‘புதுச்சேரிக்கு மாநில அந்தஸ்து வேண்டும்’ என்பது அம்மக்களின் ஐம்பது ஆண்டுகால கோரிக்கை. அரசியல்ரீதியாக அவ்வப்போது எழுந்து அடங்கும் இந்தக் கோரிக்கைக்கு மீண்டும் உயிர் கொடுக்கக் கிளம்பியிருக்கிறார், முதல்வர் ரங்கசாமி.இந்தியாவுக்கு 1947-ல் சுதந்தரம் கிடைத்தது என்றாலும் பிரெஞ்சு ஆட்சியின்கீழ் இருந்த புதுச்சேரிக்கு 1954ல்தான் சுதந்தரம் கிடைத்தது. அதன் பின், 1970-ம் ஆண்டிலிருந்தே யூனியன் பிரதேசமான புதுச்சேரிக்கு மாநில அந்தஸ்து வேண்டும் என்ற கோரிக்கை எழுந்து வருகிறது.ஒவ்வொரு காலகட்டத்திலும் வெவ்வேறு அரசியல் கட்சிகளால் எழுப்பப்படும் இக்கோரிக்கை, அதன்பின்னர் ஆறிய பழங்கஞ்சியாக அப்படியே மறக்கடிக்கப்பட்டுவிடும்.இந்நிலையில் கடந்த 16-ம் தேதி புதுச்சேரி அரசு சார்பில் புதுச்சேரி அதிகாரப் பரிமாற்ற நாள் விழா கம்பன் கலையரங்கத்தில் நடைபெற்றது. அப்போது பேசிய தி.மு.க. எம்.எல்.ஏ. அனிபால் கென்னடி, ‘மத்திய அரசுக்கு அழுத்தம் கொடுத்து, புதுச்சேரிக்கு மாநில அந்தஸ்தை முதல்வர் ரங்கசாமி பெற்றுத்தர வேண்டும்’ என்று கோரிக்கை வைத்தார்.இதற்குப் பதில் அளித்துப் பேசிய முதல்வர் ரங்கசாமி, ‘இதுகுறித்து பிரதமர் மோடியை நேரில் சந்தித்துப் பேசி, கோரிக்கையை நிறைவேற்ற பாடுபடுவேன்' என்றார்இவ்வளவு நாள் அமைதியாக இருந்த ரங்கசாமி, நாடாளுமன்றத் தேர்தலை மனதில் வைத்தே இப்படிக் காய் நகர்த்தியிருப்பதாகக் கூறப்படுகிறது. இதுகுறித்து, காங்கிரஸ் கட்சியின் சீனியர் தலைவரும் முன்னாள் முதல்வருமான நாராயணசாமியிடம் பேசினோம்.“காலம்காலமாக ரங்கசாமி இதையேதான் கூறி வருகிறார். முன்பு காங்கிரஸ் கட்சியின் முதல்வராக இருந்தபோதும் இதையே சொன்னார். 2011-ம் ஆண்டு தனிக்கட்சி ஆரம்பித்த அவர். 2014-ம் ஆண்டில் பா.ஜ.க.வோடு கூட்டணி வைத்தார். அப்போதெல்லாம் பா.ஜ.க. இதைக் கண்டுகொள்ளவேயில்லை..என்.ஆர்.காங்கிரஸ் – பா.ஜ.க. கூட்டணி அமைச்சரவை ஆட்சி, கடந்த இரண்டரை வருடங்களாக நடைபெற்று வருகிறது. இவ்வளவு நாள் வாய்திறக்காத ரங்கசாமி, தற்போது தேர்தல் வருவதையொட்டி புதுச்சேரி மக்களிடம் கண்ணாமூச்சி ஆடுவதற்காக இப்படி அரசியல் செய்கிறார்.ஆனால், 2024-ம் ஆண்டு காங்கிரஸ் கூட்டணி அரசு மத்தியில் அமைந்தவுடன் மூன்றே மாதத்தில் புதுச்சேரிக்கு சிறப்பு மாநில அந்தஸ்தை வழங்குவோம். சிறப்பு மாநில அந்தஸ்து என்றால் 90 சதவிகித மத்திய அரசின் மானியம் புதுச்சேரிக்குக் கிடைக்கும். மாநில அந்தஸ்து எவ்வளவு முக்கியமோ, அதுபோல நிதியும் முக்கியம்" என்றார்.அ.தி.மு.க. மாநிலச் செயலாளர் அன்பழகனோ, “தமிழ்நாட்டில் எம்.பி.பி.எஸ். உள்ளிட்ட பாடப்பிரிவில் அரசுப்பள்ளி மாணவர்களுக்கு 7.5 சதவீத இட ஒதுக்கீடு கிடைப்பதுபோல, புதுச்சேரி மாணவர்களுக்கும் கிடைக்க வேண்டும் என்றால் அதற்கு மாநில அந்தஸ்து அவசியம்” என்றார்.தேர்தல் பிரசாரம் ஸ்டார்ட்..! - பி.கோவிந்தராஜு