அண்ணாமலையின் பேச்சு, அ.தி.மு.க கூட்டணிக்கு வேட்டு வைக்கும்போதெல்லாம் அதை சரிசெய்யப் போராடுவதில் அக்கட்சியின் தேசிய மகளிரணித் தலைவர் வானதியை விஞ்ச வேறொருவர் இல்லை. எந்தக் கேள்வியை கேட்டாலும் யாருக்கும் பாதகமில்லாமல் பதில் சொல்வது அவரின் இயல்பு. அந்தவரிசையில், ``எம்.எல்.ஏ வானதி, எம்.பி சீட் கேட்பதாக தகவல் ஒன்று ரெக்கை கட்டிப் பறக்கிறதே?'' என்றோம்.``நாடாளுமன்ற உறுப்பினர் ஆகவேண்டும் என்று யார் வேண்டுமானாலும் ஆசைப்படலாம். எங்கள் கட்சியைப் பொருத்தவரை கட்சி மேலிடம் என்ன சொல்கிறதோ அதுதான் முக்கியம். அதைப் பின்பற்றித்தான் நாங்கள் அனைவரும் நடந்து வருகிறோம்."முன்னாள் முதல்வர் அண்ணாவை பற்றி அண்ணாமலை பேசிய பேச்சுக்கு அ.தி.மு.க கண்டனம் தெரிவித்துள்ளதே?கூட்டணிக் கட்சிகளுக்குள் சில நேரங்களில் கருத்து மோதல் ஏற்படுவது சகஜம்தான். ஆனால் அது கூட்டணியையோ, அவர்களுக்குள் உள்ள ஒற்றுமையையோ பாதிக்காது.பெரும் பொருட்செலவில் நடத்தப்பட்ட ஜி20 மாநாட்டு அரங்கு, மழைநீர் தேங்கி சகதியாக மாறியதால், `இதில் ஊழல் நடந்துள்ளது' என்று எதிர்க்கட்சிகள் குற்றம் சாட்டுகின்றனவே?ஜி 20 மாநாட்டால், உலக அரங்கில் இந்தியாவின் புகழ் உயர்ந்துள்ளது. இதற்கான முழு கிரெடிட்டும் பிரதமர் மோடியையே சேரும். மாபெரும் மாநாட்டில், `ஓரத்தில் பிளாஸ்டிக் டப்பா இருந்தது', `நாய் உள்ளே வந்துவிட்டது', `மழை நீர் தேங்கியது' என்றெல்லாம் எதிர்கட்சிகள் சொல்வதைப் பார்த்தாலே, குற்றம் சொல்வதற்கு அவர்களிடம் வேறு எதுவும் இல்லை என்று புரிந்துவிடும். ஒரு புது வீடு கட்டினாலே, அதில் சில குறைபாடு வருவது சகஜம்தான். அதைப் பிடித்துக்கொண்டு இவர்கள் செய்யும் அரசியல் அற்பமானது.ஜி 20 மாநாடு வெற்றி என்றால், அதேநேரத்தில் நடந்த ராகுல் காந்தியின் ஐரோப்பா பயணத்தை பா.ஜ.க விமர்சிக்க வேண்டிய அவசியம் என்ன?வெளிநாட்டுப் பயணங்களில் நம் நாட்டின் சமயச் சார்பின்மை, ஜனநாயகம் போன்றவற்றை விட்டுக்கொடுக்கும் வகையில் பேசுகிறார், ராகுல்காந்தி. டொக்லாம் எல்லையில் இந்தியாவுக்கும் சீனாவுக்கும் பெரும் பிரச்னை நடந்துகொண்டிருக்கும்போது, சீன தூதுவரை ராகுல்காந்தி ரகசியமாக சந்தித்துப் பேசியுள்ளார். ஆளும்கட்சியை விமர்சிப்பதற்கும் தாய்நாட்டை விமர்சிப்பதற்குமான அடிப்படை வித்தியாசம்கூட அவருக்குத் தெரியவில்லை. சர்ச்சைக்குரிய மனிதர்களைச் சந்தித்து சர்ச்சைக்குரிய வகையில் அவர் பேசியதாக தகவல் கிடைத்துள்ளது. அதையே பா.ஜ.க. எதிர்க்கிறது.`சனாதனம்’ விவகாரத்தை முன்வைத்து ‘இந்தியா’ கூட்டணியில் பிளவு ஏற்படுத்த பா.ஜ.க. முயற்சிப்பதாகச் சொல்கிறார்களே?அப்படி எந்த எண்ணமும் பா.ஜ.க.