அனைத்து வக்கீல்களும் மன்னிப்பார்களாக! ஒரு கதை சொல்வார்கள்... முப்பாட்டன் காலத்தில் இருந்து வக்கீல் தொழில் செய்துவந்த ஒரு குடும்பத்தில், ஐந்தாவது தலைமுறை இளைஞன், முதல் நாள் மாலை தன் பாட்டனாரிடம் சொன்னானாம், ”தாத்தா, தாத்தா, உங்கள் தாத்தா காலத்தில் இருந்து உங்களில் யாராலுமே முடித்து வைக்கமுடியாத அந்த சொத்து வழக்கை நான் இன்றைக்கு ஒரே நொடியில் தீர்த்து வைத்து விட்டேன்!”“அட ப்பாவி!” தலையில் அடித்துக்கொண்டாராம் தாத்தா. “அந்த வழக்கை நம்பித்தானே இத்தனை தலைமுறைகள் நமது குடும்பம் ஓடிக்கொண்டிருக்கிறது.”ஆளும் பா.ஜ.க-வுக்கு எப்போதெல்லாம் மதவாத பிரச்னைகளுக்கு உயிரூட்ட வேண்டிய அவசியம் தோன்றுகிறதோஅப்போதெல்லாம் அயோத்தி, ஜம்மு-காஷ்மீருக்கு சிறப்பு அந்தஸ்து, முஸ்லீம் விவாகரத்து சட்டம், பொது சிவில் சட்டம் என்று ஏதாவது ஒன்றை கையில் எடுக்கும். இது ஜனசங்கம் காலம் தொட்டுள்ள அரசியல் உத்தி.கடந்த ஒன்பது ஆண்டு காலத்தில், பிரதமர் மோடி அரசு முதல் மூன்று பிரச்னைகளுக்கு ஏதோ ஒரு விதத்தில் தீர்வு கண்டுவிட்டதுஇப்போது, மிஞ்சியிருப்பது பொதுசிவில் சட்டம்தான். இதையடுத்து, மக்களவைத் தேர்தலுக்கு ஓராண்டு இருக்கும்போது, தேர்தல் வெற்றிக்கு மோடி அரசின் சாதனைகளை விட்டுவிட்டு, இந்துத்வா கொள்கையை முன்னிறுத்த வேண்டிய கட்டாயம் மீண்டும் தோன்றி உள்ளதா என்ற கேள்வி எழுகிறது. அப்படியென்றால், அயோத்தியில் அவசரகதியில் கட்டப்படும் புதிய கோயில் என்னாயிற்று?பா.ஜ.க-வின் உள்குத்தில், மத்தியில் ஆளும் மோடி-அமித் ஷா இரட்டை தலைமையின் ஏகபோக உரிமையை, உத்திரப்பிரதேச முதலமைச்சர் யோகி ஆதித்யநாத் ஆட்டிப்பார்க்கிறார். மக்களவையில் மாநிலத்திற்குள் 80 இடங்களில் அவர் கடந்த தேர்தல் போன்று அதிக இடங்களை பா.ஜ.க.விற்கு வெற்றிபெற்று கொடுத்துவிட்டால், கட்சியின் உள்ளேயும் வெளியேயும் அவரது கை ஓங்கும்..முத்தலாக் விவாகரத்துஇந்த பின்னணியில், மத்திய அரசு மட்டுமே உரிமை கோர முடிந்த பொது சிவில் சட்டம் மோடி - ஷா கூட்டணிக்கு கைகொடுக்கும் என்ற எதிர்பார்ப்பு தொடங்கி உள்ளது. அது உண்மை என்றால், அதற்கு பின்னர் வரும் தேர்தல்களில் எல்லாம், பா.ஜ.க எந்த வைத்து வாக்கு கேட்கும்? முப்பாட்டன் காலத்தில் இருந்து வக்கீல் தொழில் செய்த குடும்பத்தின் கதைதானா?இதற்கு அப்பால் சென்று, பொது சிவில் சட்டம் தேவையா என்ற கேள்வி எழுந்தால், அது இல்லாமல் நாட்டில் எந்தவித சமூக குழப்பங்களோ அல்லது சட்டச்சிக்கல்களோ தோன்றிவிடவில்லை என்பதே உண்மை. என்றாலும், குறிப்பாக முத்தலாக் விவாகரத்து முறை முஸ்லீம் சமூகத்தை குறித்து ஒரு தவறான மதிப்பீட்டிற்கு காரணமாகிறது என்பதும் உண்மை. அதை மாற்றி மோடி அரசு புதிய சட்டத்தை நிறைவேற்றினாலும், அதன் செயல்பாடு குறித்து யாரும் கவலைப்படவில்லை என்பது வேறு விஷயம்.முஸ்லீம் விவாகரத்து சட்டம் நிறைவேற்றப்பட்ட பின்னர், இப்போது பொது சிவில் சட்டம் மூலம் என்ன சாதிக்கப்போகிறார்கள் என்று தெரியவில்லை. குடும்ப சொத்து குறித்த வாரிசு உரிமை போன்ற விஷயங்களிலும், தற்போதைய தேசிய சட்டங்கள் முஸ்லீம் மற்றும் கிறிஸ்தவ சமூகத்தினருக்கும் பொருந்தும் என்று வேண்டுமென்றால் புதிய நிலை எடுக்கலாம்.