருமே புதிய நபர்களா அல்லது ஏற்கனவே இருக்கும் 3 பேரின் தலை தப்புமா அல்லது அதுல ரெண்டு பேர் நிச்சயம் அவுட்டுன்னு சொல்றது உண்மையா?'ன்னு பெரிய பட்டிமன்றமே போயிட்டிருக்குது. ஆனா ஒண்ணு ஏற்கனவே கோவை மாவட்ட கழகத்தை ஒன்று, இரண்டு, மூன்று, ஐந்துன்னு பலவகையில பிரிச்சு பார்த்தும் பருப்பு வேகலை. இப்ப மூன்றை மறுபடியும் ஐந்தாக மாத்த இருக்கறதா சொல்றாங்க. நம்பர்களை அதிகமாக்குறதுல எந்த மேஜிக்கும் இல்லை. வலுவான நபர்களைப் போட்டால்தான் கட்சி விளங்கும். இதை தலைமை என்னைக்கு புரிஞ்சுக்குமோ?” என்கிறார்கள்.``கோவை தி.மு.க. பிரிக்கப்பட இருக்கிறதா?'' என்று அதன் புதிய பொறுப்பு அமைச்சர் முத்துசாமியிடம் கேட்டபோது, “கோவை மாவட்டத்தில் கழகம் சிறப்பாகவே இருக்கிறது. தேர்தல் நெருக்கத்தில் இன்னும் வலுவாக மாறும். மாவட்ட கழகத்தில் மாறுதல் தேவையா என்பதெல்லாம் தலைவர் எடுக்கும் முடிவு” என்று முடித்தார்.கண்ணாடியை திருப்புனா வண்டி ஓடுமா மொமன்ட்!-எஸ்.ஷக்தி