வுக்கு இல்லை. தமிழக மக்களுக்கு இந்து மதம் என்ற பெயர் தெரியும். இந்து மதத்துக்கு காலம்காலமாக உள்ள பெயர்தான், சனாதன தர்மம். இதில் ஒவ்வொரு காலகட்டத்திலும் சீர்திருத்தங்கள் நடந்துகொண்டே இருக்கிறது. ஒருவேளை தற்போது அதில் சாதி ஏற்றத்தாழ்வுகளை ஒழிக்கும் சீர்திருத்தம் தேவை என்றால், அதைப் பற்றி பேசியிருக்க வேண்டும். மாறாக, சனாதன ஒழிப்பு என்று பேசினால் அது இந்து மதத்தை அழிக்க வேண்டும் என்று பேசியதாகவே கருத முடியும். அதை தி.மு.க.வின் கூட்டணிக் கட்சிகள் ஏற்கிறதா? என்பதுதான் எங்களின் கேள்வி.வடமாநிலங்களில் சனாதன விவகாரத்தைப் பெரிதாக்கி பிரசாரம் செய்தும் இடைத்தேர்தலில் 4 தொகுதிகளில் பா.ஜ.க தோற்றுவிட்டதே?இடைத்தேர்தல் முடிவை மட்டும் வைத்து எந்தத் தீர்மானத்துக்கும் வரமுடியாது. தி.மு.க.வின் சனாதனம் பற்றிய விமர்சனம் எடுபடவில்லை என்றால், எதற்காக மம்தா பானர்ஜி மறுப்பு தெரிவிக்க வேண்டும்? அரவிந்த் கெஜ்ரிவால் மறுக்க வேண்டும்? சிவசேனா ஏன் எதிர்ப்பு தெரிவிக்க வேண்டும்? இந்த விவகாரம் நாடு முழுவதும் மக்களைக் கொந்தளிக்க வைத்துள்ளது என்பதே உண்மை.`இடைத்தேர்தல் முடிவுகள் ஐந்து மாநில சட்டமன்றத் தேர்தலில் எதிரொலிக்கும்' என்று காங்கிரஸ் கூறுகிறதே?நாடாளுமன்றத் தேர்தலை பிற தேர்தல்களோடு ஒப்பிடவே முடியாது. கடந்த 2019 நாடாளுமன்றத் தேர்தலுக்கு முன் ராஜஸ்தான், சத்தீஸ்கர், மத்திய பிரதேசம், கர்நாடகா ஆகிய மாநிலங்களில் நடந்த சட்டமன்றத்தேர்தலில் பா.ஜ.க தோல்வியடைந்தது. ஆனால், நாடாளுமன்றத் தேர்தலில் அதிக தொகுதிகளைக் கைப்பற்றி பா.ஜ.க அபார வெற்றிபெற்றது. வரும் நாடாளுமன்றத் தேர்தல் முடிவிலும் பிரதமர் மோடியே மீண்டும் ஆட்சியமைப்பார். தி.மு.க அரசு சொன்னபடி மகளிருக்கு ஊக்கத்தொகை கொடுக்கத் தொடங்கிவிட்டது. `ஆண்டுக்கு 2 கோடி வேலைவாய்ப்பை பிரதமர் மோடி ஏற்படுத்தினாரா?' என்ற விமர்சனம் எழுந்துள்ளதே?பிரதமர் மோடி, தனது தேர்தல் வாக்குறுதிகளில் சொல்லாததைக்கூட நிறைவேற்றியுள்ளார். பெண்களின் சுயவேலைவாய்ப்புக்காக கடன் வசதிகளை ஏற்படுத்திக்கொடுத்துள்ளார். இதனால் நாடு முழுக்க லட்சக்கணக்கான பெண்கள் பலனடைந்துள்ளனர். ஆத்ம நிர்பார் பாரத் திட்டம் மூலம் இந்தியாவை உற்பத்தி கேந்திரமாக மாற்றி பலருக்கு வேலைவாய்ப்பை வழங்கியுள்ளனர்.`பெட்ரோல், கேஸ் விலையை குறைப்போம், மின் கட்டணத்தை மாதா மாதம் வசூலிப்போம்' என்றெல்லாம் தி.மு.க சொன்னது? செய்தார்களா? ஏழைப் பெண்கள் திருமணத்துக்கு தாலி வழங்கும் திட்டத்தையே நிறுத்திவிட்டனர். அ.தி.மு.க அரசு பெண்களுக்கு இலவச ஸ்கூட்டியை வழங்கியது. அதையும் நிறுத்திவிட்டனர். இப்படி நல்ல திட்டங்களை நிறுத்திவிட்டு மாதம் 1000 ரூபாய் வழங்குவதால் என்ன பயன்? - அபிநவ்