மனக்கிலேசம்பொது சிவில் சட்டம் குறித்து, தாய்க் கட்சியான ஜனசங்க காலம் தொடங்கி, பா.ஜ.க., உள்ளிட்ட இந்துத்வா அமைப்பினர் வரை அவர்களுக்கு பல்லாண்டுகளாக ஒரு மனக்கிலேசம் இருக்கிறது. அவர்களுடைய கோணத்திலிருந்து பார்த்தால், அதில் ஒருவித நியாயமும் இருக்கிறது. பெருவாரி இந்து நாட்டில், அந்த சமூகத்தினருக்கும் சொத்துரிமை, பாகப்பிரிவினை, விவாகரத்து போன்ற விஷயங்களை பல நூற்றாண்டு காலமாகவே மனு ஸ்மிரிதி போன்ற தர்ம சராஸ்திரங்கள் அறுதியிட்டு கூறி உள்ளன. உள்நாட்டு அரச பரம்பரையினர் மட்டுமல்ல, சுமார் ஆயிரம் ஆண்டுகள் ஆட்சி செய்த முஸ்லீம் மற்றும் ஆங்கிலேய அரசுகளும் அவற்றில் கை வைக்கவில்லை.ஆனால், சுதந்திரத்திற்கு பின்னர் நேரு அரசு அவற்றை மாற்றி அமைத்து, புதிய அரசமைப்பின் கீழ் புதிய சட்டங்களை நிறைவேற்றியது. பல்வேறு திருத்தங்களுடன் அந்த சட்டங்களே இன்றளவும் உள்ளன. இந்த பின்னணியில், பெருவாரி இந்துக்களுக்கு கலாசார ரீதியான சட்டங்கள் மறுக்கப்படும் போது, சிறுபான்மை இனத்தவர்களான முஸ்லீம் மற்றும் கிறிஸ்தவ சமூகத்தினருக்கு மட்டுமே ஏன் இந்த சலுகை, என்பதே கேள்வி..ஆனால், இவ்வாறு வாதம் அல்லது விதண்டாவாதம் செய்பவர்கள் ஒன்றை மறந்துவிடுகிறார்கள். இந்து மதத்தினருக்கு மட்டும் பொது சிவில் சட்டம் தோன்றாது இருந்திருந்தால் அன்று பழக்கத்தில் இருந்த மனு ஸ்மிரிதி போன்ற தர்ம சாஸ்திரங்களின் அடிப்படையில் இன்றளவும் தலித் சமூகத்தினர் அடிமைகளாகவே இருந்திருப்பர். முத்தலாக் இல்லை என்றாலும் பெண்ணுரிமை மறுக்கப்பட்டிருக்கும். இதுதான் தேவையா?இவற்றிற்கு அப்பால், உலகத்தில் வேறு எங்கும் இல்லாத வகையில், இந்தியாவில் மட்டுமே அனைவருக்கும் பொதுவான வருமான வரி சட்டத்தில்கூட குறிப்பிட்ட சமூகத்தினருக்கு சலுகைஇன்றும் தொடருகிறது. கடந்த காலத்திய கலாசாரத்தை பாதுகாக்கவும் இது உதவுகிறது என்றுகூட கூறலாம்.நமது நாட்டில், வருமான வரி சட்டத்தில் இந்து கூட்டுக் குடும்பத்தவர்களுக்கு சலுகைகள் உள்ளன. அத்தகைய கூட்டுக் குடும்பத்தின் தலைவர் மரணப்படுக்கையில் இருக்கும்போது, அடுத்த தலைமுறை ஆண்கள் ஒற்றுமையாக பாகப்பிரிவினை செய்துகொண்டதாக, அவரது கையெழுத்து இல்லாமலே அவரது மரணத்திற்கு பின்னர் அறிவித்து வரி சலுகைகள் பெறலாம்.இது போன்ற சலுகைகள் சிறுபான்மை சமூகத்தினருக்கு கிடைக்காது. ஏனென்றால் பரம்பரை சொத்து என்பது பெருவாரியாக உள்ள இந்துக்களுக்கே இப்போது அவ்வளவாக இல்லை. இன்னொரு பக்கம் கூட்டுக்குடும்ப அமைப்புகள் மெல்ல மெல்ல பழங்கதைகள் ஆகிக்கொண்டிருக்கின்றன என்ற நிலையில் அதற்கான வரிச்சலுகைகளால் யாருக்கு என்ன பயன்?அதிவேகமாக பயணிக்கும் இந்த நவீன உலகில், இதுபோன்று சமூக மாற்றங்களின் அடிப்படையில், மைனாரிட்டி சட்டங்களும் மாறும் சூழல் தானாகவே உருவாகும். அதுவரை நாடு காத்திருக்க முடியாதா என்பதே இப்போதைய கேள்வி.